Just In
- 46 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!
கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால், ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல்களில் கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவது பலருக்கும் வழக்கமான விஷயம்தான். ஆனால், நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

காலையில் காரை கிளப்பும்போது சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுப்பது சகஜம். டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட டீசல் கார்களை இயக்கும்போது இது அவசியம். ஆனால், சில வேளைகளில் 5 நிமிடங்கள் வரை சிலர் ஐட்லிங்கில் விட்டு வைக்கின்றனர்.

காலையில் எடுக்கும்போது சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஐட்லிங்கில் இருக்கும்போது, ஆக்சிலரேட்டரை அதிகமாக கொடுத்து எஞ்சின் சூடாக்கும் முறையையும் கைவிடுங்கள்.

சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு காரை கிளப்பி செல்லும்போது எஞ்சினுக்கு போதிய வெப்பம் கிடைக்கும்.

சிக்னல்களில் 15 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், கார் எஞ்சினை ஆஃப் செய்துவிடுங்கள். இரண்டு நிமிடங்கள் ஐட்லிங்கில் நிற்கும்போது விரயமாகும் எரிபொருளில் 1.2 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

சிக்னல்களில் ஆஃப் செய்து காரை ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருள் செலவாகும் என்ற கூற்றை மறந்துவிட்டு, இவ்வாறு செய்யுங்கள். இதனால், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

கார் எஞ்சினை15 வினாடிகளுக்கு மேல் ஐட்லிங்கில் விடும்போது ஏற்படும் எரிபொருள் செலவைவிட, எஞ்சினை ஆஃப் செய்து ஆன் செய்யும்போது குறைவான எரிபொருள் செலவே ஏற்படும்.

மேலும், எஞ்சினை ஸ்டார்ட் செய்வதைவிட, ஐட்லிங்கில் நிற்கும்போது எஞ்சின் பாகங்களில் அதிக தேய்மானம் ஏற்படும். இதனால், பராமரிப்பு செலவுகளும் அதிகரிக்கும்.

பொதுவாக ஒரு பயணிகள் வாகனமானது ஆண்டுக்கு 4.7 மெட்ரிக் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. இதுவே, கார் எஞ்சினை 10 நிமிடங்கள் வரை ஐட்லிங்கில் விடும்போது 453 கிராம் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.

கார் எஞ்சின் ஐட்லிங்கில் இருக்கும்போது, போதுமான வெப்பம் இருக்காது. இதனால், எரிபொருள் முழுமையாக எரிக்கப்படுவதில்லை. கார் எஞ்சினின் சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய பாகங்களில் எரிக்கப்படாத எரிபொருள் படிந்து, பாதிப்பு ஏற்படும்.

கார் உள்ளிட்ட வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக காற்று மாசுபடுவதால், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, நீண்ட நேரம் கார் எஞ்சினை ஐட்லிங்கில் விடும் பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள்.