கார் வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Written By:

வாழ்க்கையில் வீடு கட்டுவதற்கு அடுத்து பெரிய முதலீடாக இருப்பதால், எல்லோருக்கும் இந்த விஷயத்தில் அதிக குழப்பம் ஏற்படுவது இயல்பாக உள்ளது.

இந்த நிலையில், கார் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மனக்குழப்பங்களை தவிர்ப்பதற்கான பல வழிகாட்டு தகவல்களை வழங்கி இருக்கிறோம். அதில், இன்றைய செய்தித் தொகுப்பிலும் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

கார் வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள்

சில ஆண்டுகளுக்கு முன் வரை கார் வாங்குவோர் முக்கியமாக நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற, கைக்கு தோதான பட்ஜெட்டில் கார் தேர்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கார் வாங்கும் முடிவில் பல கூடுதல் விஷயங்களை மனதில் வைக்க வேண்டியது அவசியமாகி விட்டது.

01. பாதுகாப்பு அம்சங்கள்

01. பாதுகாப்பு அம்சங்கள்

காரில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக மேம்பட்டு விட்டன. டிசைன், பட்ஜெட், மைலேஜை பார்ப்பதற்கு முன்னர் இப்போது காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.

உயிர் காக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடலை தேர்ந்தெடுப்பது அவசியம். இன்றைய சாலை பாதுகாப்பு நிலையில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் உயிர் காக்கும் கருவியாக இருக்கும்.

02. பராமரிப்பு செலவு

02. பராமரிப்பு செலவு

கார் வாங்குவதற்கான முதலீடு திட்டம் தெளிவாக போட்டுவிட்டாலும், காருக்குண்டான வழக்கமான பராமரிப்பு செலவுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டி இருக்கும் என்பதை டீலரில் கார் வாங்குவதற்கு முன்னரே தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளவும்.

முதல் ஓர் ஆண்டிற்கு அதிக செலவு இருக்காது. ஆனால், அதனைத் தொடர்ந்து கார் பராமரிப்புக்காக தனி பட்ஜெட் போட வேண்டி இருக்கும்.

03. மைலேஜ்

03. மைலேஜ்

இந்தியர்களின் முதல் விஷயமே மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆம், பாதுகாப்பு அம்சங்களுக்கு அடுத்து, மார்க்கெட்டில் சிறந்த மைலேஜ் தரும் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதும் நல்லது.

ஏனெனில், தினசரி பயன்படுத்துபவர்களுக்கு எரிபொருள் செலவுக்கு அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.

04. நம்பகத்தன்மை

04. நம்பகத்தன்மை

நீண்ட கால பயன்பாட்டின்போது காரின் நம்பகத்தன்மை எவ்வாறு உள்ளது என்பதையும் பார்த்துக் கொள்வது அவசியம். ஜேடி பவர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுதொடர்பான ஆய்வுகளை ஆண்டுதோறும் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றை பார்த்துக் கொள்வதும் சரியான முடிவை எடுக்க வழிவகுக்கும்.

05. நடைமுறை பயன்பாடு

05. நடைமுறை பயன்பாடு

காருக்குள் இடவசதி, வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தவிரவும், பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் அதிக இடவசதி கொண்ட கார்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். இது கூடுதல் மதிப்பை பெற்றுத் தரும்.

டிசைன்

டிசைன்

காரின் மறு விற்பனை மதிப்பு மற்றும் மனதிற்கு நிறைவை தருவதில் காரின் டிசைன் முக்கிய விஷயமாக இருக்கிறது. எனவே, மார்க்கெட்டில் சிறந்த டிசைன் உடைய கார்களை தேர்ந்தெடுத்து வாங்குவதும் பலன் தரும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

தற்போது வரும் பட்ஜெட் கார்களில் கூட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்பது இன்றியமையாத விஷயமாகி விட்டது. இதில், இந்த சாதனத்தின் அளவு மிக முக்கிய விஷயமாக பார்த்துக் கொண்டு ஒப்பிட்டுக் கொள்வது அவசியம். இந்த சாதனத்தின் மூலமாக வழிகாட்டுத் தகவல்கள், பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும்.

 செயல்திறன்

செயல்திறன்

கார் எஞ்சின் திறன் எவ்வாறு இருக்கிறது என்பதும் முக்கியம். உங்களது பட்ஜெட்டை பொறுத்து கார்களின் விபரங்களை ஆன்லைனில் ஒருமுறை ஆய்வு செய்து கொண்டு முடிவு செய்வது பலன் தரும்.

விற்பனைக்கு பிந்தைய தேவை

விற்பனைக்கு பிந்தைய தேவை

கார் வாங்கும்போது பெரும்பாலான ஷோரூம்களில் நடந்து கொள்ளும் முறை வேறாக இருக்கும். ஆனால், கார் வாங்கிய பின்னர் அவர்களது சேவை தரம் மிகவும் பின்தங்கி இருக்கும். எனவே, விற்பனைக்கு பின் சிறந்த சேவை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சர்வீஸ் மையங்கள் இருக்கும் பிராண்டை தேர்வு செய்வதும் நல்லது.

கார் வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள்

பொதுவாக டாப் வேரியண்ட் கார்களை தேர்வு செய்து விடுங்கள். கார் பயணத்தை மிகவும் இனிமையாக்கும் என்பதுடன், மறு விற்பனையிலும் அதிக மதிப்பை பெற்றுத் தரும். டவுன் பேமண்ட் அதிகம் கட்டும் தேவை இல்லை.

மாதத் தவணையில் ஒன்றிரண்டு ஆயிரங்கள் மட்டுமே கூடுதலாக வரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு டாப் வேரியண்ட்டை தேர்வு செய்யவும்.

English summary
10 Things to consider when buying a new car.
Story first published: Monday, June 19, 2017, 13:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark