டயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்...!!

By Saravana

வாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர். காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர். அந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை அடுத்த ஸ்லைடிலும் தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

காற்றின் அழுத்தம்

காற்றின் அழுத்தம்

டயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

சரி எது?

சரி எது?

டயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதிகப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது. எனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.

வால்வு மூடி

வால்வு மூடி

ட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

சரி எது?

சரி எது?

ஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.

அதிக கிரிப்புக்கு...

அதிக கிரிப்புக்கு...

சிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

சரி எது?

சரி எது?

காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் இருக்கும் பட்டன்கள் தேய்மானம் அதிகரிக்கும். மேலும், பட்டன்களுக்கு இடையிலான இடைவெளி குறையும் என்பதோடு, தண்ணீர் எளிதாக வெளியேறாது என்பதால், அதிகம் வழுக்கும் வாய்ப்பு உள்ளது. மைலேஜும் குறையும்.

கோடை காலத்தில்...

கோடை காலத்தில்...

கோடை காலத்தில் டயரில் இருக்கும் காற்று விரிவடையும் என்பதால் சில பிஎஸ்ஐ வரை குறைவாக காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

சரி எது?

சரி எது?

டயரில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் அதிக உராய்வு காரணமாக வெப்பம் அதிகரிக்கும். இதனால், டயரின் சுவர்களில் பாதிப்பு ஏற்படும். கோடை காலங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட பிஎஸ்ஐ அளவிலேயே காற்று நிரப்புங்கள்.

குளிர்காலத்தில்...

குளிர்காலத்தில்...

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டயர்களில் குறைவான காற்றழுத்தம் இருந்தால், சிறப்பான கையாளுமை கிடைக்கும் என்று கருத்து நிலவுகிறது.

சரி எது?

சரி எது?

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக காற்றழுத்தம் இருப்பது நல்லது. வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்போது 2 பிஎஸ்ஐ வரை காற்றழுத்தத்தை கூடுதலாக வைக்க வேண்டும். இல்லையெனில் டயரின் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

டிரெட் அமைப்பு

டிரெட் அமைப்பு

உலர்வான தரைகளில் சிறப்பான கையாளுமைக்கு டிரெட் அமைப்பு மிக முக்கியமானதாக பலர் கருதுகின்றனர்.

சரி எது?

சரி எது?

டிரெட் அமைப்பை வைத்து காரின் கையாளுமையை நிர்ணயிப்பது கடினம். அதன் முக்கிய பயன்பாடு ஈரப்பதம் மிகுந்த சாலைகளில் செல்லும்போது, டிரெட்டுக்கு இடையிலான நீரை வெளியேற்றுவதற்காகவே கொடுக்கப்படுகிறது.

டயர் தரம்

டயர் தரம்

கைகளை வைத்து அழுத்தி பார்த்தே டயர் கடினமான கட்டமைப்பு கொண்டதா அல்லது மென்மையான கட்டமைப்பு கொண்டதாக என்று தெரிந்துகொள்ளலாம் என்பது பலரின் எண்ணம்.

 சரி எது?

சரி எது?

டயரின் மேற்புறத்தை வைத்து கடிமானதா அல்லது மென்மையானதா என்று கூற முடியாது. ஏனெனில், டயருக்குள் பல்வேறு அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.

குளிர்கால டயர்கள்

குளிர்கால டயர்கள்

பனிப்பொழிவு இல்லையெனில், பிரத்யேக அமைப்பு கொண்ட குளிர்கால டயர்கள் தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர்.

சரி எது?

சரி எது?

பனிபடர்ந்த சாலைகள், பனிப்பொழிவு மிகுந்த நேரங்களில் மட்டுமே பயன்படும் என்பது மடமை. வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்போது குளிர்கால டயர்களை பயன்படுத்துவதே நல்லது. அதன் டிரெட் அமைப்பும், விசேஷ ரப்பரும் சிறப்பான ரோடு கிரிப்பை தரும்.

ரேஸ் டயர்

ரேஸ் டயர்

ரேஸ் கார் மற்றும் பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களில் டிரெட் இல்லாததால் அதிவேகத்தில் செல்ல முடியும் என்ற நினைப்பு இருக்கிறது.

 சரி எது?

சரி எது?

ஃபார்முலா- 1 மற்றும் மோட்டோஜீபி பந்தயங்களுக்கான கார் மற்றும் பைக்குகளில் டிரெட் இல்லாத டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உலர்ந்த தரையில் சிறப்பான கையாளுமையை கொடுக்கும் என்பதாலேயே பயன்படுத்தப்படுகின்றன.

பராமரிப்பு

பராமரிப்பு

சர்வீஸ் விடும்போது காற்றின் அழுத்தத்தை பார்த்தால் போதுமானது என்று சிலர் நினைக்கின்றனர்.

சரி எது?

சரி எது?

உருளும்போது டயர்களில் இருந்து சிறிய அளவிலான காற்று வெளியேறும். எனவே, வாரம் ஒரு முறை டயர்களில் காற்றின் அழுத்தத்தை சரிபார்ப்பது நல்லது.

Most Read Articles
English summary
Tyres in a car is very important. However majority of car owners are clueless when it comes to maintenance and safety checks. Most of us don't even care about the tyres on our cars. Some owners on the other hand have strange ideas or rather lets just call it tyre myths.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X