‘ஹோலி’ பண்டிகையால் காரில் ஏற்படும் கறைகளில் இருந்து பாதுகாக்க 10 எளிய வழிகள்

ஹோலி கொண்டாட்டத்தின் போது கலர் பொடிகளால் கார்களில் ஏற்படும் கறையை போக்க சில எளிய வழிகளை தெரிந்துகொள்வோம்.

By Arun

வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் 'ஹோலி' பண்டிகை இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்நாளில் வண்ணப்பொடிகளை ஒருவர் மீ்து ஒருவர் தூவி தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். 'வசந்தத்தின் விழா' என அழைக்கப்படும் ஹோலி பண்டிகையானது, வடஇந்திய மக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

வண்ணப்பொடிகளை நீரில் கலந்து, அதனை மற்றவர்கள் மீது மட்டுமல்லாமல் கார், பைக்குகள் மீதும் தெளித்துவிடுகின்றனர். மனிதர்கள் மீது பட்டாலே கறை போவதற்கு நாள் கணக்கில் ஆகும் நிலையில், அது கார்கள் மீது பட்டால் என்னவாகும் என நினைத்து கொள்ளுங்கள். ஹோலி பண்டிகையால் கார்களில் ஏற்படும் கறையை

போக்க சில எளிய வழிகளை இங்கு தெரிந்துகொள்வோம்.

கார் கவர்

கார் கவர்

‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது வீண் வேலை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஹோலி கலர்களால் உங்கள் கார் பாதிப்படையாமல் தடுக்க முதல் வழி உங்கள் காரை கார் கவர் கொண்டு பாதுகாப்பாக மூடி வைப்பது தான்.

வேக்ஸ் கோட்டிங்

வேக்ஸ் கோட்டிங்

காருக்கு வேக்ஸ் எனப்படும் மெழுகு கோட்டிங் செய்வதன் மூலம், கலர் பொடிகளில் இருந்து காரின் பெயிண்டிங்கை பாதுகாக்கலாம். வேக்ஸ் கோட்டிங் கலரில் இருந்து மட்டுமல்லாமல் அல்ட்ரா வயலட் கதிர்களில் இருந்தும் காரின் பெயிண்டிங் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

டெஃப்லான் கோட்டிங்

டெஃப்லான் கோட்டிங்

வேக்ஸ் கோட்டிங் செய்வது சிறிது நாட்கள் தான் பாதுகாப்பு தரும், அதனை விடவும் சிறந்தது டெஃப்லான் கோட்டிங். இது வேக்ஸ் கோட்டிங்கை விடவும் விலை கூடுதலானது. இருந்தாலும் வேக்ஸை விடவும் மேம்பட்ட பாதுகாப்பை டெஃப்லான் கோட்டிங் அளிக்கும்.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

வெளிப்புறத்தை விடவும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது காரின் உட்புறத்திற்கு தான். எனவே டேஷ்போர்ட், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றை கவர் செய்வது கறை படிவதிலிருந்து காக்கும். மேலும், கால் மிதியடிகள் உபயோகிப்பதால் கறை காரில் படிவது தவிர்க்கப்படுகிறது.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

உங்கள் காரில் லெதர் சீட்கள் உள்ளது என்றால், லெதர் பாலிஷ் உபயோகிப்பதன் மூலம் சீட்களில் கறை படிவது தவிர்க்கலாம், லெதர் சீட் இல்லாதபட்சத்தில் சீட் கவர்களை உபயோகிக்கலாம்.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

டேஷ்போர்ட் உள்ளிட்ட பிளாஸ்டிக் ஏரியாக்களில் படிந்த கலர் கறையை, சோப் அல்லது ஷாம்பூ கொண்டு பிரஷ் செய்து போக்கிவிடலாம்.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

மேலும், ஹோலி கொண்டாட்டத்தின் போது உங்கள் கார் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தால், கண்ணாடி கதவுகளை மூடி வைப்பது நல்லது, கலர் நிரப்பப்பட்ட பலூன்களைக் கொண்டு எரிந்து விளையாடும் போது, அது கார் உட்புறத்தில் பாதிப்பு ஏற்படுத்தாமல் காக்கும்.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

உங்களால் போக்கமுடியாத கறை காரில் ஏற்பட்டு விட்டது என்றால் கவலைப்பட வேண்டாம், இதற்கென பிரத்யேக வாஷிங் சர்வீஸ் செண்டர்கள் உள்ளன. ஹோலி கொண்டாட்டங்களால் பல கார்கள் பாதிப்படைகின்றன. எனவே இதற்கு முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

பட்ஜெட் காரணமாக காரை வீட்டிலேயே சுத்தப்படுத்த எண்ணுபவர்கள், வீட்டிலேயே பயன்படுத்தும் சாதாரண சோப்பு, ஷாம்பு பயன்படுத்தியும் கறை போகவில்லை என்றால் காரில் கறை நீக்க உபயோகப்படுத்தப்படும் பிரத்யேக ஸ்டெயின் ரிமூவர்கள் வாங்கி பயன்பெறலாம்.

‘ஹோலி’ கலர்களால் உங்கள் கார் பாதிக்கப்படாமல் இருக்க

இது போல எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்றால் ஹோலி பண்டிகையன்று வாடகை கார் புக் செய்து பயன்படுத்தலாம்.

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ரேஞ்ச் ரோவர் வெலர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:

Most Read Articles
English summary
Simple tips and hacks to protect your car and bike this holi
Story first published: Monday, March 13, 2017, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X