ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

கடந்த நுாற்றாண்டில் பெரும் வளர்ச்சி பெற்ற ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சிக்கு சில கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தான் முக்கிய காரணம்.

கடந்த நுாற்றாண்டில் பெரும் வளர்ச்சி பெற்ற ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சிக்கு சில கண்டுபிடிப்புகளும் வடிவமைப்புகளும் தான் முக்கிய காரணம். அவைகள் குறித்த வரலாறையும் பயன்பாட்டையும் பற்றி இச்செய்தியில் பார்ப்போம்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

கடந்த 20ம் நூற்றாண்டில் உலகமெங்கும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி பெரும் இமயத்தையே எட்டியது என்று சொன்னால் மிகையாகாது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

பல்வேறு வளர்ச்சி பெற்று இன்று போக்குவரத்தை வெகு எளிதாக்கி இருக்கும் இந்த துறையின் வளர்ச்சிக்கு இந்த காலகட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் தொழிற்நுட்பங்களும் தான் காரணம்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இன்றளவும் நாம் அந்த தொழிற்நுட்பத்தையும் எந்திரத்தையும் மேம்படுத்திதான் வாகனங்களில் பயன்படுத்தி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளோம். இவ்வாறாக வளர காரணமாக இருந்த முக்கிய 20 விஷயங்களை இங்கு பார்ப்போம்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஸ்டீம் இன்ஜின்

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய கண்டுபிடிப்பு ஸ்டீம் இன்ஜின் தான். இதை 1775ம் ஆண்டு ஜேம்ஸ் வாட் என்பவர் கண்டுபிடித்தார். முதலில் கப்பல்களிலும் ரயில்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டீம் இன்ஜின்கள் 1800 மற்றம் 1900 முதல் பகுதிகளிலும் கார்களிலும் பயன்படுத்தப்பட்டன.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

அந்த கால கட்டத்தில் தான் சாலை வசதிகளும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. மேலும் எரிபொருட்களின் விலையும் குறைய துவங்கியது. இதனால் கார் பயன்படுத்துபவர்கள் அதிகமாகினர். கார்களின் விலையும் படிப்படியாக குறைய துவங்கியது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இன்டர்னல் கம்பஸன் இன்ஜின்

ஸ்டீம்களின் பிரஷர் மூலம் செயல்பட்டு வந்த இன்டர்னல் கம்பஸன் இன்ஜின் தொடர்ந்து எரிபொருளில் செயல்பட துவங்கியது 1864ம் ஆண்டுதான்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

1859ம் ஆண்டே நிக்கோலஸ் ஓட்டோ என்பவர் இந்த ரக இன்ஜினை கண்டு பிடித்தாலும் இதற்கான காப்புரிமையை 1864ல் தான் பெற்றார் அதன் பின்பே எரிபொருளில் செயல்படும் இன்ஜின் தயாரிக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஓட்டோ, டயாம்லர், மேபேட்ச் ஆகியோருடன் சேர்ந்து முதல் 4 ஸ்டோக் இன்ஜினை 1876ம் ஆண்டு தயார் செய்தனர். அதன் பின்னர் 1879ம் ஆண்டு தான் 2 ஸ்டோக் இன்ஜின் தயார் செய்யப்பட்டது. பென்ஸ் நிறுவனம் தனது முதல் வாகனத்தை 1886ம் ஆண்டு வெளியிட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஸ்டார்ட்டர் இன்ஜின்

முதலில் தயாரிக்கப்பட்ட கார்களின் கையால் சுற்றி இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் முறையில் தான் வடிவமைக்கப்பட்டது. கடந்த 1896ம் ஆண்டு அதற்கான முதல் வடிவம் தயாரிக்கப்பட்டது. அதற்காக முதலில் 1903 அமெரிக்காவில் காப்புரிமை வாங்கப்பட்டு 1911ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. 1912ம் ஆண்டு எலெட்ரிக் ஸ்டார்ட்டர் பொருத்தப்பட்ட கார் தயார் செய்யப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஆனாலும் அதன் மீது உள்ள நம்பிக்கையின்மை காரணமாக 1920ம் ஆண்டுகள் வரை பெரும்பாலும் கையால் சுற்றி ஸ்டார்ட் செய்யக்கூடிய இன்ஜின்களே பயன்படுத்தப்பட்டது. இதில் ஆச்சரியம் என்ன என்றால் 1990ம் ஆண்டுவரை விற்பனையில் இருந்த சிட்ரோயன் 2சிவி கார் கையால் சுற்றும் முறையிலேயே உருவாக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

டீசல் இன்ஜின்

எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக்க இன்று வரை பயன்படுத்தப்படும் ஒரு கண்டுபிடிப்பு என்றால் அது டீசல் இன்ஜின் தான். ரெடோல்ப் டீசல் என்பவர் இந்த கண்டுபிடித்தார். இது சாதாரண கார்களுக்கு எரிபொருளுக்காக ஆகும் செலவை 50 சதவீதம் வரை குறைத்தது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

கடந்த 1893ம் ஆண்டு கார்ல் பென்ஸ் என்பவர் டீசலிடம் டீசல் இன்ஜினின் காப்புரிமைக்கான பணத்தை கொடுத்து தனது பென்ஸ் கார்களில் அதை பயன்படுத்த துவங்கினார்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஆண்டி லாக் பிரேக்ஸ்

நவீன காலத்தில் கார் பைக் என எல்லா வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் (ஏபிஎஸ்) சிஸ்டத்தின் மாடல் 1908ம் ஆண்டே உருவாக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

முதன் முதலில் இது 1950களில் விமானங்களில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1970ம் ஆண்டுகளில் கார்களில் பயன்படுத்த துவங்கப்பட்டது. தற்போது பைக், ஸ்கூட்டர் என எல்லா வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இதற்கான காப்புரிமையை ஜெர்மன் நாட்டை சேர்ந்த இன்ஜினியர் 1928ம் ஆண்டு வாங்கினார். ஆனால் அந்த பிரேக்கை அவர் தயாரிக்க துவங்கவில்லை. 1950களில் இந்த தொழிற்நுட்பகம் அண்டி ஸ்கிட் சிஸ்டம் என்ற பெயரில் யூ.கே. ஜெட் ஏர்கிராப்ட் என்ற நிறுவனம் தனது விமானங்களில் பயன்படுத்த துவங்கியது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் கம்யூட்டரைஸ்டு ஏபிஎஸ்கள் 1971ல் வடிவமைக்கப்பட்டது. 1990களில் அது பயன்படுத்தப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஆட்டோ கியர்

1921ம் ஆண்டு தானியங்கியாக கியர் மாறும் தொழிற்நுட்பம் முதன் முதலில் வடிவமைக்கபப்டடு 1927ம் ஆண்டு அதற்கான முழுமையான காப்புரிமை வாங்கப்பட்டது. அல்ஃப்ரெட் ஹார்னர் மூன்ரோ என்ற கனடா நாட்டை சேர்ந்தவர் தான் இதை முதலில் வடிவமைத்தார். நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் மாடல்கள் 1940ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

அதன் பலன் என்பது இப்பொழுது தான் ஆட்டோ கியர் கார்களின் வருகை அதிகரித்துஇருக்கிறது. வரும் காலங்களில் ஆட்டோ மொபைல்துறையை முற்றிலுமாக இது ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

பவர் ஸ்டியரிங்

ஆட்டோ மொபைல் துறையின் அடுத்த முக்கிய கண்டுபிடிப்பு பவர் ஸ்டியரிங். இதற்கான பல்வேறு வடிவமைப்புகளுக்கு 1876,1902 மற்றும் 1904 ஆண்டுகளில் காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனால் எதுவும் தயாரிப்பு சாத்தியப்படவில்லை.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

1926ம் ஆண்டு தான் பிரான்ஸிஸ் டேவிஸ் என்பவர் தான் முதலின் பவர் ஸ்டியரிங்கை தயாரித்தார். தற்போது நாம் பயன்படுத்துவது அவர் தயாரித்ததன் மேம்பட்ட வடிவம் தான். 1951ம் ஆண்டுதான் பவர் ஸ்டியரிங் பொருத்தப்பட்ட முதல் கார் தயாரிக்கப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஏர் பேக்

ஆட்டோமொபைல் துறையில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்டுபிடிப்புகளில் முக்கியமனது இந்த ஏர் பேக் இது முதன் முதலில் 1950ம் ஆண்டு முழுவதும் ஊதப்பட்ட ஏர் பேக்கள் காரில் வைக்கப்பட்டு பட்டனை அழுத்தினால் வெளியே வருவது போல வடிவமைக்கப்பட்டது. அதன் மேம்பட்ட வடிவத்தை தான் தற்போது நாம் கார்களில் ஏர் பேக்காக பயன்படுத்துகிறோம். 1970களில் இது கார்களில் பயன்படுத்தப்பட்டாலும், 1990களில் தான் இதன் முழு பயன்பாடு அமலுக்கு வந்தது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஜி.பி.எஸ்.

1973ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இது முதலில் பயன்படுத்தப்பட்டது. முதலில் 24 செயற்கைகோள்களை வைத்து இது செயல்பட துவங்கியது. 1995ம் ஆண்டு தான் முழுமையான செயல்பாட்டை இது பெற்றது. எனினும் மக்கள் பயன்பாட்டிற்கு 1980களிலயே வந்து விட்டது. இன்று நாம் செல்போன், கார் என எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் தொழிற்நுட்பம் இது தான்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

கேட்டலிட்டிக் கர்வெர்டர்

வாகனத்தில் இருந்து வெளியேறும் புகைகளால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. இதை முதலில் 1930களில் கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனல் 1973ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 1975ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் வாகனத்தில் இருந்து வெளியேறும் மாசு பெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

சீட்பெல்ட்

1959ம் ஆண்டு வோல்வோ காரில் இந்த சீட் பெல்ட் முறை பயன்படுத்தப்பட்டது. இது இரண்டு பாயிண்ட் சீட் பெல்ட் தான் ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது நடக்கும் விபத்துக்களில் இந்த சீட் பெல்டும் பெரிதாக பயன்தரவில்லை.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இதை தொடர்ந்து 3 பாயிண்ட் சீட் பெல்ட் பயன்படுத்தப்பட்டது. அதாவது உடம்பில் ஒருபுறத்தின் மேல் பகுதியில் இருந்து மறுபுறத்தின் கீழ் பகுதிவரையும் அதேபோல் அடி வயிற்று பகுதியிலும் இருக்கும் வண்ணம் சீட் பெல்ட் பயன்படுத்தப்பட்டது. இந்த கண்டு பிடிப்பு தற்போது ஆண்டிற்கு 11,000 உயர்களை பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஹைபிரிட் டிரைவ் டிரையின்

1998ம் ஆண்டு டெயோட்டோ நிறுவனம் ஹைபிரிட் டிரைவ் டிரைன் இன்ஜின் கொண்னு பிரியூஸ் என்ற காரை முதன் முதலில் வடிவமைத்தது. இது 1.5 லிட்டர் கேஸ் இன்ஜின் கொண்டது. தற்போது பல நிறுவனங்கள் ஹைபிரட் காரை வடிவமைத்து வருகின்றனர்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்

இ.எஸ்.சி. எனப்படும் இக்கருவி முற்றிலும் எலெக்ரானிக்கால் இயங்ககூடியது. காரை வேகமாக செல்லும் போது பிரேக் பிடித்தால் ஸ்டிக் ஆகாத வகையில் கார் செல்லும் ரோடு எந்த மாதிரியானது. என்பதை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வீலுக்கும் அதற்கு தகுந்த பிரேக்கை வழங்க கூடியது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இது தற்போது ஏ.பி.எஸ் உடனேயே வருகிறது. இது முதன்முதலில் 1990களில் பென்ஸ், பிஎம்டபிள்யூ ரக கார்களில் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2011 முதல் பல நாடுகளில் இக்கருவி கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஆன் போர்டு டயகனஸ்டிக் 2

இது காரின் உதிரி பாகங்களின் திறனை கணக்கிடக்கிட கூடியது. காரில் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என இது துள்ளியமாக கண்டு பிடித்து விடும். ஆனால் இது அங்கீகரிக்கப்படாத டீலர்கள் மற்றம் இன்ஜின் பெர்மாமென்ஸை டியூன் செய்ககூடியவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இது முதன் முதலில் 1980ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

டுயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்

இது ஒரு வகை ஆட்டோகியர் தான். ஆட்டோ கியரில் கியரை மாற்றுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். இது விரைவாக கியரை மாற்றிவிடும். மேலும் மேனுவலாக கியரை மாற்றுவதை விட இது எளிது. இது முதன் முதலாக 2003ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. தற்போதும் லாம்போகினி, பென்ஸ் கார்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

ஸ்மார்ட் சாவி

காரில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வந்த காலம் முதல் கீ தான் பயன்படுத்தப்படுகிறது. அதன் வடிவம் தான் வேறு வேறு விதமாக வந்த நிலையில் தற்போது காரை ஸ்டார்ட் செய்வதற்கு பட்டன் வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகும் பெரும்பாலான கார்களில் இந்த வகை பட்டன்கள் தான் வெளியிடப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

டர்போ சார்ஜ் இன்ஜின்கள்

இது வழக்கமான இன்ஜினில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான பெட்ரோலையும், காற்றையும் உள்ளே வாங்க கூடியது. இதன் மூலம் சிறிய ரக இன்ஜினும் அதிக திறனை வெளிப்படுத்த முடியும். இதற்கான காப்புரிமை கடந்த 1905ம் ஆண்டு அல்பரெட் புச்சி என்ற சுவிஸ்நாட்டு இன்ஜினியரால் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் காரின் இன்ஜின் சைஸை குறைத்து டர்போ சார்ஜ் தொழிற்நுட்பத்திற்கு மாறி வருகின்றனர்.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

திரும்பும் போது சிக்னல் செய்யும் கருவி

இது சாதாரண ஒரு கருவி தான் என்றாலும் இதன் முக்கியதுவம் என்பது மிக உயர்ந்தது. நாம் செல்லும் போது நமக்கு முன்னாள் மற்றும் பின்னால் வருபவர்களுக்கு சிக்னல் செய்ய இது பெரிதும் உதவுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

இது நிமிடத்திற்கு 60 முதல் 120 முறை அனைந்து அனைந்து எரிய கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. முதலில்அதற்காக தெர்மல் இன்டரப்டர் பயன்படுத்ப்பட்டது தற்போது டிரான்ஸிஸ்டர் சார்க்யூட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

ஆட்டோ மொபைல் துறையை வளர செய்த டாப் 20 கண்டுபிடிப்புகள்

க்ரூஸ் கண்ட்ரோல்

இது 1940ம் ஆண்டு ரெல்ப் டீட்டர் என்பரால் வடிவமைக்கப்பட்டது. இது 1950ம் ஆண்டு முதல் கார்களில் பயன்படுத்தப்பட்டது. இது தான் டிரைவர்கள் இல்லாமல் கார்களை இயக்கும் தொழிற்நுட்பத்திற்கு முதல் படியாக அமைந்துள்ளது. 2000வது ஆண்டில் ரேடாருடன் விடிவமைக்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் அந்த தொழிற்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
20 Greatest Innovations And Inventions of Automobile Engineering: From the First Engine to Today. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X