டொயோட்டாவின் மார்க்கெட்டை மொத்தமா புரட்டி போட போகும் 3 கார்கள்! 2026இல் நிறைய சம்பவம் காத்துக்கிட்டு இருக்கு!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக அறிமுகம் செய்ய பல புதிய கார் மாடல்களை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த 2026ஆம் ஆண்டிற்குள் மூன்று புதிய டொயோட்டா கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் ஒன்று இந்த மார்ச் மாதத்தில் மார்க்கெட்டிற்கு வருகிறது. அவை என்னென்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா (Urban Cruiser Ebella): இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை டொயோட்டா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மார்ச் மாதத்தில் இந்திய சந்தைக்குவர உள்ள டொயோட்டா கார் இதுவே ஆகும். இந்தியாவில் பல டொயோட்டா கார்கள் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

அந்த வகையில், புதிய இபெல்லாவும் மாருதி சுஸுகியின் இ-விட்டாரா (e-Vitara) எலெக்ட்ரிக் கார் அடிப்படையிலானது ஆகும். ஐரோப்பிய எலெக்ட்ரிக் கார்களை போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த டொயோட்டா காரின் முன்பக்கம் மெல்லியதான ஹெட்லேம்ப்கள் மற்றும் சமீபத்திய டொயோட்டா கார்களை போன்றதான சுறாவின் தலை போன்றதான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (New Urban Cruiser Hyryder): 2022ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை அப்கிரேட் செய்ய டொயோட்டா தயாராகி வருகிறது. இதன்படி, புதிய பம்பர்கள், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் டிசைன் மாற்றப்பட்ட முன் & பின்பக்க விளக்குகள் உடன் புதிய முன் & பின்பக்கத்தை இந்த கார் பெற உள்ளது.

இவற்றுடன், உதைப்பது மூலமாக ஆக்டிவேட் செய்யக்கூடிய பின்பக்க கதவு, காருக்குள் பவர் முன் இருக்கைகள், டாஷ்போர்டில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்டவையும் புதியதாக சேர்க்கப்படலாம். இவை தவிர்த்து, மெக்கானிக்கல் மாற்றங்கள் பெரியதாக இருக்காது. இதன் அறிமுகத்தை 2026 செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக எதிர்பார்க்கிறோம்.
புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் (New-gen Fortuner): இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஃபார்ச்சூனர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த காருக்கு அவ்வப்போது அப்கிரேட்களை மறக்காமல் வழங்கிவிடும் டொயோட்டா நிறுவனம், அந்த வகையில் இந்த ஆண்டிற்குள் மூன்றாம் தலைமுறை ஃபார்ச்சூனரை அறிமுகப்படுத்த உள்ளது.

தாய்லாந்து நாட்டில் ஏற்கனவே சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் 3ஆம் தலைமுறை ஃபார்ச்சூனர் இந்த 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட வெளிப்புறம் மற்றும் உட்புறத்துடன் வரும் புதிய ஃபார்ச்சூனரில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் டொயோட்டா சேஃப்டி சென்ஸ்-3 தொகுப்பின் ADAS உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாக இந்தியா விளங்குகிறது. அதற்கேற்ப டொயோட்டா கார்களின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் இந்திய சந்தையில் அதிகரித்து வருகிறது. இதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் உதவி முக்கியமானதாக உள்ளது என்றாலும், டொயோட்டா அதேநேரம் ஏற்கனவே விற்பனையில் உள்ள தனது கார்களையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பிரபலமான ஃபார்ச்சூனர் காரை டொயோட்டா அப்கிரேட் செய்வது அதன் விற்பனையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், டொயோட்டா வழக்கம்போல் மார்க்கெட்டில் வரவேற்பை பெற்ற மாருதி சுஸுகி கார்களை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் அறிமுகம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. முக்கியமாக, இ-விட்டாரா அடிப்படையிலான இபெல்லா எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் டொயோட்டாவிற்கு இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் கவனத்தை பெற்றுத்தரும்.


Click it and Unblock the Notifications









