ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

லக்ஸரி கார்களில் இருக்கும் பல வசதிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். இந்த வசதிகள் எல்லாம் நமது சாதாரண பட்ஜெட் காரில் இல்லையே என நம்மை ஏக்கமடைய வைக்கும்.

By Arun

லக்ஸரி கார்களில் இருக்கும் பல வசதிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். இந்த வசதிகள் எல்லாம் நமது சாதாரண பட்ஜெட் காரில் இல்லையே என நம்மை ஏக்கமடைய வைக்கும். ஆனால் ஒரு லக்ஸரி காரில் இருக்கும் பல வசதிகளை, மிகவும் மலிவான விலையில், நமது காரிலும் ஏற்படுத்தி கொள்ள முடியும். நேரடியாக லக்ஸரி கார்களை வாங்குவதை காட்டிலும் இதற்கான செலவு பல மடங்கு குறைவே. அத்தகைய ஆக்ஸஸரிஸ் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

ஹெட்ஸ் அப் டிஸ்பிளே

விலை- 1,475 ரூபாய் முதல்

ஹெட்ஸ் அப் டிஸ்பிளே (HUD) ஆப்ஷன் வழங்கும் வசதியை அனுபவிக்க உங்களிடம் லக்ஸரி கார்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெறும் 2,000 ரூபாய்க்குள் இந்த வசதியை, எந்த ஒரு சாதாரண காரிலும் இன்ஸ்டால் செய்ய முடியும்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

HUD யூனிட்டானது, காரின் டேஸ்போர்டில் நீங்கள் பெறும் அனைத்து தகவல்களையும், காரின் விண்டுஷீல்டில் அப்படியே காட்டும். எனவே சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே, காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை உங்களால் பார்க்க முடியும்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சீட் மசாஜர்

விலை- 2,000 ரூபாய் முதல்

மெர்ஸிடெஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற மிகவும் விலை உயர்வான லக்ஸரி கார்களில், சீட் மசாஜர் வசதி இருக்கும். இதன் பலன் அதிகமாக இருந்தாலும், விலை மிகவும் குறைவுதான்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சீட் மசாஜரை இயக்க 12V எலக்ட்ரிக் சாக்கெட் மட்டும் இருந்தால் போதுமானது. இதுவும் கூட மலிவான விலையில் கிடைக்கிறது. மிக நீண்ட நேர உழைப்பிற்கு பிறகு, காரில் உள்ள சீட் மசாஜரை இதமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

போர்ட்டபிள் பிரிட்ஜ்

விலை- 3,900 ரூபாய் முதல்

காரில் பயணிக்கும் பெரும்பாலானோர், கூல்டிரிங்ஸ்களை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவர். போர்ட்டபிள் பிரிட்ஜ் வசதியை உங்கள் காரில் ஏற்படுத்தி கொள்வதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். வெயில் கால பிரச்னைகளையும் இதன்மூலம் சமாளிக்கலாம்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

இந்த சிறிய போர்ட்டபிள் பிரிட்ஜை உங்கள் காரின் எந்த பகுதியில் வேண்டுமானாலும், பொருத்தி கொள்ள முடியும். இதற்கும் கூட 12V எலக்ட்ரிக் சாக்கெட் மூலம் பவர் கொடுக்கலாம். இதில், சிறிய கேன்கள் மற்றும் சில கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வைத்து கொள்ளலாம்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சில கார்களில் கூல்டு க்ளவ்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் போர்ட்டபிள் பிரிட்ஜ் அளவிற்கு அவை, அட்டராக்டிவ்-ஆக இருக்காது.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

360 டிகிரி கேமரா

விலை- 29,900 ரூபாய் முதல்

360 டிகிரி கேமராவும் கூட ஒரு சில விலையுயர்ந்த கார்களில் மட்டுமே இருக்கும் வசதிதான். ஆனால் சுமார் 30,000 செலவழித்தால் எந்த காரிலும், இந்த வசதியையும் ஏற்படுத்தி விட முடியும். இதன் 4 கேமரா சிஸ்டமானது, சுற்றுப்புறத்தின் பேர்டு ஐ வியூ-வை வழங்கும்.

 ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

மிகவும் நெருக்கமான இடங்களில் காரை பார்க் செய்பவர்களுக்கு இந்த வசதி பேருதவி செய்யும். சுற்றுப்புறத்தின் வியூ சரிவர தெரியாமல் சிரமப்படும் கார்களின் உரிமையாளர்களுக்கும் 360 டிகிரி கேமரா வசதி பயன்படும்.

Most Read Articles
English summary
4 ways to make a BUDGET car feel like a LUXURY car. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X