உங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

தற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், கார் இன்ஜின் விரைவில் செயலிழந்து போகும்.

By Arun

தற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், உங்கள் கார் இன்ஜின் விரைவில் அழிவை சந்தித்து விடும் அபாயம் உள்ளது. எனவே கார் இன்ஜின் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

டேக்கோமீட்டரில் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்...

இன்றைய சூழலில் பெரும்பாலான கார்களில் டேக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் டேஷ்போர்டில் ஸ்பீடோமீட்டருக்கு அடுத்து டேக்கோமீட்டர் இருக்கும். காரின் ஆர்பிஎம்-ஐ டேக்கோமீட்டர் கணக்கிடும். டேக்கோமீட்டரில் சிகப்பு நிற கோடு மற்றும் முள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

அந்த முள், சிகப்பு நிறத்தை தொட்டால், கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது இன்ஜின் அதிவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக நீண்ட தூரத்திற்கு சிவப்பு நிற கோட்டிலேயே காரை செலுத்தி கொண்டிருப்பது தவறானது.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

இவ்வாறு செய்வதனால், இன்ஜின் மற்றும் டர்போசார்ஜர் (ஒரு வேளை உங்களிடம் டர்போசார்ஜ்டு மோட்டார் இருந்தால்) ஆகியவை விரைவில் சூடாகிவிடும். இன்ஜினின் வாழ்நாள் குறைய இது மிக முக்கியமான காரணம். எனவே அடிக்கடி சிகப்பு நிற கோட்டை தொட்டு கொண்டு காரை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

இன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பாருங்கள்...

கார் இன்ஜினின் முக்கியமான பகுதிகள் வேலை செய்ய இன்ஜின் ஆயில் அவசியமானது. கார் உற்பத்தியாளர் அல்லது மெக்கானிக் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் பரிந்துரைக்கும் தரத்திலான இன்ஜின் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

குறைவான இன்ஜின் ஆயிலுடன் காரை ஓட்டி கொண்டிருந்தால், இன்ஜின் ஆயுள் வெகு வேகமாக குறைந்துவிடும். எனவே இன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

ஸ்னோர்கெல் பொருத்தி கொள்ளுங்கள்...

காரின் இன்ஜினிற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரிகளில் தண்ணீரும் ஒன்று. காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஆறு போன்ற நீர் நிலைகளை காரில் கடப்பவர்கள், ஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து கொள்வது சிறந்தது.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

ஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து விட்டால், காரின் ஏர் இன்டேக் சிஸ்டம் வழியாக, இன்ஜினிற்குள் தண்ணீர் புகும் அபாயம் வெகுவாக குறைந்து விடும். காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருந்தாலும் கூட, ஸ்னோர்கெல் பொருத்தி கொள்வதுதான் நல்லது. குறிப்பாக ஆப் ரோடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஸ்னோர்கெல் மிகச்சிறந்த ஆக்ஸஸரிஸாக விளங்கும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

குளிர்காலங்களில் இதனை பின்பற்றுங்கள்...

குளிர்காலங்களில் காரை ஸ்டார்ட் செய்வது என்பது சவாலானது. குளிரான சூழ்நிலைகளில், இன்ஜின் ஆயில் மிகவும் தடிமன் ஆகிவிடுவதான் இதற்கு காரணம். அத்தகைய நேரங்களில் இன்ஜின் ஆயிலின் ப்லோ சீராக இருக்காது. எனவே காரை ஸ்டார்ட் செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

எனவே குளிரான சூழலில், நீண்ட நேரம் போராடிதான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். அப்படி ஸ்டார்ட் செய்த உடனேயே, ஆக்ஸலேட்டரை மிதித்து கொண்டு பறந்து விட வேண்டாம். இது இன்ஜினில் பிரச்னையை ஏற்படுத்தி விடும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

இதற்கு பதிலாக காரை ஸ்டார்ட் செய்த பின், இன்ஜின் வார்ம் அப் ஆக உதவும் வகையில், சிறிது நேரம் காத்திருக்கலாம். ஒரு சில நிமிடங்கள் இன்ஜினை சும்மா ஓட விட்ட பின்பு, நீங்கள் புறப்படலாம்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

அதுமட்டுமின்றி முதல் 2 கிலோ மீட்டர்களுக்கு இன்ஜின் ஸ்பீடு 2,000 ஆர்பிஎம்-க்கு கீழாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். உடனடியாக வேகம் எடுக்க வேண்டாம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்கும்போது, இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

பெட்ரோல் கார் டீசலிலும், டீசல் கார் பெட்ரோலிலும் ஓடாது...

ஓர் காரின் இன்ஜின் குறிப்பிட்ட எரிபொருளில் இயங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது பெட்ரோல் அல்லது டீசல் என ஏதாவது ஒன்றில் இயங்கும்படிதான் கார் இன்ஜின் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜியானது, டீசல் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறானது.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

எனவே ஓர் பெட்ரோல் இன்ஜின் கார், டீசலில் இயங்காது. ஆனால் சில சமயங்களில் பெட்ரோல் இன்ஜின் காரில் டீசலையும், டீசல் இன்ஜின் காரில் பெட்ரோலையும் மாற்றி நிரப்பி விடுகின்றனர். அப்படி எரிபொருளை மாற்றி நிரப்பி விட்டால், இன்ஜினில் பெரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

எனவே உங்கள் காரில் தவறான எரிபொருளை நிரப்பி விட்டால், இன்ஜினை ஆன் செய்வதற்கு முன்பாக, அந்த எரிபொருள் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள். பின்பு சரியான எரிபொருளை நிரப்புங்கள்.

உங்கள் கார் இன்ஜின் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்...

அத்துடன் உங்கள் காரின் ப்யூயல் கேப்பில், எந்த வகையான எரிபொருளில் கார் இயங்குகிறது என்ற ஸ்டிக்கரை ஒட்டி வையுயங்கள். பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள், இதை பார்த்து சரியான எரிபொருளை நிரப்புவார்கள்.

Most Read Articles
English summary
5 BAD habits that will destroy your car’s engine. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X