காரில் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய ஆக்சஸெரீஸ்!

By Saravana

காரை அழகுப்படுத்தவும், வசதிகளை கூட்டிக் கொள்ளவும் பலர் விரும்புகின்றனர். பணம் ஒரு பொருட்டாக இல்லையெனினும் காரில் சில ஆக்சஸெரீஸ்களை பொருத்துவதால் சில பாதகங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பொதுவாகவே, காரில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை தொடர்ந்து ஏற்றுவதை தவிர்ப்பது பல வகைகளிலும் நல்லது. அதிலும், குறிப்பாக தவிர்க்க வேண்டிய சில முக்கிய ஆக்சஸெரீஸ்களையும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.


ஆக்சஸெரீஸ் பட்டியல்

ஆக்சஸெரீஸ் பட்டியல்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தவிர்க்க வேண்டிய ஆக்சஸெரீஸ்கள் மற்றும் அதன் பாதகங்களை பார்க்கலாம்.

பெரிய ரிம்

பெரிய ரிம்

காருக்கு வெளிசந்தையில் பல டிசைன்களில் தற்போது பெரிய அளவு கொண்ட ரிம்கள் கிடைக்கின்றன. பெரிய சைஸ் ரிம்களை வாங்கி பொருத்தும்போது காரின் அழகை பன்மடங்கு கூட்டும். உதாரணத்திற்கு, 15 இஞ்ச் ரிம்களுக்கு பதிலாக 16 இஞ்ச் ரிம்களை பலர் வாங்கி பொருத்துகின்றனர். இதுபோன்று பொருத்தும்போது போதுமான இடைவெளி இருக்காது. இதனால், வேகத்தடை மற்றும் மோசமான சாலைகளில் சக்கரங்கள் காரின் பாடியுடன் உரசும் அபாயம் ஏற்படும். மேலும், சஸ்பென்ஷனிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 2.லோ ப்ரோஃபைல் டயர்கள்

2.லோ ப்ரோஃபைல் டயர்கள்

லோ ப்ரோஃபைல் டயர்கள் ரேஸ் கார்களுக்காக பிரத்யேக வடிவமைப்பு கொண்டவை. வளைவுகளில் சிறப்பான கிரிப்பை வழங்கும் விதத்தில் அவை வடிவமைக்கப்படுகின்றன. லோ ப்ரோஃபைல் டயர்களின் பக்கவாட்டு சுவர் பகுதி மிக கடினத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே, மென்மையான ஓட்டுதலை உணர முடியாது. இந்த டயர்கள் சஸ்பென்ஷன் பாகங்களிலும், மைலேஜிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

3. ஸ்பாய்லர்

3. ஸ்பாய்லர்

ஸ்பாய்லர் உள்ளிட்ட எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீஸ்கள் ரேஸ் கார்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. அதிவேகத்தில் டவுன்ஃபோர்ஸ் வழங்குவதற்காக இவை பயன்படுகின்றன. இதன்மூலம், வளைவுகளில் அதிவேகத்தில் கார் திரும்பும்போது சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும். ஆனால், வெளிச்சந்தையில் கிடைக்கும் பல ஸ்பாய்லர்கள் டவுன்ஃபோர்ஸை வழங்காது. மாறாக சில உபத்திரங்களையை கொடுக்கும். சில சமயங்களில் சரியான வடிவமைப்பு இல்லாத ஸ்பாய்லர்களால் மைலேஜ் குறையும். இதேபோன்று, இதர ஏரோடைனமிக் ஆக்சஸெரீஸ்களையும் தவிர்ப்பது நலம்.

4. பாடி கிட்

4. பாடி கிட்

பிரேக், ரேடியேட்டர், எஞ்சின் ஏர் இன்டேக் அமைப்புகளுக்கு கூடுதல் காற்றை வழங்கும் விதத்தில் விற்பனை செய்யப்படும் பாடி கிட்டுகளால் அதிக பயன் ஏதும் கிடைக்காது. சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் அமைப்புகளில் இவை தொந்தரவை வழங்கும் என்பதால் கூடுதலாக பாடி கிட் போன்றவற்றை வாங்கி பொருத்துவதை தவிர்க்கலாம்.

5. வண்ண ஹெட்லைட்

5. வண்ண ஹெட்லைட்

ஹெட்லைட் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதும், ஹெட்லைட்டில் மாறுதல்கள் செய்வதும் அழகை கூட்டும் விஷயம்தான். ஆனால், ஏதெனும் பிரச்னை என்றால் வாரண்டி பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். எனவே, ஹெட்லைட்டில் பிரகாசமான பல்புகளை வாங்கி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர்க்கலாம்.

எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீஸ்

எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீஸ்

பட்டியலில் உள்ளது போன்ற சில கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் வாங்கி பொருத்துவதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் காரின் எடை கூடும் என்பதோடு, மைலேஜிலும், எஞ்சின் ஆயுளிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Some car accessories may be all that powerful and strong like we want it to be, but fall a little negative on the impacts it has on the car. So we don't want to spend on 'harmful' car accessories, after all our car is part of our family.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X