Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏர் பேக்ஸ், ஏபிஎஸ் இருந்தாலும் இந்த 5 பொருட்களும் உங்க காருக்கு கூடுதல் அவசியம்... அவை இவைதான்..!!
காரை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், அதற்காக வழங்கப்படும் ஏக்சரீஸ்களினால் இதுவரை எந்த வாடிக்கையாளரும் திருப்தியடைந்திருக்க மாட்டார்கள். ஏக்சரீஸ் என்று நாம் இங்கே குறிப்பிடுவது கார்களின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டமோ, அல்லது ஓஆர்விஎம் கண்ணாடியோ, ரியர் வியூ பார்க்கிங் சென்சாரோ அல்ல.

கார்களின் பாதுகாப்பை காத்திடவும், தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்திட செய்யும் முக்கியமான 5 துணைபொருட்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

கையடக்க ஏர் கம்ப்ரஷர்
கார்களில் எல்லாமே சரியிருந்தாலும், நமக்கு வில்லாதி வில்லன் என்றால் இந்த டயர் தான். அன்றைய நாளில் டயர் பஞ்சர் ஆகும் என்றிருந்தால், அது ஆகித்தான் தீரும். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆனால் இந்த பிரச்சனையை தடுக்க டயர்களை நாம் சரியாக பராமரிப்பதன் மூலம் ஒரளவிற்கு நிரந்தர தீர்வை அடையலாம்.
இதற்கு நீங்கள் உடனே செய்ய வேண்டியது கையடக்க நிலையில் ஒரு ஏர் கம்ப்ரஷர் வாங்கவேண்டும். இதை பயன்படுத்துவது எளிது தான்.

கார் டயர்களில் காற்று இறங்கிவருவது போல தெரிந்தால், டயரின் வால்வில் இந்த ஏர் கம்பர்ஷரை மாட்டவிட்டால் போதும். 12 வோல்ட் மின்சாரத்தின் திறனால் இயங்கும் இந்த பம்ப், தானாகவே டயர்களில் காற்றை நிரப்பிவிடும்.

மொபைல் ஹோல்டர்
இன்றைய சாலை அமைப்பின் காரணமாக நம்மில் பலர் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதற்கு நமது கைப்பேசியை பார்வைக்கு நேராக வைத்துக்கொள்வது அவசியமாகிறது.

கைகள் இரண்டையும் ஸ்டீயரிங்கில் வைத்துவிட்டு, பார்வையை மொபைல் ஃபோனில் அவ்வப்போது திருப்ப அதற்கு வசதியான ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. அதற்கு தான் இந்த மொபைல் ஹோல்டர் அவசியம்.

காரில் தனிமை பயணத்தின் போது உங்களது பொழுதை கழிக்கவும், அதே சமயத்தில் சேரவேண்டிய இடத்திற்கு சரியான வழியில் போகவும், மொபைல் ஃபோனின் தேவை இன்றியமையாதது.

சாலையில் இருக்கும் கவனத்தை மொபைல் ஃபோனில் கொண்டு சென்றால், பயணம் விபரீதமாகிவிடும். அதை தவிர்க்க, சாலை மற்றும் மொபைல் என இரண்டிலும் ஒருசேர கவனத்தை இந்த ஹோல்டர் பிடித்துக்கொள்ளும்.

12 வோல்ட் சார்ஜர்
காரில் மொபைல் ஃபோனை பாதுகாப்பாக பிடித்துக்கொள்ள ஹோல்டர் பொருத்தப்பட்டு விட்டாலும், அந்த வசதி நமக்கான தேவை மட்டுமே. ஆனால் ஃபோன்களின் தேவைக்கு என்று ஒன்று உள்ளது.

அதுதான் கார் மொபைல் சார்ஜர். அதுவும் 12 வோல்ட் திறனில் தான் வேண்டும். இன்றைய ஸ்மார்ட் ஃபோன்கள் பல பேட்டரியை தக்கவைக்க சிரமபப்படுகின்றன.
நமது வாழ்க்கையோ எப்போதும் மொபைலின் எல்.இ.டி திரைக்குள் தான் உள்ளது. ஆகையால் எங்கு சென்றாலும் அது முழுவதும் பேட்டரி திறனோடு இருப்பது அவசியம்.

அந்த அடிப்படை தேவைக்கான நிச்சயம் கார்களின் இந்த சார்ஜிங் பயன்பாடு வைத்தே ஆகவேண்டும். அப்போது தான் நமது மொபைல் ஃபோன் உயிர்ப்புடன் இருக்கும்.

கியர் லாக்
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் கார்களின் பாதுகாப்பு உங்கள் கைகளில் இருப்பது போலத்தான் இருக்கும். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் அந்த ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பம் தான் அச்சுறுத்தலாக உள்ளது.

இன்றைய காலத்தில் கார் திருடர்களும், தொழில்நுட்பத்தில் கரைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மின்சாரத்தால் இயங்கும் காரை பாதுகாக்கும் அம்சங்களில் அத்துபடி செய்கிறார்கள்.

தற்போதைய நிலையில், காரை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற, அதற்கு பழங்கால முறை தான் சரி. அதுதான் இந்த கியர்லாக் அமைப்பு.
கியர் லிவெரை பூட்டி வைக்க பயன்படுவது தான் இந்த கியர் லாக் சிஸ்டம். பூட்டியிருக்கும் பட்சத்தில் சாவிப்போட்டு மட்டுமே திறக்க முடியும்.

கியர் லாக்கை உடைக்கவோ அல்லது துண்டித்து அகற்றவோ முடியாது என்கிறார்கள், விற்பனையாளர்கள். காரை பாதுகாப்பதில் கியர்லாக் ஒரு சிறந்த தேர்வு என்பது பலரது சாய்ஸாக உள்ளது.

டேஷ் கேம்
பலரும் டேஷ் கேம் என்ன என்பதை அறிந்திருக்க மாட்டார்கள், ஆனால் அதுவும் இன்றைய காலத்தில் காரின் செயல்பாட்டிற்கு மிகமிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

டாஷ் கேம் என்பது, டாஷ் போர்டிற்கு மேல் வைக்கப்படும் ஒரு கேமரா சாதனம். இது காரின் வெளிப்புறத்தில் நடக்கும் எல்லாவித செயல்பாடுகளையும் பதிவு செய்து உள்ளிருக்கும் திரையில் காட்டும்.

சாலை விபத்து அல்லது வேறேதும் முக்கிய சம்பவங்களுக்கு டாஷ் கேமின் தேவை முக்கிய சாட்சியாக அமையும். இன்றைய சாலை அமைப்புகளுக்கும் காரின் பாதுகாப்பு அம்சங்களுக்கும் டாஷ் கேம் அடிப்படை தேவை என்ற நிலையில் உள்ளது.