இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

Written By:

இப்போது கார்களுக்கு பெரும்பாலும் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ்தான் போடப்படுகிறது. சாதாரண இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகளைவிட பாதிப்புகளுக்கு 100 சதவீதம் வரை இழப்பீடு கோரும் வாய்ப்பு இருப்பதால், இந்த பாலிசியை எல்லோரும் தேர்வு செய்கின்றனர்.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

இந்த நிலையில், பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் எடுத்துவிட்டால், சேதமடைந்த பாகங்களுக்கு முழுவதும் கிடைத்துவிடும் என்ற நினைப்பு வாடிக்கையாளர் மத்தியில் இருக்கிறது. ஆனால், பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் அனைத்து உதிரிபாகங்கள் மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு கோர முடியாது.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

பம்பர் டு பம்பர் அல்லது ஸீரோ டிப்ரிசியேஷன் என்று குறிப்பிடப்படும் இந்த பாலிசிகளுக்கு கட்டணம் அதிகம். சேத மதிப்புக்கு இணையான தொகையை இழப்பீடாக பெறமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

அதேநேரத்தில், குறிப்பிட்ட பாகங்களுக்கு இழப்பீடு கோர முடியாது. உதாரணத்திற்கு, எஞ்சின் பிரச்னை, உதிரிபாகங்கள் தேய்மானத்தால் ஏற்படும் பழுது, டயர் பிரச்னை உள்ளிட்டவற்றிற்கு இழப்பீடு கோர இயலாது.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

வைப்பர், பேட்டரி மற்றும் கூடுதல் ஆக்செரீகளுக்கு பம்பர் டு பம்பரில் இழப்பீடு கோர முடியாது. அதேநேரத்தில், விலை உயர்ந்த ஆக்சஸெரீகளுக்கு தனியாக இன்ஸ்யூரன்ஸ் செய்து கொள்ளும் திட்டத்தை சில இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது. வர்த்தக வாகனங்களாக இயக்கப்படும் டிரக், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் கிடையாது.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

அதேபோன்று, 5 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் போட முடியாது. ஏற்கனவே நீங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் போட்டிருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பம்பர் டு பம்பர் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது. புதிதாகவும் போட முடியாது.

இந்த 5 விஷயங்கள் பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸில் கவர் ஆகாது!!

அதன் பின்னர், ஒருங்கிணைந்த காப்பீடு அல்லது மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இதில், பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் அளவுக்கு இழப்பீடு கோர முடியாது.

English summary
Zero Depreciation auto insurance is a common choice among several new vehicle buyers in India. Today we list out a few things that are not covered by Zero Depreciation policies.
Story first published: Monday, April 2, 2018, 9:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark