உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் கார் கிளட்ச்சின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களின் இன்றியமையாத பாகங்களில் கிளட்ச் (Clutch) மிகவும் முக்கியமானது. ஆனால் கிளட்ச்சை பயன்படுத்தும்போது ஒரு சிலர் நிறைய தவறுகளை செய்கின்றனர். இதனால் கிளட்ச்சின் ஆயுட்காலம் குறைகிறது. ஆனால் ஒரு சில எளிமையான வழிகளை பின்பற்றினாலே, கிளட்ச்சின் ஆயுட்காலத்தை வெகுவாக அதிகரிக்க முடியும்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

அந்த வழிமுறைகள் என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இந்த வழிமுறைகள் கடினமானவை கிடையாது. மிகவும் எளிமையாக பின்பற்றலாம். பொதுவாக கிளட்ச்சை மாற்றுவதற்கு மிகவும் அதிகமாக செலவு ஆகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

கிளட்ச்சின் மீது கால்களுக்கு ஓய்வு கொடுக்காதீர்கள்!

நம்மில் பெரும்பாலானோருக்கு கிளட்ச் பெடல் மீது வைத்து கால்களுக்கு ஓய்வு கொடுக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இது தவறான பழக்கம் என்பதை பலரும் உணர்வதில்லை. தேவையில்லாமல் கால்களை வைத்து கொண்டிருந்தால், கிளட்ச்சின் ஆயுட்காலம் குறையும். எனவே கிளட்ச்சை பயன்படுத்தும் சமயங்களில் மட்டுமே அதன் மீது காலை வையுங்கள்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

கிளட்ச்சை பயன்படுத்தாத நேரங்களில் அதன் மீது தேவையில்லாமல் கால்களை வைத்து மிதித்து கொண்டு இருப்பதை தவிர்த்து விடுங்கள். தேவைப்படும்போது கிளட்ச் பெடலை முழுமையாக அழுத்த வேண்டும். தேவையில்லாத சமயங்களில் அதன் மீது காலை வைக்கவே கூடாது. கார் கிளட்ச்சின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கான மிக எளிமையான வழிமுறைகளில் இது முக்கியமானது.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

சிக்னலில் காரை நியூட்ரலில் போடுங்கள்!

சிக்னல்களில் காத்திருக்கும்போது நியூட்ரலை பயன்படுத்துங்கள். இது மிக எளிமையான வழிமுறை. ஆனால் நம்மில் பலரும் சிக்னல்களில் காத்திருக்கும்போது கிளட்ச்சை பயன்படுத்துவதை அதிகம் பார்க்க முடியும். சிக்னல்களில் காத்திருக்கும்போது கிளட்ச்சை மிதித்து கொண்டிருப்பது என்பது மிகவும் தவறான ஒரு பழக்கம்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் ஒரு சில வினாடிகள்தானே என்று பலரும் இதனை எளிதாக எடுத்து கொள்கின்றனர். 10 வினாடிகள் என்றால் கூட கிளட்ச்சின் பயன்பாடு தேவையில்லாமல் அதிகரிக்கிறது என்பதை அவர்கள் உணர்வது கிடையாது. இதற்கு பதிலாக காரை நியூட்ரலில் போடலாம். பயன்பாடு இல்லாத சமயங்களில் கிளட்ச் பெடலை மிதித்து கொண்டிருந்தால், அதன் ஆயுட்காலம் வெகுவாக குறைந்து விடும்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

பிரேக் பிடிக்கும்போது கிளட்ச் எதற்கு?

பிரேக் பிடிக்கும்போதெல்லாம் கிளட்ச்சை பயன்படுத்த வேண்டாம் என்பதையும் மனதில் வையுங்கள். பிரேக் பிடிக்கும்போது பிரேக் பெடல் மற்றும் கிளட்ச் பெடல் என இரண்டையும் ஒரே நேரத்தில் மிதிப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது மற்றொரு தவறான பழக்கம் ஆகும். இப்படி தேவையில்லாமல் கிளட்ச்சை பயன்படுத்த கூடாது.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்துங்கள்!

உங்கள் காரின் பார்க்கிங் பிரேக்கை (Parking Brake) முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். காரை கியரில் விட்டு செல்வதால், உருள்வதில் இருந்து தடுக்கலாம்தான். ஆனால் இந்த நடவடிக்கை கிளட்ச்சிற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மேலும் சீரான இடைவெளிகளில் கிளட்ச்சை சோதனை செய்து பராமரிப்பதும் அவசியமானது.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

மென்மையாக கையாளுங்கள்!

நீங்கள் ரேஸில் கலந்து கொள்ளும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எடுத்த உடனேயே மிக அதிக வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வேகத்தை அதிகரிக்கும்போது கிளட்ச்சை மென்மையாக கையாளுங்கள். நீங்கள் இதனை செய்யும்பட்சத்தில், உங்கள் காரின் கிளட்ச் உங்களுக்கு நன்றிக்கடன் கொண்டிருக்கும்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்துங்கள்!

கார் ஓட்டும்போது கிளட்ச்சை பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் கிளட்ச்சின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். அதை மறுக்க முடியாது. எனவே கிளட்ச்சை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. தேவைப்படும் நேரங்களில் மட்டும் பயன்படுத்துங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறோம்.

உங்க கார் கிளட்ச்சின் ஆயுட்காலம் பல மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த ட்ரிக்ஸை யாரும் சொல்ல மாட்டாங்க!

காது கொடுத்து கேளுங்கள்!

உங்கள் கார் மற்றும் கிளட்ச்சிற்கு அவ்வப்போது காது கொடுப்பது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது பாடல்களை கேட்பதை நிறுத்தி விட்டு, கார் எழுப்பும் சப்தங்களை சற்று உன்னிப்பாக கவனிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். வழக்கத்திற்கு மாறான சப்தம் ஏதாவது கேட்கும்பட்சத்தில், உடனடியாக நீங்கள் அதனை சரி செய்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
7 useful tips and tricks to increase the life of your car s clutch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X