கார் ஓட்டும்போது கைவிடவேண்டிய செயல்கள்!

கார் ஓட்டும்போது கிடைக்கும் சுகம் அலாதியான ஒன்று. ஆனால், டிரைவிங்கில் செய்யும் சில தவறுகளால் விபத்தில் சிக்கும்போது இந்த சுகம் துக்கமாகிவிடும். வாழ்க்கையின் மிக மோசமான அனுபவங்களையும், விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். பெரும்பாலான விபத்துக்களுக்கு டிரைவர்களின் தவறான சில ழக்க வழக்கங்கள்தான் காரணம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இதுபோன்ற சில தவறான பழக்க வழக்கங்களை டிரைவிங்கின்போது மாற்றிக் கொள்வது மிகவும் உத்தமம். தவறு செய்யும் டிரைவருக்கு மட்டுமல்லாது எதிரில் வாகனங்களில் வருபவர்கள் மற்றும் பாதசாரிகளின் வாழ்க்கையையும் இதுபோன்ற டிரைவர்களால் பெரும் ஆபத்து இருக்கிறது. டிரைவிங்கின்போது சில தவறான பழக்கங்களை மாற்றினால், கார் டிரைவிங்கை எப்போதும் சங்கீதம் போன்று இருக்கும்.

சங்கீதமா, சங்கா?

சங்கீதமா, சங்கா?

கார் டிரைவிங் சங்கீதமாகவும், சங்கு ஊத வைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. இங்கு கார் டிரைவிங் சங்கீதமாக அமைய சில வழிமுறைகள் அடுத்தடுத்த படங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டெயில்கேட்டிங்

டெயில்கேட்டிங்

சிலர் முன்னால் செல்லும் வாகனத்துக்கு வெகு நெருக்கமாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். முன்னால் செல்லும் வாகனம் அவசர பிரேக் போட்டால் உங்கள் வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம். எனவே, முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்வது உத்தமம். மேலும், மழை நேரங்கள், பனிக்காலங்களில் முன்னால் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக செல்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மொபைல்போன் வடிவில் வரும் எமன்

மொபைல்போன் வடிவில் வரும் எமன்

பெரும்பாலோனோர் டிரைவிங்கின்போது மொபைல்போன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். தற்போது நடக்கும் பெரிய விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசிக்கொண்டே செல்வது முக்கிய காரணமாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. மொபைல்போனில் பேசும்போது கவனக்குறைவு கண்டிப்பாக ஏற்படும் என்பதால் அருகில் மற்றும் எதிரில் வரும் வாகனங்களை கணிப்பது கடினம். எனவே, எவ்வளவு முக்கிய அழைப்பாக இருந்தாலும் காரை ஓட்டிக் கொண்டே மொபைல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது

ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது

அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட காராக இருந்தாலும், அதை அதிவேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது அர்த்தமில்லை. போக்குவரத்து, சாலை நிலை உள்ளிட்ட அனைத்தையும் பொறுத்து கார் ஓட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதிவேகம் நிச்சயம் உயிருக்கு உலை வைத்துவிடும். எனவே, எப்போதும் சீரான வேகத்தில் ஓட்ட பழகிக்கொள்ளுங்கள்.

சீட் பெல்ட்

சீட் பெல்ட்

காரில் ஏறி அமர்ந்தவுடன் முதலில் சீட் பெல்ட் அணிவதை மறக்க வேண்டாம். குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ சீட் பெல்ட் உயிர் காக்கும் கருவியாக கருதுங்கள். இதற்கு முன் சீட் பெல்ட் அணியாமல் சென்று உயிரிழந்த பலரின் செய்திகளை நாம் வெளியிட்டிருக்கிறோம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தால் நிச்சயம் காயங்களுடன் உயிர்பிழைத்திருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

சிக்னல் ஜம்ப்

சிக்னல் ஜம்ப்

சிக்னல் விழப்போவது குறித்து தெரிந்தும் அவசரமாக பலர் சிக்னலை தாவி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல நேரங்களில் தாவி சென்றாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் இது பெரும் ஆபத்தை விளைவிக்கும். மேலும், சிக்னலில் பச்சை விளக்கு விழப்போவது தெரிந்ததும் சிலர் அவசரமாக வண்டியை மின்னல் வேகத்தில் கிளப்புகின்றனர். இதுவும் பேராபத்தை விளைவிக்கும். சிக்னலில் சிவப்பு எரியும்போது வாகனங்கள் வரவில்லை என்றாலும் கண்டிப்பாக கடக்க முயற்சிக்க வேண்டாம்.

ரோட்ரேஜ்

ரோட்ரேஜ்

கார் ஓட்டும்போது கோபப்படுவதையும், அடுத்தவர்களை பார்த்து முறைப்பது, திட்டுவது உள்ளிட்ட செயல்களை விடுவது நல்லது. அதே டென்ஷனோடு செல்லும்போது சரியாக டிரைவிங் செய்ய முடியாது.

குடிபோதையில் டிரைவிங்

குடிபோதையில் டிரைவிங்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக தவிருங்கள். 20 ஆண்டுகளாக கார் ஓட்டுகிறேன். நல்ல அனுபவம் இருந்தாலும் மது அருந்திவிட்டு கண்டிப்பாக டிரைவிங் செய்ய வேண்டாம்.

அலர்ட் ஆறுமகம்

அலர்ட் ஆறுமகம்

கார் ஓட்டும்போது ஒவ்வொரு வினாடியும் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அவசரமாக குறுக்கே வரும் சைக்கிள்காரர் முதல் அதிவேகத்தில் செல்லும் வாகனம், சாலையில் எதிரில் இருக்கும் பள்ளங்கள் என சுற்றுப்புறம் பற்றிய எப்போதும் அலர்ட்டாக இருக்க வேண்டும்.

நம்பிக்கை அதானே எல்லாம்

நம்பிக்கை அதானே எல்லாம்

தவறுகள் செய்யாத மனிதல் இல்லை. ஆனால், அது தெரிந்தபின் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை என்பதுபோல் இதுபோன்ற 'கெட்ட' பழக்க வழக்கங்களை கைவிட்டால் நிம்மதியான கார் பயணம் நிச்சயம். ஏதேனும், தவறான பழக்கம் இருந்தால் கண்டிப்பாக மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் டிரைவ்ஸ்பார்க் டீம்.

Most Read Articles

Tamil
English summary
Driving is generally considered a pleasurable experience. But pleasure can turn to pain if you are involved in a road accident. Research has indicated that most accidents are caused by mistakes of drivers. There are several common habbits that while appearing normal, can cause a fatal accident.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more