பைக்குகளுக்கான ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸெரீகள் - சிறப்புத் தொகுப்பு

Written By:

சமீபத்தில் கார்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸெரீகள் குறித்த சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தோம். அந்த செய்திக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அத்துடன், கார்களுக்கு மட்டும்தானா, பைக்குகள் பற்றியும் அதுபோன்று ஒரு சிறப்புத் தொகுப்பை வழங்குங்களேன் என்று வந்த இ-மெயில்களுக்கு விடைதரும் வகையில், பைக்கிற்கு தேவைப்படும் ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸெரீகள் குறித்து இந்த செய்தியில் வழங்குகிறோம்.

01. ஹேண்டில்பார்

01. ஹேண்டில்பார்

சில பைக் மாடல்களில் ஹேண்டில்பார் பிடிப்பதற்கு சரியாக இருக்காது. மேலும், சவுகரிமான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்காது. அதுபோன்ற பைக் மாடல்களை வைத்திருப்பவர்கள், வெளிசந்தையில் கிடைக்கும் ஹேண்டில்பார்களை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். அதற்கு தகுந்தாற்போல், நீளமான க்ளட்ச், ஆக்சிலரேட்டர் கேபிள்களையும் வாங்கி போட்டுக்கொள்ள முடியும். இதற்கு வாரண்டி கேன்சலாகாது. அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் செய்வது இன்னும் சிறந்தது.

 02. பெட்டி

02. பெட்டி

அலுவலக சம்பந்தமாக அடிக்கடி டூ வீலரில் பயணிக்க விரும்புவோர்க்கு இந்த பெட்டியை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். ஆவணங்களையும், பொருட்களையும் பத்திரமாக வைத்து எடுத்துச் செல்ல உதவும்.

 03. ஹெட்லைட்டுகள்

03. ஹெட்லைட்டுகள்

பல டூ வீலர் மாடல்களில் இருக்கும் ஹெட்லைட்டுகள் போதிய வெளிச்சம் தருவதில்லை. இரவு நேரத்தில் பணிமுடிந்து வீடு திரும்புவோர்க்கு பிரகாசமான ஹெட்லைட் அவசியம். வெளிச்சந்தையில் கிடைக்கும் தரமான பல்புகளை வாங்கி போட்டுக் கொள்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை பெறுவதற்கு உறுதுணை செய்யும்.

04. கிராஷ் கார்டு

04. கிராஷ் கார்டு

வண்டி நிறுத்தியிருக்கும்போதோ அல்லது எதிர்பாராமல் கீழே விழும் நிலை ஏற்பட்டால், டூ வீலரை பாதுகாப்பதற்கான வழியாக கிராஷ் கார்டு இருக்கும். உங்களது வண்டிக்கு பொருத்தமான கிராஷ் கார்டை பொருத்த வேண்டியது அவசியம்.

 06. லிவர் கார்டு

06. லிவர் கார்டு

வண்டி கீழே விழும்பட்சத்தில் பிரேக், க்ளட்ச் லிவர்களை தேய்மானத்திலிருந்தும், உடைந்து போகாமலும் பாதுகாக்கும். இதுவும் அவசியமான ஆக்சஸெரீயாக கூறலாம்.

06. சார்ஜிங் பாயிண்ட்

06. சார்ஜிங் பாயிண்ட்

தற்போது ஸ்மார்ட்போன் இல்லாத கைகளை இல்லை எனலாம். எனவே, வண்டியில் ஒரு சார்ஜிங் பாயிண்ட் வாங்கி பொருத்திக் கொண்டால், நிச்சயம் அவசர சமயங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 08. ஏர் ஃபில்டர்

08. ஏர் ஃபில்டர்

இது பெரும்பாலும் தேவைப்படாது. ஆனால், சிலர் பைக்கின் பெர்ஃபார்மென்ஸை மேம்படுத்த விரும்பினால், கே அண்ட் என் அல்லது பிஎம்சி ஆகிய ஏர் ஃபில்டர்களை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். உங்களது வண்டி எஞ்சினின் சிசி.,யை பொறுத்து இதனை பொருத்த கேட்டு வாங்க வேண்டும்.

 08. டயர்கள்

08. டயர்கள்

தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதற்காக பல பைக் தயாரிப்பு நிறுவனங்கள் சராசரி விலை கொண்ட டயர்களை பயன்படுத்துகின்றன. சில டயர்கள் அடிக்கடி பஞ்சராகி நம் பர்ஸை தொடர்ந்து பதம் பார்க்கும். அதுபோன்ற நிலை இருப்பவர்கள் உடனடியாக, மிச்செலின், பைரெலி, கான்டினென்டல் உள்ளிட்ட பிராண்டுகளின் டயர்களை வாங்கி பொருத்தலாம். சிறப்பான கையாளுமை, அதிக மைலேஜை பெறுவதற்கு இதுபோன்ற டயர்கள் உதவிகரமாக இருக்கும்.

 
English summary
In this list, we take a look at 8 aftermarket accessories that are essential for a motorcycle, that will make riding a pleasure.
Story first published: Tuesday, April 28, 2015, 12:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark