உங்கள் கார் "தள்ளு" மாடல் வண்டியா?; நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?

உங்கள் காரின் பேட்டரியில் சார்ஜ் இறங்கிவிட்டால் ஸ்டார்ட் ஆகாது. அந்தமாதரியான நேரங்களில் காரை தள்ளி ஸ்டார்ட் செய்வோம். ஆனால் நவீன கார்களில் பல மாற்றங்கள் வந்த பிறகு காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியாமா? என்ன வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் கார்

தமிழகத்தின் இன்று அரசு பஸ்களில் நிலையை பற்றி உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை, பழைய இரும்பு கடையில் போடவேண்டியதை எல்லாம் பஸ் என்று சொல்லி ஓட்டிக்கொண்டிருக்கிறது அரசு. இது பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் அரசு அந்த பஸ்களை மாற்றுவதாக இல்லை.

உங்கள் கார்

அந்த மாதிரியான பஸ்களில் எல்லாம் பாதி வழியில் பஸ் நின்று பஸ்சை ஸ்டார்ட் செய்ய முடியாமல் போகும் நேரங்களில் பயணிகள் தான் இறங்கி பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டும். இந்த அனுபவத்தை பஸ்ஸில் டிராவல் செய்த பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.

உங்கள் கார்

இது போல் காரும் நடுவழியில் நின்று விட்டால் தள்ளிதான் ஸ்டார்ட் செய்வர். அதை சிலர் தள்ளு மாடல் வண்டி என்று கூட கிண்டல் செய்வர். இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா? வாகனத்தின் பேட்டரியில் பவர் குறைவாக இருந்தால் இந்த "தள்ளு" பிரச்னை ஏற்படும்.

உங்கள் கார்

நீங்கள் காரை தள்ளி ஸ்டார்ட் செய்யும் போது பேட்டரியில் இருக்கும் குறைந்த சார்ஜூம் தூண்டிப்பட்டு சிறிய ஸ்பார்க் கிடைக்கும் அதை வைத்தே கார் ஸ்டார்ட் ஆகிறது. ஆனால் காரின் பேட்டரி முழுமையாக டிரையாகிவிட்டால் அப்பொழுதும் நீங்கள் காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றால் " நீ என்ன முக்கினாலும் நடக்காது" என்ற வடிவேலுவின் வசனம் தான் உங்களுக்கு பொருந்தும்.

உங்கள் கார்

ஆனால் நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்வது சாத்தியம் இல்லாதது. ஏன் என்றால் நவீன கார்களில் பல மாற்றங்கள் வந்து விட்டது. முக்கியமாக இசியூ எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரில் உள்ள பவரை இது தான் மற்ற பாகங்களுக்கு பிரித்து கொடுக்கும்.

உங்கள் கார்

இந்த இசியூ கருவி பொத்தப்பட்ட வாகனத்தை தள்ளினாலும் இதில் இருந்து பவர் வராத காரணத்தால் கார் ஸ்டார்ட் ஆகாது. அதே நேரத்தில் நவீனகார்கள் சில பியூயல் இன்ஜெக்ட்டருடன் வருகின்றன. இது அதிக வேகத்தில் பியூயலை இன்ஜினுக்குள் தள்ளுகிறது.

உங்கள் கார்

நீங்கள் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றால் பியூலை வேகமாக தள்ளும் அளவிற்கு பியூயல் இன்ஜெக்டடருக்கு பவர் கிடைக்காது அதனால் இன்ஜின் இயக்காது, உங்கள் காரும் ஸ்டார்ட் ஆகாது. இது மட்டுமல்ல பியூயல் இன்ஜெக்டர் உள்ள காரில் ரியர் பம்ப் என்பது இருக்காது.

உங்கள் கார்

பழைய மாடல் கார்களில் ரியர் பம்ப் தான் கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய அதிகமாக உதவும். அந்த பாகமே நவின கார்களில் இல்லாமல் போகும் போது காரை எப்படி தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும்?

உங்கள் கார்

தற்போது நீங்கள் வைத்திருக்கும் பழைய மாடல் காரையும் தள்ளி ஸ்டார்ட் செய்வது என்பது உங்கள் காருக்கு நல்லதல்ல, பொதுவாக தள்ளி ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் பல உராய்வுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நீங்கள் காரை கியரில் போட்டு கிளட்சை மிதித்து காரை தள்ளி கிளட்சை விட்டு ஸ்டார்ட் செய்வீர்கள்.

உங்கள் கார்

அப்படி ஸ்டார்ட் செய்கையில் இன்ஜினிற்கும் கியர்களுக்கு உள்ள இணைப்பு பகுதியில் உராய்வு ஏற்படும் இதனால் சில நேரங்களில் அதிக அளவு தேய்மானம் ஏற்பட்டு அடுத்து பயணத்தின் போது நீங்கள் கியர் மாற்றுவதில் சிரமம் இருக்கும். சில இக்கட்டான இடங்களில் நீங்கள் கியரை மாற்ற முடியாமல் மாட்டிகொள்வீர்கள்.

உங்கள் கார்

சிலர் ரிவர்ஸ் கியரை போட்டு காரை பின் பக்கமாக தள்ளி ஸ்டார்ட் செய்வர்கள் அங்கு தான் அதிக பிரச்னை ஏற்படும் காரை பின்புறமாக இயக்க நமக்கு இருக்கும் ஒரே வழி ரிவர்ஸ் கியர் தான் அதையும் இப்படி காரை பின் பக்கம் தள்ளி ஸ்டார்ட் செய்து பாழாக்கி விட்டீர்கள் என்றால் உங்கள் காரின் வாழ்நாள் குறையும் அபாயம் உள்ளது.

உங்கள் கார்

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு உங்கள் காரின் பேட்டரியை சரியாக பராமிரிப்பது தான். குறிப்பிட்ட கால இடைவேலியில் உங்கள் காரின் பேட்டரியை பராமரிக்க வேண்டும், கார் நிறுவனங்கள் குறிப்பிடும் வாழ்நாளுக்கு பிறகு பேட்டரியை மாற்ற வேண்டும் அப்பொழுது தான் உங்கள் காரின் மற்ற பாகங்களுக்கான வாழ்நாளும் நன்றாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Able to push-start a modern car? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X