ஆக்டிவ் சேப்டி, பேஷிவ் சேப்டி என்றால் என்ன தெரியுமா?
பொதுவாக பாதுகாப்பை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். ஒன்று ஆக்டிவ் சேப்டி, மற்றொன்று பேஷிவ் சேப்டி, இந்த இரண்டு வகையான சேப்டிகளை பற்றி கீழே விளக்கமாக பார்க்கலாம்.
கார், பைக் ஓட்டும் போது அது எவ்வளவிற்கு எவ்வளவு குதூகலத்தை தருகிறதோ, விபத்து ஏற்படும் போது அவ்வளவுக்கு அவ்வளவு மோசமான அனுபவத்தையும் தரும். பயணத்தின் போது பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.

பொதுவாக பாதுகாப்பை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். ஒன்று ஆக்டிவ் சேப்டி, மற்றொன்று பேஷிவ் சேப்டி, இந்த இரண்டு வகையான சேப்டிகளை பற்றி கீழே விளக்கமாக பார்க்கலாம்.

ஆக்டிவ் சேப்டி
ஆக்டிவ் சேப்டி என்பது விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான். அதவாது நமது காரோ, பைக்கோ விபத்தில் சிக்காமல் இருக்க சில கருவிகள் உதவும் அதை வாகனங்களில் பொருத்துவது மூலம் நாம் ஆக்டிவ் சேப்டியை செய்து கொள்ளலாம்.

ஆக்டிவ் சேப்டி கருவிகள்
1. ஏ.பி.எஸ்., கருவி
பிரேக் பிடிக்கும் போது ஏற்படும் விபத்துகளில் இருந்து காக்கிறது.

2. பார்க்கிங் சென்சார்
காரை பார்க்க செய்யும் போது முன்னால் பின்னால் உள்ள வாகனங்களில் மோதாமல் இருக்க உதவும் கருவி

3. பிரஷர் மானிட்டர் சிஸ்டம்
கார் டயரின் பிரஷர் அளவை வெளிபடுத்தும் கருவி, டயரில் பிரஷர் குறைவு மற்றும் திடீர் என பஞ்சர் ஏற்படுவதால் நேரும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும்

4. பேடஸ்ட்ரியன் அலாரம்
நாம் காரின் முன்னால் நடந்து செல்பவர்கள்/ வாகனங்கள் குறித்த அலாரம் நம்மை அவர்கள் மீது மோதாமல் எச்சரிக்கிறது.

5. கேமராக்கள்
காரை பின்னால் எடுக்கும் போதும், காரை பார்க் செய்யும் போது காரின் பின் பகுதி மற்றும் காரின் முன் பக்க கண்ணாடியின் கீழ் பகுதியில் உள்ள கேமராக்கள் நாம் காரை எதிலும் மோதி/உரசி விடாமல் பாதுகாக்க உதவும்.

6. எச்சரிக்கை விளக்கு
காரின் ஸ்டிரிங்கிற்கு பின்புறம் உள்ள டேஷ்போர்டில் சில எச்சரிக்கை விளக்குகள் இருக்கும். இவை காரில் ஹேண்ட் பிரேக் பிடித்திருந்தால், இன்ஜின் ஆயில் குறைவாக இருந்தால், கார் அதிக சூடாக இருந்தால் இவை எச்சரிக்கும். இதன் மூலம் சிலவிபத்துக்களையும் தவிர்க்கலாம்.

பேஷிவ் சேப்டி
பேஷிப் சேப்டி என்பது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் போது காரில் இருப்பவர்களுக்க காயம் ஏற்படாத/ குறைவான காயம் மட்டுமே ஏற்படும் அளவிற்கு பாதுகாப்பு அளிப்பது தான் பேஷிவ் சேப்டி

கார்களில் கட்டயாம் பேஷிவ் சேப்டிக்கான கருவிகள் இருப்பதுதான் நமக்கும், நமது உயிருக்கும் பாதுகாப்பு

பியூயல் பம்ப் கில் ஸ்விட்ச்
இது டேஷ்போர்டின் ஒரு பகுதியில் டிரைவர் எளிதாக பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். கார் விபத்தில் உருண்டால், எளிதில் தீ பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதை தடுக்க, பியூயல் பம்ப் விழியாக பெட்ரோல் செல்வதை தடுக்க வேண்டும்.

இந்த ஸ்விட்ச் பெட்ரோல் செல்வதை தடுப்பதோடு, விபத்தின் போது கார் தீ பிடிப்பதில் இருந்தும் காப்பாற்றும்.

ஏர் பேக்
இது கார் விபத்து ஏற்படும் போது காரில் இருப்பவர்கள் எதிலும் மோதாமல் இருக்கும் வகையில் பலூன் போன்ற வடிவில் ஏர் பேக் வந்து நம்மை சுற்றிக்கொள்ளும், இதன் மூலம் நாம் விபத்தில் சிக்கினாலும் பெரும் காயங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கலாம்.

சீட் பெல்ட் லாக்
காரில் சீட் பெல்ட் போடுவது எவ்வளவு சேப்டி என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. கார் விபத்தில் சிக்கும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் முன் பக்கம் சென்று மோதாமல் இருக்கவும் வெளியில் தூக்கி விசப்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

காரில் செல்லும் போது நீங்கள் நீச்சயம் ஆக்டிவ் மற்றும் பேஷிவ் சேப்டி கருவிகள் உங்கள் காரில் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். காரில் உல்லாச பயணத்தை விட நம் உயிர் விலைமதிப்பற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








