டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

கார் வாங்குபவர்களுக்கு பெரிய தலைவலியே பெட்ரோல் கார் வாங்குவதா டீசல் கார் வாங்குவதா என்பது தான். கார் வாங்க எண்ணினால் பலர் பல விதங்களில் ஐடியா கொடுப்பார்கள்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

பலர் டீசல் கார் தான் நல்ல மைலேஜ் தரும் டீசல் விலையும் குறைவு என்பதால டீசல் கார பரிந்துரைப்பர் சிலர் பெட்ரோல் கார் தான் பாராமரிப்பு குறைவு, இதனால் பெரும் தொகை சேமிக்கலாம் என பரிந்துரைப்பர்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

இரண்டும் சரியாக தான் இருக்கும் ஆனால் எதை வாங்குவது என்ற குழப்பம் மட்டும் நீடிக்கும். பெரும்பாலும் மார்க்கெட்டில் டீசல் கார்கள் விற்பனையாவதால் டீசல் காரில் உள்ள நன்மைகளையும் குறைபாடுகளையும் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

நன்மைகள்

சிறந்த மைலேஜ்

டீசல் கார்கள் பெட்ரோல் கார்களை விட 30%-50% வரை சிறந்த மைலேஜ் தரக்கூடியது. பெட்ரோல் காரில் எவ்வளவு சிறந்த தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் டீசல் காரில் தான் சிறந்த மைலேஜ் இருக்கும்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

அடர்த்தியான எரிபொருள்

இன்ஜிற்குள் செலவாகும் எரிபொருளின் அளவு பெட்ரோலைவிட டீசல் குறைவாக இருக்கும் ஏனெனில் பெட்ரோல் உள்ளே சென்று எவ்வளவு எரிகிறதோ அதுபோக மற்றது கழிவாக வெளியேறும். ஆனால் டீசல் பெட்ரோலை விட 30 மடங்கு அதிகம் எரியும் இதனால் டீசல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு விடும்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

இக்னிஷியன் டியூன் அப் கிடையாது

டீசல் காரில் ஸ்பார்க் பிளக் மற்றும் டிஸ்ரிபியூட்டர் கிடையாது. இதனால் இக்னிஷியன் டியூன் அப்பிற்கு இங்க வேலையில்லை. பெட்ரோல் காரில் இதை அடிக்கடி செக் செய்யது பராமரிக்க வேண்டியது இருக்கும். இதில் காரின் வாழ்நாள் முழவதும் அந்த கவலையில்லை.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

சிறந்த டார்க்

டீசல் இன்ஜின்கள் பெரும்பாலும் கமர்ஷியல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. டீசல் இன்ஜின்கள் வேகமாக செல்லாது பெட்ரோல் இன்ஜின் வாகனத்தை காட்டிலும் குறைந்த வேகத்தில் தான் செல்லும் எனினும் இதன் டார்க் குறைந்த ஆர்பிஎம்மிலேயே அதிகமான திறனை வெளிப்படுத்தும்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

குறைபாடுகள்

கிட்டத்தட்ட ஒரே செலவு தான்

பெட்ரோல் விலையும் டீசல் விலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வித்யாசத்தில் இருந்து ஆனால் இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தன் காரணமாக டீசல் விலையும் பெட்ரோல் விலையும் கிட்டத்தட்ட சமமாக மாறிவிட்டது. இதனால் நமக்கு ஆகும் செலவு என்பதும் கிட்டத்தட்ட ஒரே அளவு தான்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

அதிக செயல் திறன் இருக்காது

பெட்ரோல் காரை விட டீசல் காரின் செயல்திறன் குறைவாகதான் இருக்கும். குறைந்த ஆர்பிஎம் மிலேயே அதிக டார்க் திறனை பெற்றாலும் அந்த திறன் பெட்ரோல் காரை காட்டிலும் குறைவாகதான் இருக்கும். இதனால் இதில் பெட்ரோல் காரை காட்டிலும் அதிக வேகமாக செல்ல முடியாது.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

அதிக பாராமரிப்பு

டீசல் காரில் ஸ்பார்க் பிளாக் இல்லாததால் அதற்கான பராமரிப்பு குறைவு தான் ஆனால் இதில் அடிக்கடி ஆயில் மாற்றுவது, ஏர் மற்றும் பியூயல் பில்டர்களை மாற்றுவது என பாராமரிப்பு செலவு வந்து கொண்டே இருக்கும். சில கார்களில் வார்ட்டர செப்பரேட்டர் என்ற கருவி இருக்கும் அதையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

பராமரிக்காவிட்டால் அதிக செலவு வரும்

நீங்கள் பாரமரிப்பை செய்ய தவறும் பட்சத்தில் காரில் அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசையாக ஏற்பட துவங்கும். இதற்காக நீங்கள் டீசல் கார் மெக்கானிக்கை தேடி சென்று காரை சீர் செய்ய வேண்டும். இதனால் டீசல் காரை முறையாக பராமரிக்காவிட்டால் பெட்ரோல் காரை காட்டிலும் அதிக செலவை இழுத்து வைக்கும்.

டீசல் காரில் உள்ள நன்மைகளும் குறைபாடுகளும்.!

அரசு தற்போது டீசல் கார் தயாரிப்பையே அதிகம் பரிந்துரைக்கிறது. குறைவான மாசு, டீசலில் குறைந்த அளவு சல்பர் இருத்தல் ஆகியன இருத்தல் அதற்கு முக்கிய காரணம். மேல் குறிப்பிட்டவகை புரிந்து உங்களது தேவையை உணர்ந்து உங்களுக்கான கார் எது என்பதை நீங்களே தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Advantages and Disadvantages of Diesel Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X