எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனினும் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகளும் காணப்படவே செய்கின்றன.

By Arun

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனினும் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில குறைகளும் காணப்படவே செய்கின்றன. எலக்ட்ரிக் வாகனங்களின் நிறை, குறைகள் என்ன? அவற்றை வாங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

க்ளோபல் வார்மிங் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்க புதைபொருள் எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல்தான் முக்கிய காரணம் என்பதை இந்த உலகம் ஒருவழியாக புரிந்து கொண்டு விட்டது. ஆனால் மக்கள் தொகையும், வணிகமயமாக்கலும் அதிகரித்து வருவது, நிலைமையை மிகவும் மோசமாக்கி கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதிகரித்து வரும் க்ளோபல் வார்மிங் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, எலக்ட்ரிக் வாகனங்கள் தீர்வாக பார்க்கப்படுகின்றன. எகோ ப்ரெண்ட்லி என்ற காரணத்திற்காக, எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் ப்ரமோட் செய்யப்பட்டாலும், அதிலும் கூட சில பிரச்னைகள் உள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

இதன் காரணமாகதான், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நாம் மாறுவதில் பிரச்னைகள் எழுந்து வருகின்றன. அப்படி எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள நிறை, குறைகளை இனி அலசலாம். முதலில் குறைகளை பார்த்து விடுவோம்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை

எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய குறை சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான். பெட்ரோல் பங்க்களை போல், இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஒருவேளை சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நிற்க நேரிட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது என்பது பிரயோஜனமற்றது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

குறிப்பாக நமது நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை ப்ரமோட் செய்ய வேண்டுமென்றால், முதலில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எனினும் இந்த குறையை போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது பெருநகரங்களில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதிக விலை

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இருக்கும் அடுத்த பிரச்னை அதன் விலைதான். எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் மற்றும் உற்பத்தி செய்பவர்கள் என இருவருக்குமே அரசாங்கம் மானியம் அளித்தால் மட்டுமே, அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எலக்ட்ரிக் வாகனங்களின் முக்கிய பாகம் என்றால், அதன் பேட்டரிதான். ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இதன் விலை வருங்காலத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

குறைந்த சக்தி

எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் ஆக்ஸலரேஷன் மிகவும் சிறப்பாக இருக்கும். அதாவது அந்த வாகனங்கள் அதிக சக்தி வாய்ந்தவை. எலக்ட்ரிக் வாகனங்களின் பவர் குறைவாக இருப்பது ஒரு மைனஸ்தான்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ரேஞ்ச்

ஒரு முறை சார்ஜ் செய்தால், எலக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் ஓடும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எனவே நீண்ட நெடுந்தூர பயணங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்கின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஆனால் டெஸ்லா மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கவே செய்கின்றன. ஒரு சராசரி எலக்ட்ரிக் வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 முதல் 200 மைல் வரை பயணிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

ஒரு சில குறைகள் இருந்தாலும் கூட, எலக்ட்ரிக் வாகனங்களினால் நிறைய பயன்கள் உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் ஆதரவு அளித்தால், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எகோ ப்ரெண்ட்லி

எலக்ட்ரிக் வாகனங்களின் முதன்மையான பயன் எகோ ப்ரெண்ட்லிதான். பெட்ரோல், டீசல் போன்று தீய வாயுக்களை வெளியிட்டு, காற்றை மாசுபடுத்தும் பணியை எலக்ட்ரிக் வாகனங்கள் ஒருபோதும் செய்யாது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பர்ஸ் ப்ரெண்டலி...!!!

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கே லோன்தான் வாங்க வேண்டும் என்பது போல அவற்றின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது...!!! இன்று குறைந்து விடும், நாளை குறைந்து விடும் என எதிர்பார்த்து காத்திருக்கும் சாமானிய மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எனவே எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தினால், பெட்ரோல், டீசலுக்கு செலவிட வேண்டிய தொகையை மிச்சம் பிடிக்கலாம். ஒரு முறை சார்ஜ் மட்டும் செய்து விட்டு, ரிலாக்ஸாக சுற்றி வரலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்களில் ஒரு மைல் செல்வதற்கு ஆகும் செலவை விட எலக்ட்ரிக் வாகனங்களில் 30 சதவீதம் வரை குறைவான செலவே ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எளிதாக சார்ஜ் செய்யலாம்

எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வது எளிதானது. எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கு, ஒரு சாதாரண சாக்கெட் போதுமானதுதான்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

அமைதியானவை

எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை மட்டும் குறைப்பதில்லை. கூடவே சேர்த்து ஒலி மாசுபடுவதையும் தவிர்க்கின்றன. ஆம், எலக்ட்ரிக் வாகனங்களில் சப்தமே எழாது. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் அமைதியானவை. மற்றும் ஸ்மூத் ஆனவை.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி குறித்தும் பலருக்கு அச்சம் உள்ளது. ஆனால் தேவையில்லாமல் பயப்பட தேவையில்லை. ஒரு நல்ல பேட்டரி, 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறது. எப்போது ஒரு நாட்டின் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கிறதோ அப்போதுதான் அந்நாடு பொருளாதார ரீதியில் முன்னேறும்.

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான அலசல்

பெட்ரோல், டீசல் இறக்குமதியின் அளவு குறைந்தால், நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கும். இது நமது நாட்டின் கஜானாவிற்கு பலன் அளிக்க கூடிய ஒரு பொதுவான விஷயம்.

Most Read Articles
English summary
Advantages And Disadvantages Of Electric Vehicles. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X