ரியர் வீல் டிரைவ் கார்களின் சாதகங்கள் பற்றிய அலசல்

நீங்கள் ரியர் வீல் டிரைவ் கார் வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், நீங்களே உங்களுக்கு ஒரு ஷொட்டு போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், ப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காரைவிட ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் பல விதங்களிலும் சிறப்பும், பாதுகாப்பும் வாய்ந்தவை.

ஃப்ரண்ட், வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தின் அனுகூலங்கள் சிறப்பம்சங்களையும், ஆனால், ப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை தயாரிப்பாளர்கள் ஏன் விரும்புகின்றனர் என்பதற்கான காரணத்தையும், ஸ்லைடரில் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாக, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

அதென்ன RWD?

அதென்ன RWD?

எஞ்சின் ஆற்றலை முன்புற சக்கரத்திற்கு செலுத்தும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு கொண்ட கார்கள் ஃப்ரண்ட் வீல் டிரைவ் கார்கள் என்றும், பின்புறத்திற்கு செலுத்தும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு கொண்ட கார்கள் ரியர் வீல் டிரைவ் கார் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. இதுதவிர, 4 வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் ஆகிய டிரான்ஸ்மிஷன் அமைப்புகள் கொண்ட கார்களும் இருக்கின்றன. இதனை வேறு செய்தியில் காணலாம். இந்த செய்தித் தொகுப்பில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களின் சாதகமான அம்சங்களை பார்க்கலாம்.

இட வசதி

இட வசதி

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் இருக்கை அமைப்பு சிறப்பாக செய்ய முடியும். முன்புறம் எஞ்சின் பே பகுதி குறைவாக இருக்கும் வகையிலும், இல்லாமலும் வடிவமைக்க முடியும். எனவே, பயணிகளுக்கு சிறப்பான இடவசதியை கொடுக்க முடியும்.

சரிசமமான பளு

சரிசமமான பளு

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் அனைத்து டயர்களும் சரிசமமான பளுவை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படும். ஏனெனில், முன்புற டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் எஞ்சின் ஆற்றல் மற்றும் ஸ்டீயரிங் சக்தி இரண்டின் பளுவையும் முன்புற சக்கரங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் ஸ்டீயரிங் பவர் முன்புற சக்கரங்களுக்கும், எஞ்சின் பவர் பின்புற சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகின்றன. இதன்காரணமாக, வேலையை அனைத்து சக்கரங்களும் சரிசமமாக பகிர்ந்துகொண்டு சிறப்பாக செயல்புரியும்.

எடை விகிதம்

எடை விகிதம்

ரியர் வீல் டிரைவ் கார்களில் முன்புறத்தில் எஞ்சினும், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பிற பாகங்களின் எடை பின்புறம் வரையிலும் பகிர்ந்துகொள்ளப்படுவதால், காரின் கையாளுமை, பிரேக்கிங் திறன், ஆக்சிலரேசன் ஆகிய அனைத்திலும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், முன்புற டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல எடை அதிகமுடைய பாகங்கள் முன்புறத்திலேயே திணிக்கப்பட்டிருக்கும். இதனால், பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை அவ்வளவு சிறப்பாக எதிர்பார்க்க முடியாது.

சிறப்பான ஆக்சிலரேசன்

சிறப்பான ஆக்சிலரேசன்

வழுக்கு சாலைகளில் ரியர் வீல் டிரைவ் கார்களின் தரையுடனான பிடிப்புத் திறன் மிக அதிமாக இருக்கும். ஏனெனில், முன்புறம் காரை நகர்த்தும்போது காரின் எடை பின்புறமாக தள்ளப்படுதால், பின்புற சக்கரங்களின் தரையுடனான பிடிப்பு அதிகமாகி வெகு சீக்கிரமாக நகரும். மேலும், முன்புற டிரைவ் சிஸ்டம் கார்களில் சக்கரங்கள் வழுக்கும் என்பதோடு, ஸ்டீயரிங் கன்ட்ரோலும் சிறப்பாக இருக்காது.

 கையாளுமை

கையாளுமை

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் கையாளுமையில் ஜோராக இருக்கும். குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் ஓட்டுபவர்கள் இதனை உணரலாம். மேலும், எடை கார் முழுவதும் சீராக இருப்பதால் டயர்களின் ஆயுட்காலமும் அதிகம். ஆனால், முன்புற டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் முன்புறத்தில் எடை அதிகமாக இருப்பதால் தரையுடனான பிடிப்புத் திறன் குறைவாக இருக்கும் என்பதோடு, முன்புற டயர்கள் சீக்கிரம் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகம்.

பிரேக்கிங் திறன்

பிரேக்கிங் திறன்

பொதுவாகவே, ரியர் வீல் டிரைவ் கார்களின் பிரேக்கிங் திறன் சாமர்த்தியமாகவும், சிறப்பாகவும் இருக்கும். குறிப்பாக, எஞ்சின் பிரேக் போடும்போது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் சிறப்பாக செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

சொகுசு

சொகுசு

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் சிறப்பான ஓட்டுதல் தரத்தை வழங்கும் என்பதோடு, திருப்பங்களில் சிறப்பான கட்டுப்பாடு கொண்ட அனுபவத்தை தரும். மேலும், முன்பக்கத்தில் அதிக எடை தாங்குவதற்கு ஏற்றதாக கடினமான சஸ்பென்ஷன்கள் பொருத்தப்படுவதில்லை. மிருதுவான சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டிருப்பதால் கூடுதல் சுகத்தை தரும்.

சர்வீஸ் எளிது

சர்வீஸ் எளிது

போலீஸ் மற்றும் டாக்சி ஆபரேட்டர்கள் பொதுவாக முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களை விரும்புவதில்லை. ஏனெனில், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களில் சீக்கிரம் பழுது வராது என்பதோடு, வந்தாலும் எளிதாக சரிசெய்ய முடியும். தவிர, பராமரிப்பு மற்றும் ரிப்பேர் செலவு குறைவாக இருக்கும்.

ஸ்போர்ட்ஸ் கார்கள்

ஸ்போர்ட்ஸ் கார்கள்

பெரும்பான்மையான ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவே வடிவமைக்கப்படுகிறது.

 தயாரிப்பாளர்களின் ஆர்வமின்மை

தயாரிப்பாளர்களின் ஆர்வமின்மை

பொதுவாக மார்க்கெட்டில் இருக்கும் பெரும்பான்மையான கார்கள் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவே வடிவமைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பு செலவீனம் குறைவு. எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பாகங்கள் ஒரே பகுதியாக வடிவமைக்க முடிகிறது என்பதால் உற்பத்தி செலவு குறைவு என்பதோடு, அசெம்பிளி பிரிவில் எளிதாக கையாள முடியும். இதனால், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களை வடிவமைப்பதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

 ப்ரண்ட் வீல் டிரைவ் சாதகம்

ப்ரண்ட் வீல் டிரைவ் சாதகம்

பனிக்கட்டிகள் படிந்த சாலைகள் அல்லது அதிக வழுக்குத் தரைகள் கொண்ட சாலைகளில் மிக மெதுவாக செல்லும்போது ப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும்.

Most Read Articles
English summary
The biggest benefit to rear wheel drive is that it spreads the loads of the car across all four tires of a car. In a rear wheel drive car the rear wheels do the pushing while the front wheels are reserved for the steering duties. In front wheel drive cars the front tires must perform both functions. Each front tire in a front wheel drive car must do two tasks. Both the cornering forces and the engine acceleration/deceleration forces in a front drive car act on the same tire.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X