வெள்ளத்தில் மூழ்கிய காரில் ஏற்படும் பிரச்னைகளும், சரிசெய்யும் முறைகளும்...!!

Written By:

சென்னையில், கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் நிற்கின்றன. சில இடங்களின் கார்களின் கூரைதான் தெரிகிறது. அந்தளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

அப்புறப்படுத்த முடியாத நிலையில், நிற்கும் அந்த கார்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் அந்த காரின் உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை காணலாம்.

இத செய்யாதீங்க

இத செய்யாதீங்க

வெள்ள நீரில் நின்றிருந்த அல்லது முழுவதுமாக மூழ்கியிருந்த காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர். நேராக சர்வீஸ் மையத்திற்கு டோ செய்து எடுத்துச் சென்று சரிசெய்வதுதான் ஒரே வழி. இருப்பினும், என்னென்ன பாகங்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அல்லது சேதமடைந்திருக்கும் என்பதற்காக அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை வழங்கியிருக்கிறோம்.

பேட்டரி இணைப்பு

பேட்டரி இணைப்பு

காரின் எலக்ட்ரிக்கல் சாதனங்கள் பழுது படாமல் இருக்கவும், மின் கசிவு ஏற்படாமல் இருக்கவும், பேட்டரியின் ஒயர் இணைப்பை துண்டித்து விடுங்கள். நவீன கார்களில் சிக்கலான ஒயரிங் அமைப்பு இருக்கும். எனவே, நன்றாக உலர்ந்த பின் எலக்ட்ரிக்கல் பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை, அதற்கான கருவிகளை வைத்து எலக்ட்ரிசியன் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

எலக்ட்ரிக்கல் சிஸ்டம்

எலக்ட்ரிக்கல் சிஸ்டம்

தற்போது வரும் கார்களில் சிக்கலான ஒயரிங் தொழில்நுட்பம் இருப்பதுடன், சென்சார்கள் அடிப்படையில் பல தொழில்நுட்பங்கள் இயங்குகின்றன. மேலும், எஞ்சின் இயக்கத்திற்கான இசியூ., கம்ப்யூட்டரிலும் கூட பிரச்னை ஏற்பட்டிருக்கும். எனவே, ஏபிஎஸ் போன்ற பல தொழில்நுட்பங்களின் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.

 எஞ்சினுக்குள் தண்ணீர்

எஞ்சினுக்குள் தண்ணீர்

கார்புரேட்டர் பொருத்தப்பட்ட பழைய கார் மாடல்களில் எஞ்சினுக்குள் தண்ணீர் சென்றிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, கார்புரேட்டர் பொருத்தப்பட்ட கார்களை மெக்கானிக்கை வைத்து ஆய்வு செய்வது அவசியம். தண்ணீரால் கியர்பாக்ஸின் பாகங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.

கூலிங் சிஸ்டம்

கூலிங் சிஸ்டம்

கூலிங் சிஸ்டத்திலும் தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். கூலண்ட்டுடன் தண்ணீர் கலந்தால், காரை இயக்கும்போது, எஞ்சின் அதிக சூடாவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கூலிங் சிஸ்டத்தில் இருக்கும் திரவத்தை முழுவதுமாக வெளியேற்றி சுத்தம் செய்தபின், புதிய திரவத்தை நிரப்ப வேண்டியிருக்கும்.

 எரிபொருள் டேங்க்

எரிபொருள் டேங்க்

நவீன கார்களில் எஞ்சினுக்குள் தண்ணீர் புகாதவாறு வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், முழுமையாக மூழ்கிய கார்களில் எரிபொருள் டேங்க்குகளில் கூட தண்ணீர் புகுந்திருக்கும். குறிப்பாக, டீசல் எஞ்சின் கொண்ட கார்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, இயக்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

எஞ்சின் சுத்தம் செய்யும் முறை...

எஞ்சின் சுத்தம் செய்யும் முறை...

முதலில் டிப் ஸ்டிக்கைவிட்டு எஞ்சினில் உள்ள ஆயிலில் தண்ணீர் கலந்துள்ளதா என்று சோதனை செய்யவும். அப்படி தண்ணீர் இருந்தால் இளகிய சர்க்கரை பாகு அல்லது பால் கலந்தது போன்று இருக்கும். உடனடியாக, காரின் முன்பகுதியில் ஜாக் ஏற்றி நிறுத்தவும். தண்ணீர் கலந்த எஞ்சின் ஆயிலை முழுவதுமாக வெளியேற்றி விட்டு புதிய எஞ்சின் ஆயிலை நிரப்பவும். பின்னர், முன்சக்கரங்களை கைகளால் சற்று நேரம் சுழல விட வேண்டும். காரை ஸ்டார்ட் செய்துவிட வேண்டாம். சற்று நேரம் கழித்து அந்த ஆயிலை வெளியேற்றி விட்டு, மீண்டும் புதிதாக எஞ்சினஅ ஆயில் நிரப்பவும். ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டரையும் புதிதாக மாற்றிவிட வேண்டும்.

மெக்கானிக் துணையுடன்

மெக்கானிக் துணையுடன்

வீட்டிலேயே எஞ்சின் ஆயிலை முற்படும்போது, மெக்கானிக் அல்லது கார் எஞ்சின் பற்றி நன்கு அறிந்தவர்கள் துணையுடன் செய்வது அவசியம். காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்ல முடியாதவர்களுக்காக இந்த தகவலை வழங்குகிறோம். இதற்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும்.

அவசரப்படாதீர்

அவசரப்படாதீர்

எப்படியாவது சொந்த ஊருக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற நினைத்து காரை ஸ்டா்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். பல லட்சம் காரை அவசரப்பட்டு ஸ்டார்ட் செய்து ரிப்பேரை பெரிதாக்கிவிட வேண்டாம். மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையங்களின் உதவியுடன் காரை சரிசெய்வதே ஒரே வழி என்பதை மனதில் வையுங்கள். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு, இழப்பீடு கோருவதற்கான முயற்சிகளையும் மறவாதீர். முழுவதுமாக பரிசோதித்த பின்னரே பயன்படுத்துவது அவசியம். அதுவரை பொறுமை காப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி

வெள்ளத்தில் மூழ்கிய காருக்கு இன்ஸ்யூரன்ஸில் இழப்பீடு கோருவதற்கான வழிகாட்டு முறைகள்!!

இரவு 8.30 மணிக்கு முக்கியச் செய்திகளின் தொகுப்பு

எமது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இரவு 8.30 மணிக்கு படிக்கத் தவறாதீர்கள்!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark