ஏர்பேக், ஏபிஎஸ் பாதுகாப்பு வசதிகளின் சாதக, பாதகங்கள்

கார் வாங்கும்போது ஏர்பேக், ஏபிஎஸ் பாதுகாப்பு வசதிகள் கொண்ட வேரியண்ட்டுகளை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். விபத்துக்களை தவிர்க்கவும், விபத்தின்போது பயணிகளின் பாதுகாப்பிற்கும் இந்த இரண்டு பாதுகாப்பு வசதிகளும் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது.

ஆனால், தற்போது இந்த வசதிகள் டாப் என்ட் எனப்படும் உயரிய வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏபிஎஸ், ஏர்பேக் வசதிகளை பாதுகாப்பு அம்சமாக கருதாமல், அதனை ஆடம்பர வசதியாக கருதி பல கார் நிறுவனங்கள் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த வசதியை வழங்குகின்றன. இந்த நிலையில், ஏபிஎஸ், ஏர்பேக்கின் சாதக, பாதகங்கள், இந்த வசதிகளை பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

 ஏபிஎஸ் சாதகங்கள்

ஏபிஎஸ் சாதகங்கள்

அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும்போது ஆபத்பாந்தவனாக ஏபிஎஸ் செயல்படுகிறது. சக்கரங்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதுடன், அவசரத்தில் பிரேக்கை பிடித்தாலும், சறுக்கிச் செல்லாமல் வீல்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தி குறைந்த தூரத்தில் காரை நிறுத்தும் அமைப்புதான் ஏபிஎஸ். விபத்துக்களை தவிர்க்க உதவும் அமைப்பாக செயல்படுகிறது.

ஏபிஎஸ் பாதகங்கள்

ஏபிஎஸ் பாதகங்கள்

சரளை கற்கள், மணல் மற்றும் பனி மூடிய சாலைகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்காது. மேலும், காரின் நிறுத்தும் இடைவெளியும் அதிகமாகிவிடும்.

ஏர்பேக் சாதகங்கள்

ஏர்பேக் சாதகங்கள்

15 கிமீ வேகத்துக்கு மேல் வாகனம் செல்லும்போது விபத்தில் சிக்கினால் பயணிகளை காக்கும் வகையில் விரிவடையும் உயிர்காக்கும் காற்றுப்பைகள் தற்போது மிக அவசியமான பாதுகாப்பு அம்சமாக உள்ளது. பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்படுவதையும், மிக மோசமான காயங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கும் வகையிலான அமைப்பாக செயல்படுகிறது.

ஏர்பேக் பாதகங்கள்

ஏர்பேக் பாதகங்கள்

உயிரை காக்கும் காற்றுப்பைகள் என்று அழைக்கப்பட்டாலும், சில வேளைகளில் உயிரை குடிக்கும் சாதனமாக மாறிவிடுகிறது ஏர்பேக். விபத்தின்போது சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தால் காற்றுப்பைகளால் பயணிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, ஸ்டீயரிங் வீலிலிருந்து 10 இஞ்ச் தூரத்தில் சரியான கோணத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே ஏர்பேக்கால் பயன் கிடைக்கும். ஏர்பேக் பொருத்தப்பட்ட கார்களில் குழந்தைகளை முன்புறம் அமர வைப்பதை தவிர்க்கவும். இல்லாவிடில், ஏர்பேக்கை ஆஃப் செய்து வைக்கவும்.

 இன்ஸ்யூரன்ஸ் அதிகம்

இன்ஸ்யூரன்ஸ் அதிகம்

ஏர்பேக் வசதி கொண்ட கார்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் அதிகம். இதற்கு காரணம், நகர்ப்புறத்தில் 15 கிமீ தாண்டியவுடன் விபத்து நிகழும்போது ஏர்பேக் விரிவடைந்துவிட்டால், டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் பாகங்கள் சேதமடைகின்றன. இதனை மாற்ற வேண்டியிருப்பதால் கூடுதலாக இன்ஸ்யூரன்ஸ் செலுத்த வேண்டியிருக்கும்.

நிலவரம்

நிலவரம்

ஒரு சில குறைகள் இருந்தாலும், இந்த இரண்டு வசதிகளும் மிக மிக அவசியமானதே. ஆனால், மார்க்கெட்டில் இன்றைக்கு நிலவரம் வேறாக இருக்கிறது. இந்த இரண்டு ஆக்சஸெரீஸ்களும் டாப் என்ட் கார்களில் மட்டுமே கிடைக்கின்றன. இதனால், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு வசதிகளும் எட்டாக் கனியாகவே உள்ளன. இல்லையென்றால், தங்கள் விரல் வீக்கத்தையும் மீறி பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டியிருக்கிறது.

 கூடுதல் பட்ஜெட்

கூடுதல் பட்ஜெட்

அதிகம் விரும்பப்படும், விற்பனையாகும் கார் மாடலான ஸ்விஃப்ட் காரின் பேஸ் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ், ஏர்பேக் கிடையாது. நடுத்தர விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ஏபிஎஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது ஏர்பேக் கிடையாது. டாப் என்ட்டில் மட்டுமே ஏர்பேக், ஏபிஎஸ் இரண்டும் சேர்ந்து கிடைக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

பேஸ் மாடலுக்கும், டாப் என்ட் மாடலுக்கான எக்ஸ்ஷோரூம் விலை வித்தியாசம் லட்சத்தை நெருங்குகிறது. ஏபிஎஸ், ஏர்பேக்குடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரு லட்சத்தை தாண்டி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆப்ஷனலாக ஏபிஎஸ்

ஆப்ஷனலாக ஏபிஎஸ்

இதுவே, பேஸ் வேரியண்ட்டுகளிலும் ஆப்ஷனலாக இந்த பாதுகாப்பு வசதிகளை சேர்த்தால் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ரூ.30,000 வரை மட்டுமே கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை தலையில் சுமத்தாது.

டொயோட்டா முன்மாதிரி

டொயோட்டா முன்மாதிரி

டொயோட்டா எட்டியோஸ் ஜி வேரியண்ட்டில் ஏர்பேக், ஏபிஎஸ் வசதியுடன் கிடைக்கிறது. கூடுதல் வசதிகளை திணிக்காமல் உரிய விலையில் இந்த வேரியண்ட்டை சேஃப்டி பேக் வேரியண்ட் என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது. இதனை பிற நிறுவனங்களும் பின்பற்றலாம். ஆல்ட்டோ 800 காருக்கு ஆப்ஷனலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் ஏர்பேக்கை ரூ.18,000க்கு வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கதுதான்.

ஆப்ஷனலாக கொடுத்தால்...

ஆப்ஷனலாக கொடுத்தால்...

ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை பேஸ் வேரியண்ட் முதல் அனைத்து வேரியண்ட்களிலும் ஆப்ஷனலாக கொடுத்து அதற்குரிய தொகையை மட்டும் கார் விலையில் சேர்க்க முடியுமானால், அதற்கு தயாரிப்பாளர்கள் முன் வந்தால் நிச்சயம் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு பயனும், பாதுகாப்பான பயணத்துக்கு வழிபிறக்கும்.

Most Read Articles

English summary
Car safety features, namely airbags and ABS are quite common in mediaum and high end cars. But the same is missing in the best selling models such as the Alto. Cost cutting being the reason. But is this a compromise automakers should be making? Should we reconsider before buying a car without safety features?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X