நுண்ணறிவு திறன் அடிப்படையில் டிரைவர்லெஸ் கார்களின் வகைகள்!

Written By:

ஓட்டுனர் உதவியில்லாமல் தானாக இயங்கும் கார்களை வடிவமைக்கும் முயற்சிகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் டிரைவர்லெஸ் கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுடன், பல புதிய நிறுவனங்களும் இந்த துறையில் இறங்கி வருகின்றன.

இந்த நிலையில், டிரைவர்லெஸ் கார்களை உருவாக்கும் நிறுவனங்கள் லெவல் 1, லெவல் 2 என்று தங்களது டிரைவர்லெஸ் கார்களின் நுண்ணறிவு திறனை குறிப்பிடுகின்றன. இதுகுறித்து தெளிவு படுத்தும் விதத்தில் சில தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நுண்ணறிவு திறன் அடிப்படையில் டிரைவர்லெஸ் கார்களின் வகைகள்!

சர்வதேச வாகன பொறியாளர்கள் அமைப்பு, கார்களின் நுண்ணறிவு திறனை பொறுத்து, லெவல் 0 முதல் லெவல் 5 வரை மொத்தமாக 6 வகைகளில் வகைப்படுத்தி உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

லெவல் 0 :

லெவல் 0 :

இது சாதாரண கார்களை குறிப்பிடுகிறது. அதாவது, ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்களை பூஜ்ய நிலை கார்களாக வகைப்படுத்தி உள்ளனர்.

நுண்ணறிவு திறன் அடிப்படையில் டிரைவர்லெஸ் கார்களின் வகைகள்!

அதாவது, ஸ்டீயரிங் சிஸ்டம், பிரேக், ஆக்சிலரேட்டர் ஆகிய அனைத்தும் ஓட்டுனர் மூலமாக இயக்கப்பட வேண்டும். மேலும், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ள கார்கள் கூட இந்த லெவல் 0 என்ற நிலையில்தான் வரையறுக்கப்பட்டுள்ளது.

 லெவல் 1:

லெவல் 1:

ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இயங்கும் கார் சில குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் தானாக இயங்கும் நிலை தொழில்நுட்பத்தை பெற்றிருக்க வேண்டும். அதாவது, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் கொண்ட கார்கள் இந்த லெவல் 1 என்ற நிலையில் குறிப்பிடப்படுகின்றன.

நுண்ணறிவு திறன் அடிப்படையில் டிரைவர்லெஸ் கார்களின் வகைகள்!

முன்பின் வரும் வாகனங்களுக்கு தக்கவாறு வேகத்தை குறைத்து இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் எனப்படுகிறது. தானியங்கி முறையில் பார்க்கிங் செய்யும் நுட்பம் கொண்ட கார்களும் இந்த நிலையில் இடம்பெறுகின்றன.

லெவல் 2:

லெவல் 2:

ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட கார்கள் இந்த நிலையில் வருகின்றன. ஆனால், ஓட்டுனர் சாலையை கண்காணித்தபடியே இருக்க வேண்டியது அவசியம் என்பதுடன், அவசர சமயத்தில் காரின் கட்டுப்பாட்டை ஓட்டுனர் எடுத்துக் கொள்ள வேண்டும். டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆட்டோபைலட் சிஸ்டம் இந்த நிலையில்தான் வருகிறது.

லெவல் 3:

லெவல் 3:

காரின் முழுமையான கட்டுப்பாட்டை தானியங்கி கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு செலுத்தும். ஆனால், குறிப்பிட்ட சமயத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை எடுப்பது அவசியம். அதாவது, ஓட்டுனர் உதவி அவசியம். இந்த வகை கார்கள் நெடுஞ்சாலையில் தடம் மாறுவது உள்ளிட்ட பணிகளை கூட செய்யும்.

லெவல் 4:

லெவல் 4:

இந்த கார்கள் முழுமையான தானியங்கி முறையில் செயல்படும். சரியான சூழல்களில் இந்த கார்கள் சிறப்பாக இயங்கும். குழப்பான நிலைகளில் உடனடியாக ஓட்டுனர் உதவியை கோரும். எனவே, இது முழுமையான டிரைவர்லெஸ் கார்களாக வரையறுக்கப்படுகின்றன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த லெவல் 4 சிறப்பம்சங்களை கொண்ட கார்களையே உருவாக்க முனைந்துள்ளன.

லெவல் 5:

லெவல் 5:

இவை முழுமையான தானியங்கி நுட்பத்தில் இயங்கும் டிரைவர்லெஸ் கார்களாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் என்பதே ஆப்ஷனல்தான். அதாவது, இந்த கார்களில் ஸ்டீயரிங் வீல் இருக்காது.

சாலையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கார்கள் பெற்றிருக்கும். தற்போது உருவாக்கப்பட்டு வரும் கார்களின் அடுத்த நிலைக்கு மேம்படுத்தும்போது அவை லெவல் 5 என்ற நிலையை எட்டும்.

English summary
Autonomous Car driving levels 0 to 5: We Explain You in Tamil.
Story first published: Friday, June 9, 2017, 12:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark