உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

உங்களில் காரின் கியர் பாக்ஸை உங்களிடம் இருக்கும் மோசமாக பழக்கங்கள் தான் பாழாக்குகின்றன. எந்தெந்த பழக்கங்கள் உங்கள் காரை பாழாக்குகிறது. அதை தடுக்க என்ன செய்யலாம் என் இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

இன்ஜினின் கட்டுப்பாட்டை முழுமையாக முறைப்படுத்துவது கியர் பாக்ஸ் தான். கியர் பாக்ஸ் பழுதானால் காரை நகர்த்துவது கடினம் தான். இவ்வாறு காரின் உயிர் நாடியாக இருக்கும் கியர் பாக்ஸை உங்களது சில செயல்கள் பாழாக்கி விடும்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

இது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி மேனுவல் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி இந்த விஷயங்களை நீங்கள் கையாள்வது மூலம் அந்த கியர் பாக்ஸின் வாழ்நாளை குறைக்கிறீர்கள். அவ்வாளாக பெரும்பாலோனோர் கையாளும் மோசமான பழக்கத்தை கீழே கொடுத்துள்ளோம்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

கூலண்ட் சிஸ்டம்

கியர் பாக்ஸிற்கு முக்கியமான எதிரி ஹீட் தான். உங்கள் காரின் கூலண்ட் சிஸ்டத்தை நீங்கள் சரியாக பராமரிக்காவிட்டால், கியர் பாக்ஸில் ஹீட் அதிகமாக அது பாழாகும் வாய்ப்புள்ளது. 2 ஆண்டுகளுக்கு முறை இதை பராமரிப்பது என்பது கட்டாயம்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

வீல் சிக்கல்

காரின் சகதியில் சிக்கியிருக்கும் போதோ அல்லது வேறு இடங்களில் டயர் மாட்டிக்கொள்ளும் போதோ நீங்கள் காரை அதில் இருந்து மீட்க அதிகமாக ரேஸ் செய்வீர்கள். ஆனால் அது வீணாக டயரை மட்டும் சுற்றுமே தவிர காரை காரை வெளியில் எடுக்காது இது கியர் பாக்ஸில் அதிக ஹீட்டை ஏற்படுத்தி பாழாக்கிவிடும்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

அதிக பாரம் இழுத்தல்

ஒவ்வொரு காருக்கும் அதன் இழுவை திறனை பொருத்து அதிக பட்ச எடையை தாங்கும் அளவை அளிக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு மேல் எடையை காரின் எற்றி கொண்டு காரை ஓட்ட முயன்றாலோ அல்லது அதிக பாரம் கொண்ட வாகனத்தை டோ செய்ய முன்றாலோ கியர் பாக்ஸில் அதிக ஹீட் ஏற்படும் இதனால் விரைவில் பாழாகும் வாய்ப்புள்ளது.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

ஆயில்

காரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றவேண்டும். இது இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் பகுதியில் ஏற்படும் ஹீட்களுக்கு கூலண்டாக செயல்படும். ஆயிலை மாற்றாத பட்சத்தில் ஹீட் அதிகரித்து கியர் பாக்ஸ் பாழாகி விடும்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

இன்ஜின் வார்மிங்

பொதுவாக பலரிடம் இருக்கும் மோசமாக பழக்கம் காரை ஸ்டார்ட் செய்யதவுடன் காரை நகர்த்துவது தான். கார் உள்ள இன்ஜின்கள் சூடாக சிறிது நேரம் பிடிக்கும். இதனால் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்து சில நிமிடங்கள் கழித்து காரை நகர்த்துவது தான் காரின் ஆயுளுக்கு நல்லது. இந்த பழக்கம் தான் உங்கள் கியர் பாக்ஸின் ஆயுளையும் பாதுகாக்கும்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

பிரேக்

காரின் தேவையில்லாமல் பிரேக் பிடிப்பதும் காரின் கியர் பாக்ஸை பாதிக்கும். மேலும் சிலர் தேவைக்கு அதிகமாக பிரேக்கை அழுத்துவர் இதனால் காரில் உள்ள கியர் பாக்ஸில் விரைவில் பழுது ஏற்படலாம்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

பெரும்பாலும் டிரைவர்களின் கவனக்குறைவே கியர் பாக்ஸின் வாழ்நாளை குறைக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள விஷயங்கள் உங்கள் காரின் கியர் பாக்ஸை மட்டுமல்ல காரின் மற்ற பாகங்களையும் பாதிக்கும்.

உங்கள் கார் கியர் பாக்ஸை பாழாக்கும் விஷயங்கள்

மைலேஜ் பிரச்னை, டயர் தேய்மானம், பிரேக் பெயிலியர் உள்ளிட்ட சில விளைவுகளையும் இது ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்க காரை முறையாக கையாள்வதும், சரியான நேரங்களில் பராமரிப்பதும் தான் ஒரே வழி.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
Bad Habits That Affect The Transmission Life Expectancy. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X