ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை வாங்க திட்டமிட்டு வருகிறீர்களா? அப்போ நீங்க சரியான செய்திக்குதான் வந்துள்ளீர்கள். ஏனெனில், பயன்படுத்தப்பட்ட 2-வீலரை வாங்கவுள்ளீர்கள் எனில் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பிரிவு வாரியாக இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

எதற்காக 2-வீலரை வாங்குகிறீர்கள்

செகண்ட்-ஹேண்ட் 2-வீலர் ஆனது மிக பெரிய சந்தையாகும். அதாவது, தரத்தை பொறுத்து அதிக விலையில் கிடைக்கும் ஓர் மாடல் வாகனம் குறைந்த விலையிலும் கிடைக்கும். குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், அந்த 2-வீலர் தயாரிக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது என்று அர்த்தம். இதனால் எதிர்காலத்தில் பராமரிப்பு செலவும் அதிகமாக வரலாம்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

தோற்றமும் ஸ்டைலாக இருக்க வேண்டும், அதேநேரம் சற்று புத்துணர்ச்சியானதாகவும் மோட்டார்சைக்கிள் இருக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சற்று கூடுதலாக செலவழித்தாக வேண்டும். ஸ்கூட்டர்கள் குறைந்த விலையிலேயே நல்ல தரத்தில் கிடைக்கலாம். ஆனால் ஸ்கூட்டர்களை நீண்ட தூர பயணங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்ல இயலாது. ஆகவே, எதற்காக நீங்கள் செகண்ட்-ஹேண்டில் 2-வீலர் வாங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

எல்லா இடங்களிலும் ஆராயுங்கள்

இந்த 2-வீலர் தான் வாங்க வேண்டுமென உறுதியான உடன், எதாவது ஒரு டீலரையோ அல்லது ஆன்லைன் தளத்தையோ தொடர்பு கொண்டால் மட்டும் போதாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், செகண்ட்-ஹேண்டில் 2-வீலர் மட்டுமில்லை, எந்தவொரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் ஒரு இடத்தை மட்டும் தொடர்பு கொள்ளாதீர்கள். குறைந்தப்பட்சம் 2,3 இடங்களிலாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

முதலில், நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் செகண்ட்-ஹேண்டில் 2-வீலர் உள்ளதா என்பதை கேட்கவும். அதன்பின் அருகில் உள்ள மெக்கானிக்குகள் மற்றும் டீலர்களை தொடர்பு கொள்ளுங்கள். இதன் மூலமாக செகண்ட்-ஹேண்ட் 2-வீலர் விற்பனைக்கு உள்ளது என்பது தெரியவந்தாலும், ஆன்லைன் தளங்கள், சமூக வலைத்தள பக்கங்களை ஆராய்ந்து பாருங்கள்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

முழுவதும் சோதனையிடுங்கள்

ஒரு வாகனம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு புத்தம் புதியதாக வெளிவந்துள்ளது என்றால் அதனை சோதனை செய்ய தேவை இருக்காது. ஏனெனில் தொழிற்சாலையிலேயே பல்வேறு சோதனைகளுக்கு பிறகே ஒரு வாகனம் விற்பனைக்கு வருகிறது.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

ஆனால் மற்றொருவரால் பயன்படுத்தப்பட்டது என்றாலே அதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை நம்மால் கண்டறிய இயலாது. ஆதலால், உரிமையாளர் சமீபத்தில் தான் வாங்கப்பட்டது என கூறினாலும், செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்போது அதன் தரத்தினை முழுவதுமாக ஆராய்ந்து கொள்வது நல்லது.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

இதற்காக, முடிந்தால் கூடவே நன்கு பழக்கப்பட்ட மெக்கானிக்கையும் அழைத்து செல்லலாம். வாகனத்தில் எங்கெங்கு கீறல்கள் உள்ளன என்பதையும், பேனல்கள் எந்த பகுதிகளில் உடைந்தோ அல்லது லூசாகவோ உள்ளன என்பதையும் சுற்றி சுற்றி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்த குறைப்பாடுகளை எல்லாம் அறிந்து வைத்திருந்தால், இறுதியாக விலையை நிர்ணயிக்கும்போது எளிதாக இருக்கும்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

ஆவணங்களை சரிப்பார்த்தல்

மேற்கூறப்பட்ட அனைத்தையும் பின்பற்றி ஒரு செகண்ட்-ஹேண்ட் 2-வீலரை தேர்வு செய்த பின்னர் வாகனத்தின் ஆவணங்களை உரிமையாளரிடம் இருந்து பெற ஆரம்பித்துவிட வேண்டியதுதான். வாகன பதிவு சான்றிதழில் இதற்குமுன் அந்த வாகனத்தை எந்தெந்த உரிமையாளர்கள் பயன்படுத்தினர் என்பது தெரிந்துவிடும்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

உங்களுக்கு சந்தேகம் இருப்பினும் உரிமையாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு பாருங்கள். வாகனத்தின் இன்ஸ்சூரன்ஸ் இன்னும் எத்தனை காலத்திற்கு என்பதை இன்ஸ்சூரன்ஸ் ஆவணத்தில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் பேட்டரி கடைசியாக எப்போது மாற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

வேறு மாநிலத்தில் இருந்து வாகனத்தை வாங்குகிறீர்கள் என்றால் ‘எதிர்ப்பு இல்லை சான்றிதழ்' (NOC)-ஐ உரிமையாளரிடம் இருந்து பெற வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின் ‘பொலியூஷன் அண்டர் கண்ட்ரோல்' (PUC) சான்றிதழுக்கு உட்படுத்தப்பட்டதாக வாகனம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

விலையை நிர்ணயுங்கள்

ஏற்கனவே கூறியதுபோல், செகண்ட்-ஹேண்டில் ஒரு வாகனத்தை வாங்குகிறீர்கள் எனில், அதன்பின் அந்த வாகனத்தை எத்தகைய செலவை கொண்டுவர உள்ளது என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் அப்போதுதான் அதற்கேற்ப விலையில் வாகனத்தை முடித்து கொள்ள முடியும்.

ஏமாந்துறாதீங்க... செகண்ட்-ஹேண்டில் 2-வீலரை வாங்கும்முன் இத்தனை விஷயங்களை கவனிக்கனும்!!

ஆதலால் 2-வீலர்களை பற்றியும், அவற்றுள் பொருத்தப்படும் பாகங்களை பற்றியும் ஓரளவிற்கு தெரிந்தால் மட்டுமே செகண்ட்-ஹேண்டில் 2-வீலர் வாங்க பாருங்கள். இல்லையெனில், எளிமையாக கூடவே ஒரு மெக்கானிக்கை அழைத்து சென்றுவிடுங்கள். ஏனெனில் தனிநபர் ஒருவரிடம் இருந்து வாகனத்தை வாங்குகிறீர்கள் எனில் அதற்கு ரசீதை பெறுவது என்பது எல்லாம் இயலாத காரியமாகும்.

Most Read Articles

English summary
Before buying a used two wheeler you should know some tips and tricks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X