சிக்னலில் நிற்கும் போது எந்த கியரில் காரை நிறுத்த வேண்டும்? ஆட்டோ கியர் காரில் ரொம்ப பேருக்கு இந்த குழப்பம்

ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் டிராஃபிக்கில் நிற்கும் போது எந்த கியரில் காரை நிறுத்த வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த குழப்பத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவை வழங்கியுள்ளோம்.

நாம் சாதாரணமாக கார்களில் பயணிக்கும் போது டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் போது தேவையில்லாமல் பிரேக்கை பிடித்துக்கொண்ட நிற்காமல் காரை நியூட்ரலில் போட்டு விட்டு, தேவைப்பட்டால் ஹேண்ட் பிரேக்கை போட்டு காரை நிறுத்தி சிக்கலுக்காகக் காத்திருப்போம்.

சிக்னலில் நிற்கும் போது எந்த கியரில் காரை நிறுத்த வேண்டும்? ஆட்டோ கியர் காரில் ரொம்ப பேருக்கு இந்த குழப்பம்

சிக்னல் பச்சைக்கு மாறியதும், கிளட்ச்சை பிடித்து கியரை மாற்றி பிரேக்கை ரிலீஸ் செய்து பயணிக்கத் துவங்குவோம். இது எல்லாம் மேனுவல் கியரை பயன்படுத்தும் நாம் செய்வதுதான். ஆனால் ஆட்டோமெட்டிக் கியரில் என்ன செய்ய வேண்டும். ஆட்டோமெட்டிக் கியரை பொருத்தவரை பெரும்பாலும் டிரைவ், நியூட்ரல், ரிவர்ஸ், பார்க்கிங் ஆகிய 4 மோடுகள் தான் இருக்கும்.

இதில் டிரைவ் மற்றும் ரிவர்ஸ் மோடில் கியரை போட்டு காரை நிறுத்த முடியாது மீதம் இருப்பது பார்க்கிங் மற்றும் நியூட்ரல் இதில் எந்த கியரில் காரை நிறுத்துவது சிறந்த முறை எது நல்லது என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். நியூட்ரலில் இருக்கும் போது ரோடு சமதளமாக இருந்தால் பரவாயில்லை கார் அங்கே நிற்கும். ஒரே வேளை ஏற்றம்/ இறக்கமாக இருந்தால் பிரேக்கை பிடிக்க வேண்டும். பார்க்கிங் மோடில் போட்டாலும் பிரேக் பிடித்த நிலையிலேயே இருக்கும்.

இது இரண்டும் தான் இந்த இரண்டு வகை கியர்களுக்கும் வித்தியாசம். ஆனால் எது சரியான முறை என்பது என்ன வகையான ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை கொண்டது என்பதைப் பொருத்து மாறுபடும். இதை வரிசையாகப் பார்க்கலாம்.

ஏஎம்டி

ஏஎம்டி என்பது ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன். பெரும்பாலான கார்களில்இந்த ஆட்டோமெட்டிக் கியர் சிஸ்டம் முறை தான் இருக்கிறது. இது மேனுவல் கியர் தான். ஆனால் தானாகவே கியர் மாற்றுவது, கிளட்சை பயன்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்து கொள்ளும். இப்படி என்றால் நீங்கள் காரை மெதுவாக நிறுத்தும் போதே கியர் குறைந்திருக்கும். அப்படியே நிறுத்தினால் மேனுவல் கியரில் முதல் கியரில் நிறுத்துவதற்குச் சமம் அதனால் காரை கியரில் நிறுத்தாமல் நியூட்டரில் நிறுத்துவது சிறந்தது. கார் நகராமல் இருக்க ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தலாம்.

டார்க் கன்வெர்டர்

டார்க் கன்வெர்டர் கியர் முறைகொண்ட கார்களில் நீங்கள் சிறிது நேரம் காரை நிறுத்த வேண்டும் என்றால் அதற்காகக் காரை நியூட்ரல் அல்லது பார்க்கிங் கியருக்கு கொண்டு வருவது தேவையில்லாதது. கியரில் சிறிது நேரம் கார் நின்றால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு நிமிடத்திற்கு மேல் காரை நிறுத்த வேண்டியது இருந்தால் மட்டும் நியூட்ரல் அல்லது பார்க்கிங் ஆகிய மோட்களை பயன்படுத்தலாம்

சிவிடி

சிவிடி கியர் பாக்ஸை பொருத்தவரை நீங்கள் பிரேக்கிலிருந்து காரை எடுத்தால் கார் நகரப்போகிறது எனத் தயாராகிவிடும். இதைத் தடுக்க பிரேக்கை மதித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதில் பார்க்கிங் மோடில் போட்டால் டிரைவர் காரை நிறுத்தவிட்டு இறங்கப்போவதாக நினைத்து கதவுகள் தானாக அன்லாக் ஆகிவிடும். அதனால் இந்த கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் சிக்னலில் காரை நிறுத்த நியூட்ரலில் போட்டு பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்த வேண்டும்.

டிசிடி

டிசிடி என்பது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், இது அட்வான்ஸ்டு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸாகும். இந்த கியர் பாக்ஸில் இருக்கும் பிரச்சனை மெதுவாக நகரும் போது அல்லது போக்குவரத்து நெருக்கடியில் செல்லும் போது கியர் பாக்ஸ் சூடாகிவிடும். அதனால் இந்த கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் பயணித்தால் சிக்னலில் நிற்கும் போது நியூட்ரலுக்கு கொண்டு வந்து கியர் பாக்ஸை சற்று ரிலாக்ஸ் செய்வது சிறந்தது. இதனால் கியர் பாக்ஸ் சூடாவது குறையும். சிக்னல் பச்சையில் விழுந்ததும் கியரை மாற்றிக்கொண்டு பயணிக்கத் துவங்கலாம்.

Most Read Articles
English summary
Best Mode to stop automatic gear cars in traffic signal
Story first published: Monday, November 21, 2022, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X