கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ஒரு வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் பார்த்தால் அதில் பிரேக் அசிஸ்ட் என்ற ஒரு அம்சத்தை நீங்கள் பார்த்திருக்க கூடும் இதை சிலர் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட் என கூறுவார்கள்.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இன்று நவீனமாக வரும் புதிய வாகனங்களில் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. முக்கியமான எஸ்யூவி கார்களில் இந்த அம்சங்கள் நிச்சயம் அமைந்திருக்கும். ஒரு சில கார்களில் மட்டுமே இந்த வசதியில்லை.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இந்த பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் சாதாரண பிரேக்கை விட சிறப்பாக செயல்படும். நீங்கள் குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீர் என பிரேக் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் பிரேக் பிடித்தவுடன் சாதாரண பிரேக், நீங்கள் பிரேக் பிடித்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறதோ அதை விட குறைவான தூரத்தில் இந்த பிரேக் அசிஸ்ட் பொருத்திய கார் உங்கள் காரை நிறுத்தும்.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

அவசர காலங்களில் பிரேக் பிடிக்கும் போது இந்த அம்சம் உங்களை விபத்தில் இருந்து பெரும்பான்மையான நேரங்களில் காக்கும். வேகமாக செல்லும் போது திடீர் என அதிக பிரஷரில் பிரேக் பிடித்தால் இந்த பிரேக் அசிஸ்ட் காரில் உள்ள ஏபிஎஸ் உடன் சேர்ந்து செயல்படும். இன்று விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ஏபிஎஸ் வசதி இருக்கிறது.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ஏபிஎஸ் எவ்வாறு உங்கள் கார் வேகமாக செல்லும் போது பிரேக் பிடிப்பதால் உங்கள் காரின் வீல் லாக் ஆகி அதன் காரணமாக ஸ்கிட் ஆவதை தடுத்து உங்களை விபத்தில் இருந்து காக்கிறதோ அது போல இந்த பிரேக் அசிஸ்ட் அதிக பவருடன் பிரேக் பிடித்து நீங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க மேலும் உதவி செய்யும்.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இந்த பிரேக் அசிஸ்ட் எல்லாருக்கும் ஓரே விதமான வேலை செய்யுமா என்று கேட்டால் இல்லை. ஒவ்வொருவருக்கம் ஒவ்வொரு டிரைவிங் ஸ்டைல் இருப்பது போல ஒவ்வொருவருக்கும் பிரேக் பிடிக்கும் பழக்கமும் மாறுபடும்.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

அந்த வகையில் பிரேக்கில் டிரைவர் கொடுக்கும் அழுத்தத்தை பொருத்தே அதன் செயல்பாடு அமையும். பொதுவாக சாதாரண பிரேக்கில் ஒருவர் பிரேக் பிடிக்கும் போது எவ்வளவு தூரம் தள்ளி நிற்குமோ அதை விட 20-45 சதவீதம் வரை பிரேக் அசிஸ்ட் பொருத்தப்பட்ட கார் நிற்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

மற்றொரு ஆய்வில் ஒரு டிரைவர் தனது காரை 60 கி.மீ. வேகத்தில் செலுத்தி கொண்டிருக்கும் போது திடீர் என பிரேக் பிடித்தால் சாதாரணமாக 240 அடி அதாவது 73 மீட்டர் தூரம் தள்ளி கார் நிற்கிறது என எடுத்துக்கொள்வோம். ஆதே சூழ்நிலையில் பிரேக் அசிஸ்ட் பொருத்தப்பட்ட காரில் அவர் பிரேக் பிடித்தால் சுமார் 130 அடியிலேயே கார் நின்று விடும் என சொல்கிறது.

கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பிரேக் அசிஸ்ட் தொழிநுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ஆட்டோமொபைல் துறைக்கு இந்த பிரேக் அசிஸ்ட் என்ற தொழிற்நுட்பம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்தியாவில் விபத்துக்களை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. இந்த பிரேக் அசிஸ்ட் தொழிற்நுட்பத்தில் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறையும். விரைவில் எல்லா வாகனங்களில் இந்த பிரேக் அசிஸ்ட் தொழிற்நுட்பம் வரும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
What is Brake Assist? Brake Assist System Explained. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X