வேகமாகச் செல்லும் காரை நிறுத்தும் போது முதலில் பிரேக்கை மிதிக்க வேண்டுமா? கிளட்சை மிதிக்க வேண்டுமா?

காரில் வேகமாகச் செல்லும் போது காரை நிறுத்துவதற்காக முதலில் பிரேக்கை பிடிக்க வேண்டுமா? அல்லது கிளட்சை பிடிக்க வேண்டுமா?

இன்று காரை பயன்படுத்தும் பலருக்கு இருக்கும் தீராத குழப்பம் இது தான். காரில் நாம் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். திடீரென குறுக்கே ஏதேனும் வருகிறது, காரை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் காரில் பிரேக்கை பிடிக்க வேண்டுமா? அல்லது கிளட்சை பிடிக்க வேண்டுமா எனப் பலர் குழம்பி வருகின்றனர்.

வேகமாகச் செல்லும் காரை நிறுத்தும் போது முதலில் பிரேக்கை மிதிக்க வேண்டுமா? கிளட்சை மிதிக்க வேண்டுமா?

முதலில் பிரேக்கை பிடித்தால் கார் உடனடியாக ஸ்டால் ஆகி ஆஃப் ஆகி விடுகிறது. முதலில் கிளட்சை பிடித்தால் காரை குறுகிய இடத்தில் நிறுத்த முடிவதில்லை. இந்த குழப்பத்திற்குத் தீர்வு மிகவும் எளிமைதான் நீங்கள் செல்லும் வேகம் மற்றும் இடத்திற்குத் தகுந்தார் போல எதை முதலில் அழுத்த வேண்டும் என்பது மாறிக்கொண்டே இருக்கும். இதைப் பற்றி அதிக தொழிற்நுட்ப தகவல் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

சமதளமான சாலையில் சென்று கொண்டிருந்தால் நீங்கள் காரில் செல்லும் வேகம் முக்கியம் 40 கி.மீ அதிகமாக வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தால், நாம் முதலில் பிரேக்கை தான் பிடிக்க வேண்டும். கார் குறிப்பிட்ட வேகத்திற்குக் கீழ் குறையும் வரை ஸ்டால் ஆகாது. அதனால் முதலில் பிரேக்கை பிடித்தால் காரின் வேகம் வேகமாகக் குறையும் பின்னர் நமக்கு கிளட்சை பிடிக்கவும் நேரம் கிடைக்கும்.

இதுவே 20-30 கி.மீ வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் கிளட்சைதான் பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் கார் ஸ்டால் ஆகாது. கிளட்சை பிடித்த அடுத்த மாத்திரத்திலேயே பிரேக்கை பிடிக்க வேண்டும். அப்பொழுது தான் கார் உடனடியாக நிற்கும்.

அதே போல நீங்கள் ஏற்றம் அல்லது மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பயணிக்
கும் போது ஏற்றமாக உள்ள பகுதியில் காரை பிரேக் பிடிக்க வேண்டும் என்றால் ஆக்ஸிலேட்டரை விட்டாலே வேகமாக கார் நின்றுவிடும். அதனால் அப்படியான ரோடுகளில் ஆக்ஸிலேட்டரை விடும் முன்பு கிளட்சை பிடித்துக்கொள்ளுங்கள். பிரேக்கிலும் கவனம் தேவை புவி ஈர்ப்பு விசையில் கார் பின் நோக்கிக்கூட நகர்ந்து செல்ல வாய்ப்பு உண்டு.

ஒரு வேளை சம தள சாலைகளில் செல்லும் போது காரை நிறுத்த வேண்டாம் வேகத்தை மட்டும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலைகளில் காரில் ஆக்ஸிலரேட்டரிலிருந்து காரை எடுத்து பின்னர் பிரேக்கை மட்டும் அழுத்தினால் போதும். இந்த மாதிரியான நேரங்களில் கிளட்சை பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Brake or clutch which is the first priority to stop the vehicle
Story first published: Saturday, November 19, 2022, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X