உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்?

உங்கள் கார் குறித்து யார் உங்களிடம் பேசினாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பது தான்.

உங்கள் கார் குறித்து யார் உங்களிடம் பேசினாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பது தான். இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக கார் வைத்திருப்பவர்கள் பெரிதும் கவலைப்படக்கூடிய விஷயம் இந்த மைலேஜ் தான்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

இதன் காரணமாக தான் கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதை விளம்பரங்களில முக்கியமாக குறிப்பிடுவர். பல கார்களுக்கு மைலேஜ் தான் விற்பனைக்கான கீ ஆகவே இருக்கும். இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

பெரும்பாலும் கார் நிறுவனங்கள் சொல்லும் அளவிற்கு கார்கள் மைலேஜை தருவதில்லை அதை விடகுறைவாக தான் தருகின்றன. இதற்கு காரணம் அவர்கள் மைலேஜை கணக்கிடும் முறைதான். அவர்கள் காரை டிரட் மில் போன்ற ஒரு கருவியில் ஓடவிட்டு எவ்வளவு மைலேஜ் தருகிறது என கணக்கிடுவர்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

ஆனால் நாம் இந்திய ரோட்டில் ஓட்டுகிறோம். இங்கு டிராபிக், மோசமான ரோடுகள், என பல விஷயங்களை சந்திக்க வேண்டியது உள்ளதால் கார் நிறுவனங்கள் சொல்லும் மைலேஜை பெறுவது கடினம் தான். எனினும் அவர்கள் சொல்லும் மைலேஜிற்கு சற்று நெருக்கான மைலேஜ் நிச்சயம் கிடைக்கும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

அதே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே மாடல் கார் வைத்துள்ளீர்கள் என்றாலும் உங்கள் இருவருக்கும் மைலேஜில் மாற்றம் இருக்கும், இந்த மாற்றத்திற்கு காரணங்கள் நீங்கள் வாகனத்தை கையாளும் விதமும் பராமரிக்கும் விதமும் தான். நீங்கள் எப்படி வாகனங்களை பராமரிப்பது , கையாள்வது இதன் மூலம் நீங்கள் காரின் மைலேஜை எப்படி அதிகரிக்கலாம் என கீழே பார்ப்போம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

பெட்ரோல்/டீசல்

நீங்கள் ஒரே பியூயல் பிராண்ட் பெட்ரோல்/டீசல் போடுவது நல்லது. வேறு வேறு இடங்களில் பெட்ரோலின் தரத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதை காரின் இன்ஜினால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நல்ல மைலேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் ஒரே பியூயல் ஸ்டேஷன்களின் பெட்ரோலை போடுவது நல்லது. ஒரே பிராண்ட் பெட்ரோல் என்றாலும் ஒவ்வொரு பியூயல் ஸ்டேஷனுக்கும் வித்தியாசம் இருக்கும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

ஓடோ/ டிரிப் மீட்டர்கள்

உங்கள் காரின் மைலேஜை அடிக்கடி கணக்கிட்டுக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் காரின் மைலேஜ் குறைவதும், அதற்கான காரணமும் உங்களுக்கு தெரியும், பொதுவாக கார்களில் ஓடோ மீட்டர், டிரிப் மீட்டர் என இரண்டு மீட்டர்கள் இருக்கும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

ஓடோ மீட்டர் என்பது நீங்கள் கார் வாங்கியதில் இருந்து இதுவரை எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது என்பதை கணக்கிடுகிறது. அதே நேரத்தில் டிரிப் மீட்டர் என்பது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப் கார் எவ்வளவு ஓடியுள்ளது என்பதை கணக்கிடுவதற்கானது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

நீங்கள் ஓவ்வொரு முறை காரில் பெட்ரோலை நிரப்பும் போதும் டிரிப் மீட்டரை ரீசெட் செய்து கொள்ளுங்கள், அடுத்த முறை பெட்ரோல் போடும் போது எவ்வளவு தூரம் போயுள்ளீர்கள் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும் போதும் உங்களது காரின் மைலேஜை கணக்கிடமுடியும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

சில கார்களில் டிரிப் ஏ, டிரிப் பி என இரண்டு டிரிப் மீட்டர்கள் இருக்கும் இது நாம் அதிக தூரம் டிரிப் செல்லும் போது டிரிப் முடியும் முன்பே அடிக்கடி பெட்ரோல் போட வேண்டிய சூழ்நிலை வரும் அந்த நேரங்களில் டிரிப் ஏ வில் முழு டிரிப்பிற்கான தூரத்தையும், டிரிப் பி யில் ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும் போதும் பயணம் செய்த தூரத்தை கணக்கிட உதவும்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

டிரைவிங் சைக்கிள்

பொதுவாக கார் ஒருவரின் டிரைவிங்கில் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஒரே ஆள் வாகனத்தை ஓட்டுவது என்பது முடியாத காரியம் அந்த நேரங்களில் இரண்டு அல்லது மூன்று பேர் வாகனத்தை மாறி மாறி ஒட்ட வேண்டி ய சூழ்நிலை வரும் அந்த நேரங்ளில் மைலேஜில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

இதை கட்டுப்படுத்த ஒவ்வொரு டிரைவர் மாறும் போதும் பெட்ரோலின் அளவையும், பயண தூரத்தையும் கணக்கிட வேண்டும். இதன் மூலம் யார் டிரைவிங்கில் அதிக பெட்ரோல் செலவாகிறது என்பதை கணக்கிட்டு அவர்களை டிரைவிங் ஸ்டிலை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

கார் பராமரிப்பு

உங்கள் காரின் மைலேஜ் என்பது பெட்ரோல் மற்றும் இன்ஜின் செயல்பாட்டில் மட்டும் இருப்பதில்லை, உங்கள் காரின் மற்ற பாகங்களை பெருத்தும் மாறுகிறது. உதாரணத்திற்கு உங்கள் காரின் வீல்களில் ஏர் குறைவாக இருந்தால் வீல் சுற்றுவதற்கு சற்று சிரமப்படும் அந்த நேரங்களில் பெட்ரோல் அதிகம் செலவாகும். சில நேரங்களில் பியூயல் பம்ப்களில் உள்ள பிரச்சனைகளாலும் மைலஜில் பாதிப்பு ஏற்படலாம் அதனால் நீங்கள் காரை சரியான நேரத்தில் பராமரித்து கொள்ளவது நல்லது.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

தொழிற்நுட்பம்

இன்று செல்போனில் கார் மைலேஜை கணக்கிடும பல ஆப்ஸ்கள் வந்து விட்டது. இதில் நாம் காருக்கு எப்பொழுது எவ்வளவு பெட்ரோல் போடுகிறோம் என்பதை பதிவு செய்தாலே போதும், அது நாம் அடுத்த பெட்ரோல் போடும் போது எவ்வளவு தூரம் பயணத்துள்ளோம் என்பதை கணக்கிட்டு நமது காரின் மைலேஜை கூறுகிறது. ஆதே நேரங்களில் நாம் செயல்பாடுகளை கணக்கிட்டு இன்னும் அதிக மைலேஜை பெற என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களையும் வழங்குகிறது. இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது? அதை எப்படி அதிகப்படுத்தலாம்

ஆனால் இந்த மொபைல் ஆப்ஸ்கள் பயண நேரத்தில் இண்டர்நெட் சிக்னல்கள் கட் ஆனாலோ, செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனாலோ அந்த நேரத்திற்கான பயண தகவல்களை எடுத்துக்கொள்வதில்லை. அந்த மாதிரியான நேரங்களில் இந்த ஆப்ஸ்கள் சரியான தகவல்களை தராது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Calculate your car's fuel efficiency correctly. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X