கார் பேட்டரி ஒயரை தொட்டால் ஷாக் அடிக்குமா?... சில உண்மைகள்!!

எப்போதாவது கார் பேட்டரி ஒயரை தொட்டிருக்கிறீர்களா?, பேட்டரியின் ஜம்பரிலிருந்து வரும் கருப்பு மற்றும் சிவப்பு ஒயரை கைகளால் பிடிக்கும்போது ஷாக் அடிக்குமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடும் செய்திதான் இது. ஸ்லைடரில் கார் பேட்டரிகள் குறித்த சில தவறான எண்ணங்களும் அதற்கான உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

உயிரை குடித்துவிடுமா?

உயிரை குடித்துவிடுமா?

கார் பேட்டரியின் நேர்முனை மற்றும் எதிர்முனைகளை தொடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா? அடுத்த ஸ்லைடற்கு வாருங்கள்.

இதுதான் உண்மை

இதுதான் உண்மை

காரில் பொருத்தப்பட்டிருக்கும் 12 வோல்ட் திறன் கொண்ட பேட்டரியின் மின்சாரம் மனிதனின் உடல் முழுவதும் பரவி தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது இல்லை. மேலும், கார் பேட்டரியின் 12 வோல்ட் மின்சார தாக்குதலை மனித உடல் தாங்கும் திறனை பெற்றிருக்கிறது. 60 வோல்ட் மின்சாரம்தான் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சங்கிலி போடக் கூடாதா?

சங்கிலி போடக் கூடாதா?

சிலர் சங்கிலி, மோதிரம், கைசங்கிலி போன்றவற்றை அணிந்து கார் பேட்டரியை தொடும்போது ஷாக் அடிக்கும் என்ற கருத்து உள்ளது. உலோகங்களை அணிந்து கார் பேட்டரியின் ஒரு முனையை தொடும்போது எதுவும் நடக்காது. நீங்கள் அணிந்திருக்கும் உலோகம் மூலம் இரண்டு முனைகளும் சேர்ந்தால் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கவனம்...

கவனம்...

கார் பேட்டரியின் நேர்முனையை தொட்டுக் கொண்டிருக்கும்போது காரின் வேறு எந்த பகுதியையும் தொட வேண்டாம். ஏனெனில், கார் பேட்டரியின் எதிர்முனை காரின் பாடியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அப்போது சிறிய அளவிலான ஷாக் அடிப்பதை உணரும் வாய்ப்பு இருக்கிறது.

ஆசிட் கசிவு

ஆசிட் கசிவு

பேட்டரியில் இருந்து அமிலம் கசிந்து சில சமயம் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, அமில கசிவு இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளவும்.

தீப்பொறி ஆபத்து

தீப்பொறி ஆபத்து

கார் பேட்டரியின் அருகில் தீப்பொறி அல்லது நெருப்பு பட்டால் பேட்டரியில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு வெடித்து, அதில் இருக்கும் அமிலம் சிதறி காயங்களை ஏற்படுத்திவிடும்.

 தீப்பிடிக்கும் ஆபத்து

தீப்பிடிக்கும் ஆபத்து

கார் பேட்டரியின் நேர்மின் முனை மற்றும் எதிர்மின் முனைகளில் தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

மின் கசிவு

மின் கசிவு

கார் பேட்டரி கேபிள்களிலிருந்து மின் கசிவு ஏற்படும்போது, கேபிள் சூடாகி தீப்பிடிக்கும் ஆபத்து இருக்கிறது.

கார் பேட்டரி பற்றி..

கார் பேட்டரி பற்றி..

கார் பேட்டரியை ஆங்கிலத்தில் SLI பேட்டரி என்று அழைக்கின்றனர். அதாவது, Starting, Lighting, Ignition என்பதன் சுருக்கத்தை வைத்து SLI பேட்டரி என்று கூறுகின்றனர். இவை லீட் ஆசிட் வகையிலான பேட்டரி. இதில், 6 செல்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு செல்லும் 2.1 வோல்ட் மின் திறன் கொண்டது. முழு சார்ஜில் 12.6 வோல்ட் மின்சாரத்தை தேக்கி வைத்து வழங்கும்.

Most Read Articles

English summary
Can Car Battery Shock Kill You?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X