கார் நடு ரோட்டில் நின்று போனால் பதறாமல் இதை செய்யுங்க!! அதுக்கு இந்த கேபிள்கள் அவசியம் - ரெடியா வைத்திருங்க!!
கார் பேட்டரியை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது என்பது ஒரு எளிய செயல்முறை ஆகும். இது உங்கள் காரின் பேட்டரியை தற்காலிகமாக சார்ஜ் செய்து, காரை விரைவாக சாலையில் இருந்து கொண்டுச் செல்ல உதவும். இந்தியாவில் உங்கள் கார் பேட்டரியை ஜம்ப் ஸ்டார்ட் செய்ய உதவும் படிப்படியான வழிமுறைகளை இனி பார்க்கலாம்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்: கார் பேட்டரியை ஜம்ப் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் முன், சம்பந்தப்ப்பட்ட இரண்டு கார்களும் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். அமிலக் கசிவுகள் அல்லது தீப்பொறிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முககவச கண்ணாடிகள் மற்றும் கையுறைகளை அணியுங்கள்.

பாசிட்டீவ் & நெகட்டீவ் முனைகளை அடையாளம் காணவும்: இரு கார்களின் பொனெட்டையும் திறந்து, இரண்டின் பேட்டரியிலும் நேர்மறை (+) மற்றும் எதிர்மறை (-) முனைகளைக் கண்டறியவும். அவை பொதுவாக சிவப்பு (நேர்மறை) அல்லது கருப்பு (எதிர்மறை) நிறங்களில் பிளாஸ்டிக் கவர்கள் அல்லது லேபிள்களால் குறிக்கப்பட்டு இருக்கும்.
ஜம்பர் கேபிள்களை சரியாக இணைக்கவும்: சிவப்பு நிற ஜம்பர் கேபிளின் ஒரு முனையை எடுத்து (வழக்கமாக '+' அல்லது 'பிஓஎஸ்' எனக் குறிக்கப்பட்ட கிளாம்ப்களுடன் இருக்கும்) அதை சார்ஜ் காலியான பேட்டரியின் பாசிட்டீவ் முனையுடன் பாதுகாப்பாக இணைக்கவும். பின்னர் அந்த சிவப்பு நிற ஜம்பர் கேபிளின் மற்றொரு முனையை காப்பாற்ற வரும் காரின் பேட்டரியின் பாசிட்டீவ் முனை உடன் இணைக்கவும்.

கிரவுண்டிங் கேபிளை இணைக்கவும்: கருப்பு நிற ஜம்பர் கேபிளின் ஒரு முனையை (வழக்கமாக '-' அல்லது 'NEG' என்று குறிக்கப்பட்ட கிளாம்ப்களுடன் இருக்கும்) அதை சார்ஜ் உள்ள கார் பேட்டரியின் நெக்ட்டீவ் முனையத்துடன் இணைக்கவும். ஆனால் இந்த கேபிளின் மறுமுனையை சார்ஜ் காலியான காரின் நெகட்டீவ் முனை உடன் இணைத்துவிட கூடாது. அதற்கு பதிலாக, சார்ஜ் காலியான காரின் பேட்டரியின் கிரவுண்டிங் உலோக முனையை கண்டறிந்து, அதனுடன் கருப்பு ஜம்பர் கேபிளை இணைக்க வேண்டும்.
என்ஜினை ஸ்டார்ட் செய்யவும்: சார்ஜ் உள்ள காரின் பேட்டரி மூலம் சார்ஜ் தீர்ந்துப்போன பேட்டரியை கொண்ட காரின் என்ஜினை ஸ்டார்ட் செய்து சில நிமிடங்கள் இயக்கவும். பின்னர், சார்ஜ் காலியான சொந்த பேட்டரியுடன் காரின் என்ஜினை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கவும். அது ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்கும் முன் சிறிது நேரம் காத்திருக்கவும்.

ஜம்பர் கேபிள்களை துண்டிக்கவும்: காப்பாற்ற வந்த காரும் ஸ்டார்ட் ஆகிறதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கார்களும் சீராக இயங்குகிறது என உறுதியான பின், தலைகீழ் வரிசையில் ஜம்பர் கேபிள்களை கவனமாக அகற்றவும். முதலில், இரண்டு வாகனங்களில் இருந்தும் கிரவுண்டிங் கேபிளை முதலாவதாக அகற்றவும். பின்னரே, அந்தந்த முனைகளில் இருந்து ஒவ்வொரு கிளாம்பையும் துண்டிக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜம்ப் ஸ்டார்ட் செய்த பிறகு குறைந்தது 20 நிமிடங்களுக்கு உங்கள் வாகனம் இயங்கும் வகையில், டிரான்ஸ்ஃபார்மர் மூலம் உங்கள் காரின் பேட்டரியை முழுமையாக ரீசார்ஜ் செய்து கொள்வதை நினைவில் கொள்ளுங்கள். இதைவிட முக்கியம், ஜம்ப் ஸ்டார்ட் செய்யும்போது, சார்ஜ் காலியான கார் பேட்டரியின் நெகட்டீவ் முனை உடன் கருப்பு நிற ஜம்பர் கேபிளை இணைத்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications









