மழைக்காலத்தில் கார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான கார் டிரைவிங்: டிப்ஸ்!

மழைக்காலத்தில் கார் பராமரிப்பும், டிரைவிங்கும் அதிக கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள். காரில் பழுது ஏற்படுவதற்கும், பாதிப்புகள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதேபோன்று, டிரைவிங்கின்போது அதிக ஆபத்துக்களும் உள்ளன. எனவே, மழைக்காலத்தில் காரை பராமரிப்பதற்கும், ஓட்டுவதற்குமான சில வழிகாட்டு முறைகளை ஸ்லைடரில் காணலாம்.


வழிகாட்டு முறைகள்

வழிகாட்டு முறைகள்

கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 கார் கண்டிஷன்

கார் கண்டிஷன்

மழைக்கால பாதுகாப்பிற்கு அவசியமான பிரேக்குகள், ஸ்டீயரிங் சிஸ்டம், வைப்பர், டயரில் காற்றழுத்தம், டயரின் ட்ரெட் அளவு, டீஃப்ராஸ்டர் போன்றவைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது சோதித்து விடுங்கள். பழுது இருப்பின் உடனடியாக சரிசெய்து விடுங்கள்.

எமெர்ஜென்சி கிட்

எமெர்ஜென்சி கிட்

கார் பழுது ஏற்படும்போது தேவைப்படும் சில அடிப்படையான டூல்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். டார்ச் லைட், காற்றடிக்கும் பம்ப், ப்யூஸ், டயர் கழற்றும் டூல் கிட் போன்றவற்றை காரில் அவசியம் வைத்துக் கொள்ளுங்கள்.

 வைப்பர்

வைப்பர்

வைப்பர் பிளேடுகள் தேய்ந்துவிட்டால் உடனடியாக மாற்றிவிடுங்கள். வைப்பரை இயக்கும்போது அதில் ஈரப்பதம் இருப்பது அவசியம். வெறும் வைப்பரால் வைன்ட்ஷீல்டை துடைக்க முற்படாதீர். வைன்ட்ஷீல்டில் கீறல்கள், தெறிப்புகள் ஏற்படுவதோடு, வைப்பரிலும் பழுது ஏற்படும்.

 டயரில் காற்றழுத்தம்

டயரில் காற்றழுத்தம்

கார் மேனுவலில் பரிந்துரைக்கப்பட்ட அளவு டயரில் காற்றழுத்தம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ளுங்கள்.

புகை படர்தல்

புகை படர்தல்

மழை நேரங்களில் வைன்ட் ஷீல்டில் பனி போன்ற புகைப் படரும். இதனை தவிர்க்க ஏசி.,யை டீஃப்ராஸ்ட் மோடில் வைத்து இயக்கவும். இதேபோன்று, பின்புற கண்ணாடியிலும் புகை படர்வதை தவிர்க்க டீஃபாகரை ஆன் செய்து கொள்ளுங்கள். கார் மேனுவலில் இதனை இயக்குவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.

டயர் ட்ரெட்

டயர் ட்ரெட்

டயரில் போதுமான ட்ரெட் அளவு இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். தேய்ந்து போன டயர்களுடன் மழை நேரத்தில் ஓட்டும்போது அது வழுக்கிச் செல்லும் ஆபத்து அதிகம். மேலும், தரைக்கும், டயருக்கும் இடையில் சேரும் தண்ணீரை ட்ரெட் வழியாகத்தான் வெளியேறும். எனவே, போதுமான ட்ரெட் இல்லாவிடில் கார் பிரேக் பிடிக்கும்போது வழுக்கிக் கொள்ளும்.

முகப்பு விளக்கு

முகப்பு விளக்கு

மழை நேரத்தில் முகப்பு விளக்கில் லோ பீம் போட்டு செல்லவும். சாலையை தெளிவாக பார்ப்பதற்கும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் விதத்திலும் இது அமையும்.

சடன் பிரேக்

சடன் பிரேக்

திடீர் பிரேக் பிடிப்பதன் மூலம் கார் வழுக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, பிரேக்கை சரியான அளவில் பிடித்து காரை நிறுத்தவும். தண்ணீர் படர்ந்த தரையில் பிரேக் பிடிக்கும்போது கார் நிற்கும் தூரமும் அதிகமாக இருக்கும்.

கவனம் தேவை

கவனம் தேவை

மழைநேரத்தில் மிக கவனமாக செல்வதுடன், முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்லவும். மேலும், முன்னால் செல்லும் கனரக வாகனங்களுடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்லவும். அந்த வாகனங்களின் டயரிலிருந்து தெறிக்கும் தண்ணீர் கார் வைன்ட்ஷீல்டில் பட்டு பார்வையை மறைக்கும் அபாயம் உள்ளது.

 தண்ணீர் தேங்கிய இடங்களில்...

தண்ணீர் தேங்கிய இடங்களில்...

சாலையில் தண்ணீர் தேங்கிய இடங்களில் மிக கவனமாக இயக்கவும். தண்ணீர் தேங்கிய இடத்தில் பெரிய பள்ளம் அல்லது பம்ப் குழாய்கள் போன்றவை இருந்தால் பம்பர் அல்லது ரேடியேட்டர் சேதப்படும். மேலும், சில நேரங்களில் எஞ்சினில் தண்ணீர் புகும் ஆபத்தும் இருக்கிறது.

பிரேக்கில் கோளாறு

பிரேக்கில் கோளாறு

தண்ணீர் தேங்கிய இடங்களில் காரை இறக்கி, வெளியில் வரும்போது காரின் பிரேக்கில் தண்ணீர் புகுந்து பிரேக்கில் பிரச்னை ஏற்படும் ஆபத்து இருக்கிறது. பிரேக் பிடிக்கும்போது நிற்கும் தூரம் அதிகரிக்கும். எனவே, ஒன்றிரண்டு முறை பிரேக்கை பிடித்து விட்டுசரிபார்த்த பின்னர் செல்லவும். டிரம் அல்லது டிஸ்க் பிரேக்குகளில் தண்ணீர் புகுந்து ஆயில் போல மாறி பிரேக் செயல்திறனை பாதிக்கும்.

 மாற்று வழி

மாற்று வழி

தண்ணீர் தேங்கிய சாலைகள், அறிமுகமில்லாத சாலைகள் வழியாக மழைநேரங்களில் செல்லாதீர். மாற்று வழியை கேட்டு தெரிந்து கொண்டு செல்வது அவசியம்.

 சக்கரம் சிக்கினால்...

சக்கரம் சிக்கினால்...

தண்ணீர் தேங்கிய சாலையில் சக்கரம் சிக்கிக் கொண்டால் எஞ்சினை வேகமெடுத்து காரை எடுக்க நினைக்காதீர். முதல் கியரில் வைத்து லேசாக ஆக்சிலேட்டரை கொடுத்து காரை மீட்கவும். சக்கரத்தை சுழல விட்டால் பிரயோஜனமில்லை.

உங்கள் அனுபவ டிப்ஸ்...

உங்கள் அனுபவ டிப்ஸ்...

இந்த செய்தியில் கூறிய பராமரிப்பு மற்றும் டிரைவிங் வழிகாட்டு முறைகளை கையாண்டு நிம்மதியான பயணத்தை தொடருங்கள். உங்களது அனுபவத்தில் கிடைத்த டிப்ஸ்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Raindrops are falling on our heads, and that means that we need to be prepared. Not just by keeping umbrellas handy in the car, because the monsoon dictates important changes to driving style to remain safe on the wet road. We are going to take you through some important aspects of road safety during this potentially dangerous time, and hope that you adapt your driving to create a safety buffer for you and your loved ones.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X