வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

வர்தா புயலில் பாதிக்கப்பட்ட கார் மற்றும் வாகனங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு பெறும் முறைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரிசெய்வற்கும், இன்ஸ்யூரன்ஸ் மூலமாக இழப்பீடு பெறுவதற்கும் பல தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுக்கு வழங்கியது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் புரட்டி போட்ட வர்தா புயல் காரணமாக ஏராளமான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அதேபோன்று, தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சூழப்பட்டு பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் வாகன உரிமையாளர்கள் இன்ஸ்யூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் தகவல்கள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

புயலின்போது காரின் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்து இருந்தால், அதனை மொபைல்போனில் படமெடுத்து வைத்துக் கொண்டு உடனடியாக இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கவும். மேலும், டீலருக்கும் தகவல் கொடுத்து ஆலோசனை பெறுங்கள்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

தாழ்வான பகுதிகளில் கார் நிறுத்தி வைக்கப்பட்டு எஞ்சினில் மழை நீர் புகுந்திருந்தால், காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புக்கு எடுத்துச் செல்வது அவசியம்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

ஒருவேளை, கார் எஞ்சினில் நீர் புகுந்த நிலையில், காரை ஸ்டார்ட் செய்துவிட்டால், எஞ்சின் செயலிழந்து போகும் வாய்ப்புள்ளது. அத்துடன், அதனை சரிசெய்வதற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை செலவாகும் என்பதுடன், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் அதற்கு இழப்பீடு வழங்காது.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

மழை நேரத்தில் உங்களது கார் மழை நீரால் சேதமடையும் வாய்ப்பு இருப்பது தெரிந்தால், இன்ஸ்யூரன்ஸ் போடும்போது எஞ்சினுக்கான இழப்பீடு தருவதற்கான கூடுதல் ஆட் ஆன் திட்டத்தை இன்ஸ்யூரன்ஸ் திட்டத்துடன் சேர்த்து எடுக்கவும். இதன்மூலமாக, அதிகபட்ச இழப்பீடு பெற முடியும்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

மேலும், பம்பர் டு பம்பர் அல்லது ஸீரோ டெப்ரிசியேஷன் எனப்படும் முழுமையான காப்பீட்டு திட்டமும் அதிகபட்ச இழப்பீட்டு பலனை பெறுவதற்கு வாய்ப்புண்டு. இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம் என்றாலும், இதுபோன்ற எதிர்பாராத சமயங்களில் நிச்சயம் உங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு பெறுவதற்கு வாய்ப்பை பெற்று தரும்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

சாதாரண இழப்பீடு பெறும் திட்டத்தில் உதிரிபாகங்களின் தேய்மானம் மற்றும் பழமையை மனதில் கொண்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். இதனால், கையிலிருந்து குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியிருக்கும். ஆனால், முழுமையாக இழப்பீடு பெறும் திட்டத்தில் உதிரிபாகங்களின் விலைக்கு இணையான இழப்பீடு பெற முடியும். எனவே, தயங்காமல் இந்த திட்டத்தை சென்னைவாசிகள் தேர்வு செய்து கொள்வது அவசியம்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

மற்றொன்று இந்த பம்பர் டு பம்பர் திட்டத்தில் அதிகபட்சமான இழப்பீடை பாலிசி காலத்தில் இரண்டு முறை மட்டுமே பெற முடியும். இவற்றை மனதில் வைத்து காருக்கு இன்ஸ்யூரன்ஸ் போடாதவர்கள் உடனடியாக எடுத்துவிடுங்கள்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

அடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் அருகே உருவாகி இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அந்த புயலால் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படுவதற்கு முன்னர் சில முன்னெச்சரிக்கை யோசனையுடன் இருப்பது நல்லது.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

சாலை ஓரத்தில் கார்களை நிறுத்தி வைப்பவர்கள் மரங்கள் இல்லாத பகுதியில் கார்களை நிறுத்தி வைப்பது அவசியம். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கூட முன்கூட்டியே கொண்டு போய் நிறுத்தி வைப்பது அவசியம்.

 வர்தா கற்றுத் தந்த பாடம்: கார் இன்ஸ்யூரன்ஸ் பற்றிய சில கூடுதல் தகவல்கள்!

அதேபோன்று, கனமழையின்போது தாழ்வானப் பகுதிகளில் மழை நீரால் வாகனம் சேதமடையும் அபாயம் இருந்தால், அவர்களும் உடனடியாக தக்க இடத்தை தேர்வு செய்து வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை, பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்தால், தயங்காமல் வாகனங்களை பத்திரமான இடத்தில் நிறுத்தி வைத்து விடுங்கள். சாலைகளிலும், பொது இடங்களிலும் நிறுத்த வேண்டாம்.

Most Read Articles
English summary
Car Insurance Claim Procedure For Damages By Vardah Cyclone
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X