கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!!

Written By: Krishna

நமக்கு எப்படி ஆயுள் காப்பீடு அவசியமோ, அதுபோலவே நமது கார்களுக்கும் இன்ஷூரன்ஸ் செய்வது மிக மிக முக்கியம். கார் வாங்கும்போது இன்ஷூரன்ஸ் செய்வதுடன் சரி, அதன் பிறகு அதை பெரும்பாலானோர் முறையாக புதுப்பிப்பதில்லை.

அவ்வாறு இன்ஷூர் செய்யாமல் விட்டுவிட்டால் டிராஃபிக் போலீஸிடம் சிக்காமல் தவிர்க்க குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்து செல்ல வேண்டியதிருக்கும். மாட்டிக் கொண்டால் ஆயிரம் காரணங்களைச் சொல்லி அசடு வழிந்துவிட்டு அபராதம் என்ற பெயரில் தண்டம் அழ வேண்டும்.

எதற்காக இந்த தலைமறைவு வாழ்க்கையும், தண்டனைகளும்? முறையாக உங்கள் வாகனங்களை இன்ஷூரன்ஸ் செய்வதையும், அதை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிப்பதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு யாருக்கும் பயப்படாமல் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு ஜிவ்வென வண்டியில் பறக்கலாம்.

இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும்போது நம்மை அறியாமல் ஏமாற்றப்படுவோம் அல்லது ஏமாந்துவிடுவோம். அதிக செலவில்லாமல், பணத்தை மிச்சப்படுத்தி சமயோஜிதமாக இன்ஷூரன்ஸை புதுப்பிக்க செம ஸ்மார்ட்டான 5 வழிகள் இருக்கின்றன. அதை ஃபாலோ பண்ணினால் நீங்களும் ஸ்மார்ட்டாக மாறிவிடுவீர்கள். இதோ அந்த ஐடியாக்கள்...

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

1. குறித்த காலத்துக்குள் இன்ஷூரன்ஸைப் புதுப்பியுங்கள். காப்பீட்டுக்கான காலம் காலாவதியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே புதுப்பிப்பது நல்லது. இதில் இன்னொரு சாதக அம்சமும் உள்ளது. புதுப்பிக்கப்பட வேண்டிய சமயத்தில் இன்ஷூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதற்கு முன்னதாக நீங்கள் அதைக் கட்டிவிட்டால் அதிக செலவில்லாமல் தப்பித்துக் கொள்ளலாம். இதைத்தவிர இன்ஷூரன்ஸ் காலம் முடிந்த பிறகு நீங்கள் புதுப்பித்தால், உங்கள் வாகனத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் கொண்டு செல்ல வேண்டும். தேவையில்லாமல் பணமும், நேரமும் வீணாக வேண்டுமா? அதைத் தவிரக்க முன்கூட்டியே புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

2. இன்ஷுரன்ஸை புதுப்பிக்கும்போது அவசரப்படாதீர்கள். காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளை அறிவிக்கலாம். எனவே, அதைத் தெரிந்து கொண்டு எந்த நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் திட்டம் குறைந்த செலவில் அதிக பயன் தருகிறது எனப் பார்த்து அதைத் தேர்ந்தெடுங்கள்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

3. நோ க்ளைம் போனஸ் என்ற ஆப்ஷன் உள்ளது. அதாவது, இன்ஷூரன்ஸ் காலத்தில் நீங்கள் ஒரு முறை கூட இழப்பீடு கோரவில்லை என்றால், அதற்கு போனஸ் தரப்படும்.. அடுத்தாண்டு ப்ரீமியம் செலுத்தும்போது அந்த தொகை குறையலாம். அல்லது சலுகைகள் இருக்கலாம். இந்த வசதியை வேறு நிறுவன காப்பீட்டு திட்டத்துக்கு மாறினாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

4. காப்பீட்டுத் திட்டங்களில் மறைந்துள்ள நிபந்தனைகளையும், விதிகளையும் ஒரு முறைக்கு இரு முறை கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல கவர்ச்சித் திட்டங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கவதுண்டு. அதில் ஒளிந்திருக்கும் நிபந்தனைகளை அறியாமல் அந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட்டு பிறகு ஏமாற்றமடைய வேண்டாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை உடனடியாக அணுகுங்கள். அதில் எந்தவிதமான தயக்கத்துக்கும் இடம் தர வேண்டாம்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

5. ஆட் - ஆன் எனப்படும் காப்பீட்டு திட்டத்துடன் கூடுதல் பயன்களை பெறும் வகையிலான கூடுதல் காப்பீட்டு திட்டங்களை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விபத்து ஏற்பட்டால் அதிக செலவுகளைத் தவிர்க்கலாம். பெரும்பாலான விஷயங்களை காப்பீட்டில் கவர் செய்யும் வகையிலான ஆட்-ஆன் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தால் உங்களது பணம் மிச்சமாகும்.

கார் இன்ஷூரன்ஸ்... காசை மிச்சப்படுத்த 5 வழிகள்...!

இந்த 5 டிப்ஸ்களையும் முறையாக செயல்படுத்தினால் எதி்ர்பாராமல் நடக்கும் விபத்துகளை தைரியமாக எதிர்கொள்ளலாம். வெறும் இன்ஷுரன்ஸ்தானே என நினைக்காமல், அதை முறையாக புதுப்பித்தால் பல விளைவுகளில் இருந்து நீங்கள் எஸ்கேப் ஆகலாம்.

அதென்னெய்யா பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ்... தெரிஞ்சிக்கலாம் வாங்க!

அதென்னெய்யா பம்பர் டூ பம்பர் இன்ஸ்யூரன்ஸ்... தெரிஞ்சிக்கலாம் வாங்க!

English summary
Car Insurance Renewal: A Few Steps To Save Money.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark