கார் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்!

காரின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனுடன் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும்; சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் போன்ற விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், கார் உள்ளிட்ட வாகனங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும் விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன.

 கார் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்!

இந்த நிலையில், காரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் இப்போது விழிப்புணர்வு அதிகம் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இந்தியர்கள் என்றாலே மைலேஜை பார்ப்பார்கள் என்ற பிம்பம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இந்த நிலையில், கார் வாங்கப்போகும்போது, அதன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் மனதில் வைக்க வேண்டிய சில விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் எடை

கார் எடை

காரின் வெற்று எடையைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அதாவது, அதிக எடையுடைய கார்கள் அதிவேகத்திலும் சிறப்பான நிலைத்தன்மையை பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, 1,258 கிலோ எடை கொண்ட ஃபியட் லீனியா கார் அதிக எடையுடைய மிட்சைஸ் செடான் கார்களில் ஒன்று. இதனால், அந்த கார் மிகச் சிறப்பான நிலைத்தன்மையை பெற்றிருப்பதோடு, வலுவான கட்டமைப்பு மூலமாக விபத்துக்களின்போது உள்ளே இருக்கும் பயணிகளுக்கு சற்று கூடுதல் பாதுகாப்பை தரும்.

 கார் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்!

இங்கே எடை ஒரு காரணமாக குறிப்பிட்டாலும், தரை இடைவெளி, காரின் எடை விரவும் தன்மை, வடிவமைப்பு போன்ற விஷயங்களை பொறுத்து இந்த நிலைத்தன்மை மாறுபடும். இப்போது எடை குறைவான கார்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக சிறப்பான நிலைத்தன்மையை பெற உதவுகிறது. அண்மையில் அறிமுகமான டாடா ஹெக்ஸா கார் 2.2 டன் எடை கொண்டது. அண்மையில் நடந்த விபத்தில் இந்த கார் உராய்வுகளுடன் தப்பியது நினைவு இருக்கலாம்.

கட்டுமானம்

கட்டுமானம்

காரின் பாதுகாப்பில் கட்டுமானத் தரமும் மிக முக்கியமானதாக பார்க்க வேண்டும். உயர் தர பேனல்கள், வலிமையான சேஸீ அமைப்பு ஆகியவை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இதுதவிர, க்ரம்பிள் ஸோன் எனப்படும் மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளை காக்கும் கட்டமைப்பும் இருப்பதும் கூடுதல் பாதுகாப்பு. உயர்தர கட்டுமானத் தரம் கொண்ட கார்கள் நீடித்த உழைப்பையும் வழங்கும்.

கிராஷ் டெஸ்ட்

கிராஷ் டெஸ்ட்

மேலை நாடுகளில் உள்ளது போன்று நம் நாட்டில் விற்பனையாகும் கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் ஆய்வு கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, கார்களின் கட்டுமானத் தரம் குறித்து தெரிந்து கொள்ள உதவுவதுடன், கார் நிறுவனங்களும் மிகச் சிறப்பான கட்டுமான தரத்துடன் கார்களை தயாரிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

 கார் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்!

இந்த நிலையில், தற்போதே பல நிறுவனங்கள் இந்த கிராஷ் டெஸ்ட் விதிமுறைக்கு உட்பட்டதாக கார்களை தயாரிக்க துவங்கிவிட்டன. இருப்பினும், சில வெளிநாட்டு கிராஷ் டெஸ்ட் அமைப்புகள் இந்திய கார்களை கிராஷ் டெஸ்ட் செய்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில், சிறந்த கார்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, அதுகுறித்து ஆன்லைனில் ஒரு அலசு அலசிவிட்டு, காரை தேர்வு செய்யலாம்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உள்ள மாடல்களை தேர்வு செய்வதும் முக்கியம். பல கார் மாடல்கள் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இப்போது பல பட்ஜெட் கார்களில் பேஸ் வேரியண்ட் எனப்படும் குறைந்த வசதிகள் கொண்ட மாடலில் கூட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு தொழில்நுட்பமாக இடம்பெறுகிறது. அத்துடன், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பமும் இடம்பெறுகிறது. எனவே, காரை தேர்வு செய்யும்போது இவை அனைத்தும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வது அவசியம்.

 டயர்கள்

டயர்கள்

காரின் டயர்களின் அகலமும் நிலைத்தன்மையை வழங்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது இதுபோன்ற டயர்கள் பலன் தரும். டாப் வேரியண்ட்டுகளில் அதிக அகலம் கொண்ட டயர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனை டீலரில் உள்ள விற்பனை பிரதிநிதியிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளவும். நீங்களாக அகலமான டயர்களை வெளிமார்க்கெட்டில் வாங்கி பொருத்த முயற்சிக்க வேண்டாம். அது பல்வேறு விதங்களில் பாதிப்புகளை தரும்.

ஸ்டீயரிங் சிஸ்டம்

ஸ்டீயரிங் சிஸ்டம்

இப்போது எல்லா கார்களுமே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கின்றன. குறிப்பாக, ஸ்டீயரிங் சிஸ்டம் தொழில்நுட்பம் வெகுவாக மேம்பட்டுவிட்டது. இருப்பினும், அதிவேகத்தில் செல்லும்போது ஓட்டுவதற்கு நம்பிக்கையான உணர்வை தரும் ஸ்டீயரிங் வீல் கொண்ட கார்களை தேர்வு செய்வது நல்லது. உதாரணத்திற்கு, ஃபோர்டு கார்களின் ஸ்டீயரிங் வீல் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது பரவலான கருத்து. எனவே, நீங்கள் வாங்கப்போகும் காரை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு பின்னர் முடிவு எடுக்கவும்.

கார் வண்ணம்

கார் வண்ணம்

காரின் வண்ணமும் ஒரு பாதுகாப்பு விஷயம்தான். ஏற்கனவே இதுகுறித்து பிரத்யேக செய்தியை நாம் வெளியிட்டு இருக்கிறோம். வெள்ளை, சில்வர் உள்ளிட்ட கார்களை தேர்வு செய்வது நல்லது. இரவு நேரத்திலும், குறைவான வெளிச்சத்திலும் பிற வாகன ஓட்டிகளுக்கு இந்த நிறம் கொண்ட கார்கள் தூரத்திலிருந்தே தெளிவாக தெரியும். அடர் வண்ணம் கொண்ட கார்களை தேர்வு செய்வதை தவிர்க்கலாம்.

வேரியண்ட் தேர்வு

வேரியண்ட் தேர்வு

இப்போது பல பட்ஜெட் கார்களில் கூட பேஸ் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், ஏர்பேக்குகளும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட் மாடல்களை தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக அமையும். உதாரணத்திற்கு பேஸ் வேரியண்ட்டுகளில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டாலும், டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் வரை கொடுக்கப்படுகிறது. மற்ற பாதுகாப்பு வசதிகளும் அதிகம் இருக்கும்.

 சுயக் கட்டுப்பாடு

சுயக் கட்டுப்பாடு

சரி, காரில் எல்லா பாதுகாப்பு விஷயங்களும் இருக்கிறது. இனி நாம் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அர்த்தமில்லை. இவை எல்லாம் இருந்தும் சாலையில் வாகனத்தை செலுத்தும்போது சுய ஒழுங்கை கடைபிடிப்பதும், சாலை விதிகளை பின்பற்றுவதும் விபத்துக்களை தவிர்க்க உதவும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை அறவே தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது.

 கார் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்!

ஹேட்ச்பேக் கார்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபியட் புன்ட்டோ எவோ உள்ளிட்ட கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் சற்று கூடுதல் அந்தஸ்தை பெற்றவை. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் ஃபோர்டு ஆஸ்பயர் கார் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட மாடல். மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஃபியட் லீனியா, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார்கள் சிறந்தவை. காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிறந்த மாடல். எஸ்யூவி மாடல்களில் லேடர் ஃப்ரேம் சேஸி கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சிறந்த மாடலாக கூறலாம்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
car safety features physics.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X