கார்கள் களவடப்படாமல் தடுக்க எளிய வழிகள்...!!

Written By: Krishna

பெரும்பாலான வீடுகளில் கார்கள் என்பது வெறும் வாகனமாக மட்டும் இருப்பதில்லை. அது ரேஷன் கார்டில் இடம்பெறாத மற்றொரு குடும்ப உறுப்பினராகவே கருதப்படுகிறது. உண்மைதான்... நமது குடும்பத்தின் சுக, துக்கமான தருணங்கள் அனைத்திலும் கார்கள் உடன் வந்துள்ளன. அவசர கால நேரங்களில் நம்மை நடுத் தெருவில் அவை தவிக்கவிட்டதில்லை. எனவே, கார்களை பலர் உயிரற்ற பொருளாக நினைக்காமல் உணர்வு ரீதியாக அணுகுகிறார்கள்.

அப்படிப்பட்ட நமது சென்டிமென்ட் கார் கயவர்களின் கைகளில் அகப்படலாமா? என்னதான் பாதுகாத்து வைத்தாலும், நூதனத் திருடர்கள் அதை லாவகமாக அடித்துச் சென்று விடுகின்றனர். இத்தகைய திருட்டுச் சம்பவங்களில் இருந்து உங்கள் காரைப் பாதுகாக்க எளிமையான வழிமுறைகளைத் தருகிறது டிரைவ் ஸ்பார்க்... வாருங்கள் அதைப் பார்ப்போம்...

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

1. காரை நிறுத்திவிட்டு அவசரமாகக் கடைக்குச் சென்றாலும் சரி, வேறு வேலைகளுக்கு சென்றாலும் சரி... சரியாக கார் கதவுகளை பெரும்பாலானோர் லாக் செய்வதில்லை, கண்ணாடிகளை மேலே உயர்த்துவது இல்லை. இது திருடர்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதற்கு சமமாகும். எனவே, எத்தகைய அவசர சூழலாக இருந்தாலும் கார் கதவுகளை நன்றாக லாக் செய்யுங்கள். கண்ணாடிகளை மேலே உயர்த்தி விடுங்கள்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

2. கார்களை கேரேஜ் போன்ற பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்வது அவசியம். வெட்ட வெளியில் நிறுத்தினால், கார்களை சுலபமாகத் திருட வாய்ப்புள்ளது. கேரேஜ் என்றால் கண்ணாடியையோ, கதவையோ உடைத்தால் அதிக சத்தம் வரும், மேலும், அந்த இடத்தில் திருடர்களால் எளிமையாகத் திருட முடியாது.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

3. விலையுயர்ந்த பொருள்களை காரில் ஒருபோதும் விட்டுச் செல்லாதீர்கள். அதுவே திருடனுக்கு ஆவலைத் தூண்டும் விஷயமாக அமைந்து விடும். லேப் டாப், ஐ - பேட், நகைகள், பணம், பர்ஸ் ஆகியவற்றை எங்கு சென்றாலும் உங்களுடன் உடனே எடுத்துச் செல்லுங்கள்

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

4. இம்மொபைலைஸ் ஆப்ஷனைப் பயன்படுத்துவது சமயோஜிதமான செயல்களில் ஒன்று. இந்த முறை மூலம் கார்களின் சாவியும், எஞ்சினும் கம்ப்யூட்டர் சிப் வாயிலாக ஸ்மார்ட் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும். போலியான சாவிகளை வைத்து காரை ஸ்டார்ட் செய்ய நினைத்தால், எஞ்சின் ஆன் ஆகாது. எனவே, கார் திருட்டைத் தடுக்க இதுபோன்ற புத்திசாலித்தனமான வழிமுறைகளையும் கையாள வேண்டும்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

5. இப்போது மார்க்கெட்டில் குறைந்த விலையில் கூட ஜிபிஎஸ் சாதனங்கள் கிடைக்கின்றன. காரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது எப்போதுமே பயனளிக்கும் விஷயம். ஒருவேளை கார் திருடப்பட்டால் கூட, ஜிபிஎஸ் உதவியுடன், அது எங்கு பயணிக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

6. கார் திருடப்பட்டால் எழுப்பப்படும் எச்சரிக்கை ஒலிகளை (அலாரம்) மிக விரைவாக நிறுத்துவதற்கு கார் திருடர்களுக்குத் தெரியும். இருந்தபோதிலும், அத்தகைய அலாரம் பொருத்தப்பட்ட கார்களை திருட பெரும்பாலான கயவர்கள் முன்வருவதில்லை. ஒருவேளை அலாரம் ஆஃப் ஆக தாமதமானால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம்தான் காரணம். எனவே, உங்கள் வண்டியில் அலாரம் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் இல்லாவிட்டாலும், அது இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த டம்மியாக ஸ்டிக்கர்களை ஒட்டி விடுங்கள். இதுவும் ஒரு சிறந்த பாதுகாப்பு வழிமுறைதான்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

7. அரை மணி நேரத்துக்கும் மேலாக ஒரு இடத்தில் காரை பார்க் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், காரின் டயரை நடைபாதையின் பக்கம் ஓட்டி திருப்பி நிறுத்துங்கள். காரை இழுத்துத் திருட முற்பட்டாலும், டயர் ஒரு பக்கம் திரும்பியிருந்தால், திருடர்களின் முயற்சி பலிக்காது.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

8. ஸ்டீயரிங் வீலை லாக் செய்வது அவசியம். திருடர்கள் காரைக் களவாட முயற்சித்தால் நிச்சயம் ஸ்டீயரிங் வீலை அன் லாக் செய்ய வேண்டும். அதற்கு நி்ச்சயம் கூடுதல் நேரமாகும். எனவே, ஸ்டீயரிங் வீல், பிரேக் பெடல், வெளிப்புற ஸ்பேர் டயர்கள் ஆகியவற்றை லாக் செய்து நிறுத்துவது புத்திசாலித்தனம்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

9. வெய்க்கிள் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (விஐஎன்) எனப்படும் உங்களது காருக்கான அடையாள எண்ணை ஆங்காங்கே பிரிண்ட் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் கார் திருடப்பட்டாலும், எங்கெல்லாம் விஐஎன் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த பாகங்களை மாற்றியே திருடர்கள் பிறருக்கு விற்பனை செய்ய வேண்டியிருக்கும்.

இதனால் செலவு அதிகம் என்று உங்கள் காரை களவாடும் முயற்சியை திருடர்கள் கைவிட வாய்ப்புள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

10. காரைத் திருட முடியாவிட்டாலும், முகப்பு விளக்குகள், லோகோக்கள் உள்ளிட்ட கவனம் ஈர்க்கும் பொருள்களைத் திருட வாய்ப்புள்ளது. எனவே, பார்க்கிங் செய்யும் போது முன்பகுதி சுவரையோ, தடுப்பு பலகைகளையோ ஒட்டிய படி நிறுத்த வேண்டும். அப்போதுதான் முகப்புப் பகுதியில் உள்ள லைட்கள், பம்பர், லோகோ ஆகியவற்றை திருட முடியாது.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

11. வாகனப் பதிவு ஆவணங்கள், இன்ஷூரன்ஸ், வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காரில் வைத்துச் செல்லாதீர்கள். கார் திருடப்பட்டால், அதை சுலபமாக விற்பனை செய்ய இந்த ஆவணங்கள் உதவும். மேலும், உங்கள் சுயவிவரங்களை கயவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

12. ஸ்கார்பியோ, பொலோரோ, தவேரா, மாருதி 800, சாண்ட்ரோ, குவாலிஸ், ஹோண்டா சிட்டி, இண்டிகா, அம்பாசிடர், பத்மினி உள்ளிட்ட கார்கள் இந்தியாவில் அதிகம் திருடு போகின்றன. இந்த வாகனங்களை வைத்துள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

கார் திருடு போகாமல் தடுப்பதற்கான வழிகள்!

இந்த டிப்ஸ்கள் உங்களுக்குப் பயனளித்திருக்கும் என நம்புகிறோம். சுவாரஸ்யமான மற்றும் பலனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...

காரின் மைலேஜை அதிகரிக்க 15 வழிகள்!

காரின் மைலேஜை அதிகரிக்க 15 வழிகள்!

 

English summary
Car Theft Prevention Tips: Prevent Your Car From Getting Stolen.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more