உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும்...

கார்களின் கண்ணாடிகள் உடைய பல காரணங்கள் இருக்கிறது. கார்களுக்கு கண்ணாடிகள் எவ்வளவு முக்கியம்? அது உடைவதற்கான காரணங்கள் என்ன? காணலாம் வாருங்கள்.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

ஒரு காருக்கு இன்ஜின் அல்லது எலெக்டரிக் கார்களுக்கு பலர்ஃபுல்லான பேட்டரி மற்றும் ஒரு சிறப்பான காரை உருவாக்கிவிடாது. காரின் மற்ற பாகங்களும் முக்கியம். அது எப்படிச் சிறப்பாக அமைக்கிறதோ அதைப் பொறுத்துத் தான் காரின் தரமும் அமையும். இதில் முக்கியமான பாகம் காரின் கண்ணாடிகள் தான். காரின் 4 புறங்களிலும் கண்ணாடி பெரும் பகுதி இருக்கும். இந்த கண்ணாடிகளைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

பொதுவாக காரில் பொருத்தப்படும் கண்ணாடிகள் எல்லாம் டெம்பர் கிளாஸ்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இது தான் காருக்கு பாதுகாப்பானது. கண்ணாடி உடையும் சூழ்நிலை வந்தாலும், டெம்பர் கிளாஸ்களாக இருந்தால் அது சுக்கு நூறாக உடையாது. மாறாக உடைந்து அப்படியே இருக்கும். இதனால் காருக்குள் யாரும் இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படாது. அதனால் டெம்பர் கிளாஸ் பொருத்தப்படுகிறது.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

சில நேரங்களில் காரை பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தால் காரின் கண்ணாடி யாரும் உடைக்காமல் தானாக உடையும் சம்பவங்கள் சில நேரங்களில் ஏற்படும். இப்படியாக இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, காரின் கண்ணாடிகள் உடைய முக்கியமான 5 காரணங்களைத் தான். வாருங்கள் தெளிவாகக் காணலாம்

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

காரணம் - 1 (வெப்ப மாற்றம்)

கார்கள் கண்ணாடி உடைய பலருக்கும் குழப்பமான அதே நேரம் இப்படி கூட நடக்குமா என உங்களை யோசிக்க வைக்கும் காரணம் இது தான். காருக்குள்ளும், காருக்கு வெளியேயும் மிக அதிக அளவில் வெப்ப மாற்றம் இருந்தால் காரின் கண்ணாடிகள் கீறல் விழுந்து அல்லது உடைந்து போக வாய்ப்பு உள்ளது. உதாரணமாகக் கோடைக் காலத்தில் வெயிலில் காரை பார்க் செய்து நிறுத்தியிருக்கும் போது காருக்கு வெளியே கடும் வெப்பம் இருக்கும். அதைச் சமாளிக்க நாம் காருக்குள் ஜன்னல்களைப் பூட்டிக்கொண்டு ஏசியை அதிகமாக வைத்திருந்தால் காரின் ஜன்னல் கண்ணாடிகளில் கீறல் விழுந்து விடும்.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

இதற்கு முக்கியமான காரணம் காரின் கண்ணாடிகள் வெப்பம் அதிகமாகும் போது விரிவடையவும், குளிர் அதிகமாகும் போது சுருங்கும் தன்மையில் இருக்கும். ஒரே நேரத்தில் கண்ணாடியில் இரு வெப்ப நிலையும் ஏற்பட்டால் அது உடைந்து போக வாய்ப்புள்ளது. சில நேரம் வெளியில் குளிர் அதிகமாக இருக்கும் போது காருக்குள் அதிகமாக ஹீட்டர் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

காரணம் - 2 மோசமான வானிலை

வானிலை மோசமாக இருப்பது உங்கள் கையில் எதுவும் இல்லை மோசமான வானிலை ஏற்படும் போது உங்கள் வாகனம் எங்கிருந்தாலும் அவர் மீது மரக்கிளைகள் முறிந்துவிழுவது, சுழல் காற்றில் ஏதாவது கனமான பொருள் காற்றில் பறந்து காரின் கண்ணாடியைச் சேதப்படுத்துவது, எனப் பல காரணங்களால் உங்கள் காரின் கண்ணாடி சேதமாகக் கூடும். இதைத் தடுப்பது சிரமம் முடிந்தளவு காருக்கான பாதிப்பு ஏற்படாதபடி பார்க்கிங்கை தேர்வு செய்வது சிறந்தது.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

காரணம் - 3 - விபத்து

சாலையில் வாகனம் விபத்தில் சிக்கினாலும் காரின் கண்ணாடிகள் உடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கார்களில் உள்ள உதிரிப் பாகங்களிலேயே அதிகமாக உடையும் வாய்ப்பு கொண்ட பாகம் என்றால் அது காரில் உள்ள கண்ணாடிகள் தான். இந்த காரின் கண்ணாடிகள் கார் சிறிய விபத்தில் சிக்கினால் கூட உடையும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்றால் சாலையில் மற்ற வாகனங்களால் தான் ஏற்படும் என்று இல்லை நீங்கள் பார்க் செய்யும் போது நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பி போன்ற பொருட்களில் மோதினால் கூட காரின் கண்ணாடி உடையும் வாய்ப்பு இருக்கிறது.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

காரணம் - 4 - கற்கள்

சாலைகளில் உள்ள கற்கள் கண்ணாடிகளுக்குப் பகை. குறிப்பாக ஆஃப்ரோடுகளில் கார்களில் பயணிக்கும் போது கற்கள் மேல பறக்கும் அபாயம் இருக்கும். இந்தக்கற்கள் காரின் கண்ணாடிகளில் பட்டல் அப்பொழுதும் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடையும் அபாயம் இருக்கிறது. இருக்கிறது. இது மட்டுமல்ல கிரிக்கெட் பந்து, கோல்ஃப் பந்து உள்ளிட்ட பொருட்களும், கண்ணாடிகளில் மோதினால் அது உடையும்.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

காரணம் - 5 சரியாகப் பொருத்தாமல் இருத்தல்

பொதுவாக கார்களில் கண்ணாடிகளை எல்லாம் கார் தயாரிப்பு ஆலைகளிலேயே பொருத்தப்படும். அப்பொழுது பல விஷயங்களை ஆய்வு செய்து பொருத்துவார்கள். உதாரணமாக கார்களின் கண்ணாடிகள் வெப்ப நிலையில் விரிவடையும், குளிர் நிலையில் சுருங்கும் என்ற விதிக்கு ஏற்ப பக்கவாட்டு பகுதிகளில் இடம்விட்டு கார்களின் கண்ணாடியைப் பொருத்துவார்கள்.

உங்க காரின் கண்ணாடி திடீர்ன்னு உடைஞ்சு போச்சா அப்ப இந்த 5 விஷயங்கள் தான் காரணமா இருக்கும் . . .

இப்படியாக கார்களின் கண்ணாடியைப் பொருத்துவதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அதன் காரணமாகக் கூட கார்களின் கண்ணாடிகள் உடைய கூடும். உதாரணமாக கார்களின் கண்ணாடிகள் விரிவடைய இடம் இல்லாமல் பொருத்திவிட்டால் இது வெளியில் காலத்தில் உடைந்து போகக் கூடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Common causes of glass damage in cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X