உங்கள் காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

4 வழிச்சாலையில் செல்லும் போது ஏற்படும் பல விபத்துக்கள் லேன் மாறுவதில் தான் ஏற்படுகிறது. அதை தடுக்க சில லேன் மாறும் விதிகள் குறித்து நீங்கள் அறிவது கட்டாயம். இச்செய்தியில் லேன் மாறும் அடிப்படை தகவல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

இந்தியாவில் வாகனம் ஓட்டும் பலருக்கு முழுமையாக சாலை விதிகள் தெரிவதில்லை. பெரும்பாலனோர் தான் செய்வது தவறு என்று தெரியாமலேயே செய்து வருகின்றனர். பல அனுபவம் வாய்ந்த டிரைவர்களுக்கு கூட சில விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லை.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

அந்த வகையில் உள்ளது தான் லேன் மாறுவதில் உள்ள குளறுபடி. இந்தியாவில் உள்ள பலருக்கு லேன் அடிப்படை விதிகள் குறித்து கூட அறியாமல் இருக்கின்றனர். இந்த விதியை கடை பிடிப்பதால் பல விபத்துக்களை தவிர்க்கலாம். லேன் மாறுவதில் சில விதிகளை நாம் பின்பற்ற வேண்டும் அதற்கு முன்னர் லேன் குறித்த சில அடிப்படை தகவல்களை பார்த்து விடுவோம்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

இந்தியாவில் நெடு தூரம் பயணம் செய்யும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களும் நான்கு வழிச்சாலையில் இணைக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் நான்குவழிச்சாலையில் பயணிக்காதவர்களை பார்ப்பதே அரிது. இந்த நான்கு வழிச்சாலை என்பது இரண்டு வழி ஒரு புறம் , இரண்டு வழி மறுபுறம் செல்லும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

அதில் இடது பக்கம் உள்ள லேன் சாதாரணமாக வாகனங்கள் செல்வதற்கும் வலது பக்கம் உள்ள லேன் முன்னால் செல்லும் வாகனங்களை விட பின்னால் வரும் வாகனங்கள் வேகம் அதிகமாக இருந்தால் அவர்கள் ஓவர் டேக் செய்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

இதனால் நீங்கள் 4 வழிச்சாலைகளில் செல்லும் போது உங்களுக்கான இரண்டு வழிகளில் இடதுபுறத்தை தான் அதிகம் பயன்படுத்த வேண்டும்.வலது புற ரோட்டில் எக்காரணத்தை கொண்டும் நீண்ட நேரம் செல்ல கூடாது.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மட்டும் முழுவதும் வலது பக்க லேனிலேயே செல்ல அனுமதியுள்ளது. மற்ற வாகனங்கள் இந்த வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழி விட வேண்டும். தெடர்ந்து வலதுபுறம், இடதுபுறம் என மாறி மாறி வாகனத்தை கொண்டு செல்வது விபத்திற்கு வழி வகுக்கும்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

லேன் மாறுவது குறித்து 8 விதிமுறைகள்

1. உங்களுக்கு முன்பாக செல்லும் வாகனம் நீங்கள் செல்லும் வேகத்தை விட குறைவான வேகத்தில் சென்றால் நீங்கள் வலது புற லேனிற்கு மாறி அந்த வாகனத்தை முந்தலாம். முந்துவதற்கு முன்பாக வலதுபுறம் இன்டிகேட்டரை ஆன் செய்து மற்ற டிரைவர்களுக்கு நீங்கள் முந்த முயற்சிப்பது குறித்து தெரியப்படுத்துங்கள்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

2. திரும்புவதற்கு முன்பு காரின் கண்ணாடி வழியாக முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

3. லேன் மாறும் போது உங்கள் வாகனத்தின் பிளைன்ட் ஸ்பாட் குறித்து அறிவது அவசியம். பிளைட் ஸ்பாட் குறித்து விளக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

4. வலது பக்கம் உள்ள லேனிற்கு மாறும் போது மெதுவாக ஸ்டியரிங்கை திரும்பி மாற வேண்டும்

5. வலதுபுறம் மாறிய பின்பு இன்டிகேட்டரை ஆப் செய்து விட்டு வலதுபுறத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னெறி செல்லலாம்.

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

6.பின் இடது புற இன்டிகேட்டரை போட்டு விட்டு இடது புற லேனிற்கு மாற வேண்டியது கட்டாயம். வலது புற லேனில் தொடர்ந்து பயணிப்பது ஆபத்தானது.

7. இடதுபுறம் திரும்பும் போது கண்ணாடிகளில் பின்னால் வரும் வாகனத்தின் வேகத்தை தெரிந்து கொண்டு மாறுங்கள்

காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா?

8. எல்லாம் சரியாக அமைந்த பின் மெதுவாக இடது புற லேனை நோக்கி உங்கள் காரின் ஸ்டியரிங்கை திருப்புங்கள்.

Most Read Articles

English summary
8 Crucial Steps to Avoid Common Errors When Changing Lanes.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X