காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

கார் ஓட்டுபவர்கள் அடிக்கடி செய்யும் தவறு பார்க்கிங் பிரேக்கை போட்டு கொண்டே காரை ஓட்டுவது. சிலர் கார் பார்க்கிங் பிரேக்கில் இருப்பது தெரியாமலேயே காரை ஓட்ட முயற்சிப்பர். சிலர் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமலேயே காரை ஓட்டுவர். இவை இரண்டும் கார் பிரேக், இன்ஜின் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட அவற்றை பற்றி இச்செய்தியில் விரிவாக காண்போம்.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

காரில் பார்க்கில் பிரேக் நிலை காண்பது எப்படி

காரில் நீங்கள் எடுக்கும் போது பார்க்கிங் பிரேக்கை முதலில் ரீலீஸ் செய்ய வேண்டும். பிரேக் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டதா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். பிரேக் சரியாக ரிலீஸ் ஆகவில்லை என்றால் டேஷ்போர்டில் அதற்கான எச்சரிக்கை லைட் எரியும். அதை கவனித்து பிரேக்கை ரிலீஸ் செய்ய வேண்டும்.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

டேஷ்போர்டில் எச்சரிக்கை லைட் இல்லாத கார்களை வைத்திருப்பவர்கள் அல்லது எச்சரிக்கை லைட் வேலை செய்யாத காரில் முதலில் காரை நகற்ற முயற்சிக்க வேண்டும். வழக்கமான பவரை காட்டிலும் குறைவான பவரில் சென்றாலோ அல்லது வழக்கத்தை விட குறைவான வேகத்தில் சென்றாலோ நீச்சயம் பார்க்கிங் பிரேக்கை செய் செய்து விடுங்கள். காரை நிறுத்தி விட்டு பார்க்கிங் பிரேக்கை சரி செய்யுங்கள். கார் செல்லும் போதே பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்தால் திடீர் என கார் வேகம் அதிகமாகி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

பார்க்கிங் பிரேக்கிலே கார ஓட்டினால் என்ன ஆகும்

நீங்கள் நீண்ட நேரம் காரில் பார்க்கிங் பிரேக்கை சரியாக ரிலீஸ் செய்யாமல் காரை ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் முதலில் பிரேக் லைனர் அல்லது டிஸ்க் பேட் பாதிக்கப்படும். பிரேக் ரோட்டார் உடனோ அல்லது டிஸ்க்உடனோ இனைப்பில் இருக்கும் போதே கார் நகர்ந்தால் உராய் ஏற்பட்டு பிரேக் அதிகமாக சூடாகும். அந்த சூடு பிரேக்ஆயிலுக்கு பரவி பெரும் பிரேக் பெயிலியரை ஏற்படுத்தி காரை விபத்திற்குள்ளாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

ஆபத்துக்கள்

பார்க்கிங் பிரேக் போட்டிருக்கும் போது வாகனத்தை மெதுவாக குறைந்த வேகத்தில் செலுத்தினால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் அதிக வேகத்தில் செலுத்தினால் மேல் சொன்னது பிரேக் ஆயில் சூடாகி பிரேக்பெயிலியர் ஏற்படும். அல்லது பிரேக்கில் ஏதேனும் பிரச்னை ஏற்படும். குறைந்த பட்சம் பிரேக் பேடில் தேய்மானம் ஏற்படும்.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

அவ்வாறு பிரேக் பேடில் தேய்மானம் ஏற்பட்டால் அடுத்து நீங்ள் பார்க்கில் பிரேக்கை சீர் செய்து விட்டு ஓட்டினால் கூட பிரேக் பிடிக்கும் போது பிரேக் சரியாக பிடிக்காமல் ஸ்லிப் ஆகும். பிரேக் பேடை மாற்றினால் மட்டுமே இந்த பிரச்னை சீராகும். பிரேக் ஆயில் சூடானால் பிரேக் பெயிலியர் ஏற்படும்.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

ரிப்பேர்

இவ்வாறு உங்கள் பிரேக் லைன் அல்லது பிரேக் ஆயிலில் பாதிப்பு ஏற்பட்டால் அதை முற்றிலுமாக மாற்றுவது மட்டும் தான் ஒரே தீர்வு, அதிகமாக சூடேறிய பிரேக் ஆயில் அதன்பின் வேலை செய்யாது. அதே போல் ஒரு முறை அதிகமாக தேய்மானமான பிரேக் லைன் அல்லது பிரேக் பேட் மீண்டும் பிரேக் கிரப்பாக பிடிக்காது. அதனால் இதை மாற்றுவது தான் ஒரே வழி.

காரில் பார்க்கிங் பிரேக்கை ரிலீஸ் செய்யாமல் ஓட்டினால் என்ன ஆகும்?

பார்க்கிங் பிரேக் என்பது காரின் மிக அவசியமான ஒன்று இதை நீங்கள் ஒவ்வொரு முறை காரை எடுக்கும் போதும் செய் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இது உங்களை பெரிய ஆபத்தில் கொண்டு சேர்த்து விடும்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
Is There Any Danger Of Driving With Parking Brake On?.Read inTamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X