ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வேறுபாடுகள், பயன்கள் பற்றிய தகவல்கள்!

சொகுசு கார்களில் கிடைத்த வசதிகள் இப்போது 10 லட்ச ரூபாய் பட்ஜெட் கார்களில் கூட கிடைக்கிறது. அவ்வாறு, இப்போது வரும் நவீன யுக கார்களில் கொடுக்கப்படும் முக்கிய வசதிகளில் ஒன்று க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி. சாதாரண ஏசி சிஸ்டத்திற்கும், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள், சாதகங்கள் உள்ளிட்ட விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

இப்போது ஏசி சிஸ்டம் அனைத்து கார்களிலும் நிரந்தர வசதியாக கொடுக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் உள்ள வெப்ப நிலையை விட காரின் கேபினுக்குள் குளிர்ச்சியாக வைத்திருக்கும் வேலையை இந்த ஏசி சிஸ்டம் கவனித்துக் கொள்கிறது.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

அதாவது, உலர் காற்றை குளிர்ச்சிப்படுத்தும் பணியை ஏசி சிஸ்டம் செய்கிறது. மேலும், வெளிப்புற வெப்ப நிலைக்கு தக்கவாறு ஏசி சிஸ்டத்தில் குளிர்ச்சியை கூடுதலாகவும், குறைத்து வைத்துக் கொள்வது நம் வேலையாக உள்ளது.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

அதேநேரத்தில், வெளிப்புற வெப்ப நிலை, காரின் வேகம் போன்றவற்றை பொறுத்து காருக்குள் குளிர்ச்சி நிலைக்கும் தன்மை மாறுபடும். உதாரணத்திற்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் ஏசியை அதிகமாக வைத்தாலும், குளிர்ச்சி குறைவாக இருக்கும். மாலை நேரத்தில் உடனடியாக குளிர்ச்சி கிடைக்கும்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

சில வேளைகளில் மெதுவாக செல்லும்போது ஏசி சிஸ்டத்தை அதிக குளிர்ச்சியை வழங்கும் நிலையில் வைத்தாலும், போதிய குளிர்ச்சி கிடைக்காது. இந்த குறைகளை போக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதுதான் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

வெளியில் வெப்பநிலை மாறுபட்டாலும், உட்புறத்தில் சீரான வெப்பநிலையை தக்க வைப்பதுதான் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

உதாரணத்திற்கு, 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தில் பதிவு செய்து வைத்துவிட்டீர்கள் என்றால், வெளியில் 30 டிகிரி வெப்பநிலை இருந்தாலும் சரி அல்லது 40 டிகிரி வெப்ப நிலை இருந்தாலும் சரி. காருக்குள் 22 டிகிரி வெப்பநிலை தொடர்ந்து தக்க வைக்கப்படும்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

சாதாரண ஏசி சிஸ்டம் போன்று விசிறியின் வேகத்தை கூட்டிக் குறைத்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இதுமட்டுமல்லாமல், இந்த க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்தில் மற்றுமொரு வசதி இப்போது வரும் சொகுசு கார்களில் வழங்கப்படுகிறது.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

அதாவது, மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல். இவற்றை 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் என்று கார் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

காரின் கேபினுக்குள் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி வெப்பநிலை இருக்கும் வகையில் கட்டுப்படுத்தும் வசதிதான் மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல். சில கார்களில் முன்வரிசை இருக்கைக்கும், பின்வரிசை இருக்கைக்கும் தனித்தனியாக வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியும்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

சில கார்களில் ஓட்டுனர், சக பயணி, பின்புற இருக்கையில் இருப்பவர்கள் என காருக்குள் பயணிக்கும் ஒவ்வொருவர் அமர்ந்திருக்கும் பகுதியிலும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இதனை மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

சாதாரண ஏசி சிஸ்டத்தை விட க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்தில் மற்றொரு பயனும் இருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி மூலமாக அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால், எரிபொருள் செலவுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க சேமிப்பு கிடைக்கும்.

ஏசி சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்: வித்தியாசம்?

இப்போது விலை உயர்ந்த கார்களில் இந்த க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பிடித்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் ஆல்ட்டோவில் கூட இந்த க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Difference Between Air Con And Climate Control?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X