Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய சாலைகளுக்கு ஸ்போக் சக்கரங்கள் தான் சிறந்தது என்றால் அலாய் சக்கரங்களை பெரிதும் விரும்புவது ஏன்
அலாய் சக்கரத்தின் பயன்பாடு பற்றி, இன்றைய இந்தியாவில் தெரியாத வாகன ஓட்டிகளே இல்லை எனலாம். இதற்கு வித்திட்ட மாடல்கள் கரிஷ்மா மற்றும் பல்சர் பைக்குகள்.

10 , 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த பைக்குகள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இதன்முலம் அலாய் சக்கரத்தின் பயன்பாடும் தெரியவந்தன.

ஸ்போக் கம்பிகளை பெற்ற சக்கரங்களின் காலம் ஒரு யுகம் என்றால், அலாய் சக்கரங்களுக்கான காலம் இன்று. இவை இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன..?? தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்போக் கம்பி சக்கரங்களின் நன்மைகள்:
உண்மையில் அலாய் சக்கரங்களை விட ஸ்போக் கம்பிகளை பெற்ற சக்கரங்கள் தான் வலிமையானவை. அதனால் தான் அவை அட்வென்ச்சர் மற்றும் ஆஃப்-ரோடு பைக்குகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்போக் கம்பி சக்கரங்களுக்கான ஆயுள் அதிகம். அதனால் அது எந்த ஒரு தடத்திலும், வழியிலும் எளிதாக பயணிக்கும். அதற்கான உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மையும் அதிகம்.

ஏறி இறங்குவது, எகிறி குதிப்பது என எந்தவொரு செயலையும் ஸ்போக் கம்பி சக்கரங்களை பெற்ற பைக்கில் செய்யலாம். எந்தவொரு திசைக்கும் நீங்கள் இவற்றை இட்டுச்செல்லலாம்.
இதிலிருக்கும் உறுதிப்பாடு காரணமாக பைக்கின் செயல்பாடு மற்றும் அதை பொருத்த ரைடரின் இயக்கத்தையும் ஸ்போக் கம்பி பெற்ற சக்கரங்கள் சீராக கையாளும்.

ஸ்போக் கம்பி சக்கரங்களில் உள்ள இடர்பாடுகள்:
இத்தகைய சக்கரங்களை கொண்ட பைக்கில் அதிர்வுகள் என்பது சக்கரத்தின் டயரிலிருந்து தான் சஸ்பென்ஷனை கட்டுப்படுத்தும் சிஸ்டங்களுக்கு செல்லும்.
இப்படி ஒரு நிலை ஏற்படுவதால், சக்கரத்தின் டயர் உறுதியாக இருப்பது அவசியம். ஒரு வேலை சொத்தப்பலான டயராக இருந்தால், அதிர்வுகளை தாங்காமல் மொத்த சக்கரமே உடைந்துவிடும்.

அலாய் சக்கரங்களை நாம் விரும்புவது ஏன்?
இந்திய சாலைகளுக்கு ஏற்றது என்றால் அது ஸ்போக் கம்பிகளை பெற்ற சக்கரங்கள் தான். ஆனால் இன்று வாகன ஓட்டிகள் பெரும்பாலும் அலாய் சக்கரங்களை பெற்ற வாகனங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

காரணம் அலாய் சக்கரங்கள் இலகுவான எடையில், மிகவும் உறுதியான செயல்பாடுடன் கிடைக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களுக்கு அதன் மீதான மோகம் அதிகளவில் உள்ளது.

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இப்படியொரு அழுத்தம் இருப்பதால், அவை அலாய் சக்கரங்களை பெற்ற வாகனங்களைத்தான் அதிகளவில் தயாரிக்கின்றன.
தொடர்ந்து அலாய் சக்கரங்களுக்கான செயல்பாடும் எளிதானது. இதனால், யாரு வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய வசதி.

அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுவதால் வாகனங்கள் மிகவும் எடை குறைந்தே இருக்கும். இதனால் வாகனத்தின் செயல்திறன் மற்றும் எரிவாயு சிக்கனம் சிறந்தளவில் இருக்கும்.

அலாய் சக்கரங்களை தேர்வு செய்வது ஏன்?
ஆஃப் ரோடு போன்ற பயணத்திற்கு ஸ்போக் கம்பி பெற்ற சக்கரங்கள் தான் சிறந்தவை என்றால் ஏன் பெரும்பாலான ஸ்போர்ட் பைக்குகள் அலாய் சக்கரத்துடன் தயாரிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழலாம்.

ஸ்போர்ட் பைக்குகள் என்று வரும் போது அதனுடைய செயல்திறன் தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய கவனம் பெறுகின்றன. அதுபோன்ற பைக்குகள் அதிக எடையை கொண்டுயிருந்தால் செயல்திறன் சொதப்பிவிடும்.

இதன் காரணமாக ஸ்போர்ட் பைக்குகள் சிறந்த வலிமையுடனும், அதே சமயத்தில் எளிய முறையில் கையாளக்கூடிய எடையுடனும் இருக்க வேண்டும். இப்படியொரு தேவை வரும் போது தான் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

அலாய் சக்கரங்கள் அலுமினியம் அல்லது மெக்னீசியம் கூறுகளால் தான் தயாரிக்கப்படுகின்றன. இதனால் சக்கரங்களுக்கான வலிமை மற்றும் கையாள தேவையான உறுதியும் கிடைக்கிறது.

தொடர்ந்து மொத்த பைக்கின் எடையையும் தாங்கக்கூடிய தேவையுடன் அலாய் சக்கரங்களை தயாரிக்கவும் முடியும். இப்படி கட்டமைக்கப்படும் பைக்குகள் அதிகப்படியான வேகத்திலும் சீரான இயக்கத்தை வழங்கும்.

இதனால் தான் பல ஸ்போர்ட் பைக்குகள் அலாய் சக்கரத்தில் வெளிவருகின்றன. இவை எல்லாவற்றையும் விட ஸ்போக் கம்பி சக்கரங்களை விட அலாய் சக்கரங்கள் சிறந்தவை என்று சொல்ல முதன்மையான காரணம் ஒன்று உண்டு.

அது தான் டியூப்லெஸ். டியூப் இல்லாமல் ஸ்போக் கம்பி சக்கரங்களை நாம் தயாரிக்கவே முடியாது. ஆனால் அது அலாய் சக்கரத்தில் சாத்தியப்படுகிறது.

மலைப்பிரதேசங்கள் அல்லது கரடுமுரடான சாலைகளை கொண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தாராளமாக ஸ்போக் கம்பிகளை பெற்ற டயர்களை வாகனங்களுக்கு பொருத்தலாம்.

தவிர, ஸ்போக் பைக்குகளை பெற்ற சக்கரங்களில் எதாவது கோளாறு எழுந்தால், அதை சரிசெய்வதும் மிக மலிவானது தான். அருகில் உள்ள எந்தவொரு மெக்கானிக்காலும் உடனடி பழுதை சரிசெய்ய முடியும். சர்வீஸ் சார்ஜும் பட்ஜெட்டுக்குள் அடங்கும்.