உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

கார் வைத்திருக்கும் பலருக்கு காரில் உள்ள சஸ்பென்சன்கள் பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சஸ்பென்சன் என்பது காரில் உள்ள வீலையும், காரையும் கனெக்ட் செய்வது தான். இது காரில் செல்பவர்களுக்கு சொகுசான பயணம் மட்டும் வழங்குவதில்லை, கரடுமுரடான ரோடுகள் மற்றும் காரின் பிரேக்கிங் சிஸ்டர் எல்லாம் இதை பொருத்து தான் அமைகிறது.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இச்செய்தியில் நாம் கார்களில் பயன்படுத்தப்படும் கரடுமுரடான சஸ்பென்சன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். அதன் மூலம் உங்கள் காரில் பொருத்தப்பட்டுள்ள சஸ்பென்சன்கள் எது. அது எப்படிவேலை செய்கிறது, அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

டிபென்டன்ட் சஸ்பென்சன் சிஸ்டம்

டிபென்டன்ட் சஸ்பென்சன் சிஸ்டம் என்பது காரின் வலது மற்றும் இடது பக்க வீலை மையமாக இணைத்து உருவாக்கப்பட்ட சஸ்பென்சன் சிஸ்டம். இதில் ஒருபக்க வீலின் சஸ்பென்சன் ரோட்டின் தன்மைக்கு ஏற்ப சுறுங்கி விரிவடைந்தால் அந்த சஸ்பென்சன் இனணக்கப்பட்ட மற்றொறு வீலின் சஸ்பென்சனும் அதற்கு ஏற்றார் போல் மாற்றம் பெறும். இது பட்டை வடிவில் காட்சியளிக்கும்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இந்த ரக சஸ்பென்சன்கள் பின் பக்க வீல் டிரைவ் உள்ள கார்களிலும் எஸ்.யூ.வி ரக கார்களிலும் பொருத்தப்படும். அதாவது கடினமான பாதிகளின் பயனிக்கூடிய மாதிரியான வடிவமைப்பை பெரும் கார்களுக்கு இந்த சிஸ்டம் பொருத்தப்படும்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இன்டிபென்டன்ட் சஸ்பென்சன் சிஸ்டம்

இன்டிபென்டன்ட் சஸ்பென்சன் சிஸ்டம் என்பது எந்த வீலிற்கு டையிலான சஸ்பென்சனிற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஒவ்வொரு வீலும் ரோட்டிற்கு தகுந்தார் போல தனித்தனியாக செயலாற்றம். அதாவது ஒரு புறம் சஸ்பென்சன் சுறுங்கினால் மறுபுறம் அதன் தாக்கம் இருக்காது அந்த வீலில் இருக்கும் பகுதிக்கு ஏற்பட மட்டும் அது செலாற்றும். இந்த ரக சஸ்பென்சன் பொருத்தப்பட்ட கார்களில் சொகுசு வசதி அதிகமாக இருக்கும்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

ரியர் இன்டிபென்டன்ட் சஸ்பென்சன் சிஸ்டம்

பின் பக்க வீல் டிரைவ் உள்ள கார்களில் டிரைவ் சாப்ஸ்ட்கள் காரின் பின்பக்கம் தான் இருக்கும். இது நேரடியாக வாகனத்தின் பிரேமில் பொருத்தப்பட்டிருக்கும். அப்பொழுது தான் பின் பக்க வீலிற்கு நேரடியாக டிரைவ் கொடுக்க முடியும். இந்த மாதிரியான கார்களில் பின்பக்கம் மட்டும் இன்டிபென்டன்ட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டிருக்கும். சில கார்கள் அடாப்டிவ் ஏர் சஸ்பென்சன்கள் பொருத்தப்படும் இது காரின் ஆக்ஸில் மற்றும் சேஸிஸ் இன் உயரத்தை பொருத்து அமையும்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

சஸ்பென்சன் எப்படி செயல்படுகதிறது?

ஒவ்வொரு வகையான சஸ்பென்சனும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. டபுள் விஷ் போன் எனப்படும் சஸ்பென்ஸன் இரண்டு மெட்டல் ராடு ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் ஷாக் அபசர்பர் மற்றும் ஸ்பிங்க காயில்கள் இருக்கும். இந்த வகையாக சஸ்பென்சன்கள் பைக்கின் பின்புற வீலில் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காரை பொருத்தவரை பெரும்பாலும் காரின் முன் பக்கம் தான் இவ்வாறான சஸ்பென்சன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

மெக்பேர்சன் ஸ்டர்ட் எனும் சஸ்பென்சன் சிஸ்டம் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கமும் பொருத்தப்படும். மேக்பேர்சன் ஸ்டர்ட் என்பது வீல் ஹப்பின் டியூபளர் ஸ்டர்ட் கொண்டு பொருத்தப்படும். இது வீல் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். இதிலும் ஷாக் அபர்சர்பர், மற்றும் ஸ்பிரிங் காயில் அமைந்திருக்கும் இது ரோட்டின் தன்மைக்கு ஈடுகொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

டுவிஸ்ட் பீம் சஸ்பென்சன்

இது செமி இன்டிபென்டன்ட் சிஸ்டம். இதில் பெரும்பாலும் சஸ்பென்சன்கள் இன்டிபென்டன்ட் சிஸ்டம் போல தான் செயல்படும். ஆனால் சில அசைவுகளின் தாக்கத்தை மட்டும் மற்ற வீலுக்கும் வழங்கும். இந்த சிஸ்டம் பின்பக்க வீலில் அதிகமாக பயன்படுத்தப்படும். இதன் சிறப்பு அம்சம் என்வென்றால் சிறப்பான டிசைன், குறைந்த எடை, குறைந்த விலை, மற்றும் நீடித்து உழைக்கும் திறன் தான்.

உங்கள் காரில் எந்த வகையான சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது? அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

கார் வைத்திருப்பவர்கள் சஸ்பென்சன்கள் குறித்து சிறிது அளவாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. காரை பராமரிக்கும் போது இது குறித்த தெளிவு கார் வைத்திருப்பவருக்கு இருக்க வேண்டும். இது தான் சஸ்பென்ஸினில் உள்ள ஷாக் அப்சர்பர் மற்றம் ஸ்பிரிங் காயில் ஆகிய பகுதிகளை குறித்து நமக்கு தெளிவான தகவலை தரும். இது குறித்த விளக்க வீடியோவை நீங்கள் கீழே காணலாம்

மேலும் ஷாக் அப்சர்பர்களுக்கும் பிரேக்கிற்கும் கூட சம்மந்தம் இருக்கிறது. இது தினம் தோறும் பயன்படாவிட்டாலும் காரின் உள்ள பிரேக்கில் நீங்கள் ரிப்பேர் மேற்கொண்டால் அப்பொழுது காரின் உள்ள சஸ்பென்ஸன்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

Source:CADesign_Tech

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Different Types of Car Suspension Systems.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X