பூட்டிய காரை திறந்தவுடனே ஏசியை போடாதீங்க! - ஏன் தெரியுமா?

By Saravana

வெளியில் காயும் வெயிலின் தகிப்பை தணித்துக் கொள்ள காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை ஓட விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வது பலருக்கு வழக்கம்.

ஆனால், காரை திறந்தவுடன் ஏசியை போடுவது உடல் ரீதியான பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வருமளவுக்கு பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

நச்சுப் பொருள்

நச்சுப் பொருள்

பூட்டிய கார் வெயிலில் நிறுத்தியிருக்கும்போது டேஷ்போர்டு, ஏர் ஃப்ரெஷ்னர் மற்றும் இருக்கைகளின் பாகங்களிலிருந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பென்ஸின் வேதிப்பொருள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில், அடங்கியிருக்கும் கார்சினோஜன் என்ற நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டு பண்ணும் தன்மை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் வாடை

பிளாஸ்டிக் வாடை

பூட்டிய காரை திறந்தவுடன் வரும் பிளாஸ்டிக் வாடையை வைத்து பென்ஸின் அதிக அளவில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மேலும், இந்த பென்ஸினில் புற்றுநோய் காரணி மட்டுமில்லாமல், ரத்த சோகை, ரத்த அணுக்களை குறைக்கும் காரணிகளையும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பென்ஸின் அளவு

பென்ஸின் அளவு

பொதுவாக மூடப்பட்ட இடங்களில் ஒரு சதுர அடியில் 50 மில்லி கிராம் பென்ஸின் இருக்கலாம். மூடப்பட்டு நிறுத்தியிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் பென்ஸின் இருக்கலாம். ஆனால்...

ஆபத்து

ஆபத்து

சில சமயம் 60 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்போது நிறுத்தியிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 2000 முதல் 4000 மில்லி கிராம் அளவு பென்ஸின் வெளியேற்றப்படும். சாதாரண அளவை விட 40 மடங்கு கூடுதல் பென்ஸினை பயணிகள் சுவாசத்தில் உள்ளிழுக்கும் ஆபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ்

டிப்ஸ்

கிட்னி, கல்லீரல் போன்றவையும் பென்ஸினில் இருக்கும் கார்சினோஜன் நச்சுப் பொருளால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாம். எனவே, காரை திறந்தவுடன் கண்ணாடிகளை இறக்கிவிட்டு உள்ளே ஒரு சில நிமிடங்கள் வெளிக் காற்று உள்ளே செல்லும் வரை காத்திருக்கவும். பின்னர், ஏசியை ஆன் செய்வது நலம். இல்லையென்றால், பென்ஸின் வெளியேறாமல் உடலுக்குள் அதிக அளவில் சுவாசம் வழியாக உள் இழுக்கப்படும் ஆபத்து இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Please Open the windows after you enter your car and do not turn On the air-conditioning immediately. According to a research, the car dashboard, sofa, air freshener emit Benzene, a Cancer causing toxin (carcinogen - take time to observe the smell of heated plastic in your car). In addition to causing cancer, Benzene has other effects, like it poisons your bones, causes anemia and reduces white blood cells. Prolonged exposure will cause Leukemia, increasing the risk of cancer. May also cause miscarriage.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more