Just In
- 1 hr ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
- 1 hr ago
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
- 2 hrs ago
யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...
- 2 hrs ago
பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...
Don't Miss!
- News
இதுதான் அதிமுக.. கூட்டணிக்கு கொடுத்த "ஸ்ட்ராங் சிக்னல்.." வியந்து பார்க்கும் பாஜக, தேமுதிக!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Sports
மார்க் மை வேர்ட்ஸ்... வரலாற்றிலேயே இதுதான் சிறந்த அணியாக இருக்கும்....சுனில் கவாஸ்கர் உறுதி
- Finance
எதிர்பாராத சர்பிரைஸ்.. காக்னிசண்ட் சொன்ன செம விஷயம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!
- Movies
ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை.. தளபதி 65 இயக்குநர் வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
- Lifestyle
இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏசி போடுவதால் காரின் மைலேஜ் குறையுமா?- உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம்!
சற்றே பின்னோக்கி 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரும்பி பார்த்தால், கார் என்பதே வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பர பொருளாக இருந்தது. அதிலும் ஏசி கார்கள் என்பதே பெரிய விஷயமாக கருதப்பட்டது.
ஏசி வசதி கொண்ட கார் என்பதை பின்புற விண்ட் ஷீல்டில் குறிப்பிட்டு, No Hand Signal என்பதையும் சேர்த்து போட்டு அந்த காரின் அந்தஸ்தை கூட்டிய வேடிக்கை வினோதங்களும் நடந்தன.

ஆனால், இப்போது ஏசி வசதி இல்லாத காரே இல்லை எனலாம். மிக குறைவான விலை கொண்ட காரில் கூட ஏசி வசதி என்பது அடிப்படை விஷயமாக இடம்பெறுகிறது. இந்த நிலையில், ஏசி வசதி உள்ள காரில், அதனை இயக்கும்போது மைலேஜ் குறையும் என்ற கருத்து பரவலாக உண்டு. அதுகுறித்து இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகம் நிலவுகிறது. இதனால், இந்தியர்களுக்கு ஏசி என்பது மிக அத்தியாவசியமான அடிப்படை வசதி. அதேநேரத்தில், ஏசி போடுவதால் மைலேஜ் குறையும் என்ற விஷயம், அதனை பயன்படுத்துவதில் பல கார் வாடிக்கையாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

ஏனெனில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வெயிலுடன் போட்டி போட்டு உச்சத்தில் நிற்கிறது. இந்த சூழலில் வெயிலையும், எரிபொருள் செலவையும் வாடிக்கையாளர்கள் சமாளிக்கும் வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

ஏசி மெஷின் கார் எஞ்சின் சக்தியை பயன்படுத்தி இயங்குகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஏசி எந்திரத்தின் ஏர் கம்ப்ரஷர் இயங்குவதற்கு கார் எஞ்சினிலிருந்து ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு கூடுதல் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால், அது எந்தளவுக்கு என்பதே இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். அந்த காலத்து கார்களில் ஏசி போடும்போது குறைந்தது 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் செலவு இருந்தது உண்மைதான்.

ஆனால், இப்போது வரும் புதிய கார்களில் மிக நவீன தொழில்நுட்ங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ஏசி மெஷின் இயங்குவதற்கு மிக குறைந்த அளவு எரிபொருள் செலவு கூடுதலாக இருக்கும்.

அதேநேரத்தில், மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்றமான சாலைகளில் செல்லும்போது இந்த மைலேஜ் குறையும் என்பதும் மாற்று கருத்தில்லை.
அதேநேரத்தில், ஏசி மெஷினை இயக்கும்போது ஏற்படும் எரிபொருள் செலவு மற்றொரு விதத்தில் உங்களுக்கு சமன் செய்யப்படுகிறது.

ஆம், ஏசி போடாத நிலையில் நீங்கள் காரின் ஜன்னல்களை திறந்து வைத்தே ஓட்ட வேண்டியிருக்கும். அவ்வாறு செல்லும்போது காரின் காற்று கிழித்துச் செல்லும் போக்கு பாதிக்கப்படும். காற்று ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் சென்று காரின் வேகத்தை தடுக்கும்.

இதனால், கார் முன்னோக்கி செல்வதற்கு கூடுதல் திறனை வெளிப்படுத்த வேண்டி, எரிபொருளை கூடுதலாக எடுத்துக் கொள்ளும். இதனால், மைலேஜ் குறையும். மறுபுறத்தில் ஏசி போடும்போது ஜன்னல்கள் மூடியிருப்பதால், காருக்குள் காற்று புகுவது தடுக்கப்படுவதால், மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கிடைப்பதால் எஞ்சினுக்கு ஏற்படும் கூடுதல் சுமை குறையும்.

எனவே, ஏசி போட்டு செல்லும்போது ஏற்படும் கூடுதல் எரிபொருள் செலவு சமன் செய்யப்படுகிறது. எனவே, ஜன்னலை மூடி வைத்து செல்வதே சிறந்தது. அதேநேரத்தில், நீங்கள் மிக குறைவான வேகத்தில் பயணிக்கும்போது ஜன்னல்களை திறந்து வைத்து கொண்டு ஏசி போடாமல் சென்றால் நிச்சயம் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பதையும் சொல்ல வேண்டும்.

ஏசி போடுவதால் அதிக அளவு எரிபொருள் இழப்பு ஏற்படும் என்ற நினைப்பை முதலில் விட்டுவிடுங்கள். இவற்றையெல்லாம்விட, ஏசி போட்டு செல்லும்போது வெளிப்புறத்தில் இருந்து வரும் தொற்று கிருமிகள் தாக்கம் மற்றும் கெட்ட வாடைகளையும் தவிர்க்க முடியும்.

மேலும், ஜன்னல் கதவை திறந்து வைத்து கொண்டு நீண்ட நேரம் பிரயாணம் செல்லும்போது ஓட்டுனருக்கும், வெளிக்காற்று அதிவேகத்தில் வந்து மோதுவதால் பயணிகளுக்கும் உடல் சோர்வும், உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதுடன், இறைச்சலும் தலைவலியை ஏற்படுத்தும்.
எனவே, ஏசி நல்லது!