வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காருக்கு இன்ஸ்யூரன்ஸ் கிடைக்குமா?

Written By:

வரலாறு காணாத மழை வெள்ளத்தால், தமிழகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. உயிர்ச்சேதம், பொருட்சேதம் என அனைத்து வகையிலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

திருத்தணி அருகே கொசஸ்தலை தரைப்பாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் காப்பீடு
  

காரில் இருந்த 5 பேர் மீட்கப்பட்டுவிட்டாலும், முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இதுபோன்ற இயற்கை சீற்றங்களின்போது, கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இன்ஸ்யூரன்ஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

சாதாரண வாகன காப்பீட்டுத் திட்டங்களில் இழப்பீடு கோர இயலாது. ஆனால், Comprehensive Insurance திட்டத்தில் காப்பீடு செய்திருந்தால், இதுபோன்று இயற்கை சீற்றங்களின்போது வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற வழிவகை உண்டு.

காப்பீட்டு நிறுவனத்தின் சேத மதிப்பீட்டாளரின் ஆய்வுகள் மற்றும் பரிந்துரையின்படி, வாகனத்தின் உதிரிபாகங்களின் சேதத்திற்கு தக்கவாறு பகுதி இழப்பீட்டையும், சீரமைக்க முடியாத அளவுக்கு வாகனம் முழுமையாக சேதமடைந்திருந்தால், காரின் மதிப்புக்கு தக்கவாறு முழுமையான இழப்பீட்டையும் பெற முடியும்.

English summary
Does Car Insurance Cover Natural Disasters?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark