பைக் கழுவும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! கொஞ்சம் மிஸ் ஆச்சுனா கூட காயலான் கடைக்குதான் போடணும்!

பைக்கை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்கும் பழக்கம் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது. உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் பைக்கை கழுவும்போது, ஒரு சிலர் ஒரு சில தவறுகளை செய்கின்றனர். அவை என்னென்ன? என்பதும் குறித்தும், ஏன் அந்த தவறுகளை தப்பி தவறி கூட செய்ய கூடாது? என்பது குறித்தும், இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்ஜின் சூடாக இருக்கும்போது பைக்கை கழுவ கூடாது!

தொலை தூர பயணங்களை மேற்கொண்டு வந்த பிறகு, பைக் அழுக்காகி இருக்கும். எனவே வீட்டிற்கு வந்த உடனேயே பைக்கை கழுவும் முடிவிற்கு பலர் வருகின்றனர். இந்த நல்ல மனநிலைதான். ஆனால் உங்கள் பைக்கின் இன்ஜின் குளிர்ச்சியடைவதற்கு நீங்கள் சற்று நேரம் கொடுக்க வேண்டும். அதாவது இன்ஜின் சூடாக கொதித்து கொண்டிருக்கும்போது, எக்காரணத்தை கொண்டும் பைக்கை கழுவ கூடாது.

பைக் கழுவும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! கொஞ்சம் மிஸ் ஆச்சுனா கூட காயலான் கடைக்குதான் போடணும்!

சூடான உலோகமும், குளிர்ச்சியான நீரும் நல்ல நண்பர்கள் கிடையாது. எனவே இன்ஜின் சூடாக இருக்கும்போது குளிர்ச்சியான நீரால் அதை கழுவுவது என்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாற்றம், இன்ஜினை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால், இன்ஜின் விரிசல் கூட அடையலாம். அல்லது அவற்றின் பூச்சு பாதிக்கப்படலாம். இந்த பிரச்னைகள் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால், அவற்றை சரி செய்ய அதிக செலவாகும்.

எனவே இன்ஜின் குளிர்ச்சியாவதற்கு சற்று நேரம் கொடுங்கள். கொஞ்ச நேரம் காத்திருப்பதால், உங்கள் அன்றாட பணிகளில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடாது. ஆனால் இன்ஜின் சூடாக இருக்கும்போது, அவசரத்தில் நீங்கள் பைக்கை கழுவினால், பெரிய பிரச்னைகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. எனவே உங்கள் பைக்கை கழுவுவதற்கு முன்பு, இன்ஜின் எப்படி உள்ளது? என்பதை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

பைக் கழுவும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணீராதீங்க! கொஞ்சம் மிஸ் ஆச்சுனா கூட காயலான் கடைக்குதான் போடணும்!

குளிக்கற சோப்பை யூஸ் பண்ணாதீங்க!

வீட்டில் குளியலுக்கு பயன்படுத்தும் சோப்கள் மற்றும் துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்ட்கள் ஆகியவற்றை எல்லாம் கொண்டு, பைக்குகளை ஒருபோதும் கழுவாதீர்கள். உங்கள் பைக்கை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், நீங்கள் நினைப்பதை விட நுண்ணியதாக இருக்கலாம். எனவே பைக்குகளை சுத்தம் செய்வதற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி மட்டுமே நீங்கள் பைக்குகளை கழுவ வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஏனெனில் பைக்குகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்படாத பொருட்களில், கடுமையான ரசாயனங்கள் இருக்கலாம். அவை உங்கள் பைக்கின் பெயிண்ட்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் உங்கள் பைக்கின் உலோக பாகங்களிலும் கூட பிரச்னை ஏற்படலாம் என ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எனவே பைக்கிற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, குறிப்பாக உங்கள் பைக் தயாரிப்பு நிறுவனம் அல்லது டீலர் பரிந்துரைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

முழுமையாக தயார் ஆகாமல் வேலையை தொடங்க வேண்டாம்!

பைக்கை கழுவுவது என்பது விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் அறிவியல் கிடையாது. ஆனால் மற்ற வேலைகளை போலவே, இதற்கும் நீங்கள் முழுமையாக தயார் ஆகியிருக்க வேண்டும். தேவையான பொருட்களை எல்லாம் முன் கூட்டியே எடுத்து வைத்து கொண்டால், சௌகரியமாகவும், ரிலாக்ஸ் ஆகவும் நீங்கள் வேலையை முடித்து விடலாம். முதலில் உங்களுக்கு நன்றாக நேரம் இருக்கும்போது மட்டும் பைக்கை சுத்தம் செய்ய ஆரம்பியுங்கள்.

அத்துடன் போதுமான அளவிற்கு தண்ணீர், சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள், துடைப்பதற்கான துணி மற்றும் பிரஷ்கள் ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஏதாவது பொருட்களை மறந்து வைத்து விட்டு, மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் ஓட வேண்டிய அவசியம் ஏற்படுவதை தவிர்க்கலாம். அத்துடன் வேலையை விரைவாக முடித்து, உங்கள் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பதுடன், தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதையும் தவிர்க்க முடியும். இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles
English summary
Dont make these mistakes while washing your bike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X