உங்கள் கார்களின் ஆயுளை நீட்டிக்க செய்யும் எளிய வழிமுறைகள்...!!

எரிவாயுவின் செயல்பாடு, டயர்களின் சுழற்சி, இயங்கும் திறன் இவை தான் ஒரு கார் சரியாக செயல்படுவதற்கான அறிகுறிகள். இது அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

இதில் எதாவது ஒரு தளத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு கார்கள் தான் காரணம் என்பது அல்ல. கோளாறுக்கான பொறுப்பு எப்போதும் நம்மிடம் தான் உள்ளது.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

கார்களுக்கான ஆயுள் என்பது நாம் அதை இயக்கும் விதத்தில் தான் அடங்கியுள்ளது. அதனால் கார் ஓட்டும்போது அதனுடைய ஆயுளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

கியர்ஷிஃப்ட் பயன்பாட்டில் அக்கறை தேவை

கியர்ஷிஃப்ட் பயன்பாட்டில் அக்கறை தேவை

கார் ஓட்டும் போது பலர் கியரை தேவையில்லாமல் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒரு ஸ்டைல என நினைத்து செய்யும் இந்த பழக்கம் இறுதியில் கியர்பாக்ஸில் வேட்டு வைத்துவிடும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

குறைந்த அழுத்தம் கொடுத்தால் கூட கியர்பாக்ஸ் பழுதை சந்திக்கும். எப்போதும் கியரை கடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணி நேரங்கள் காட்டும் அளவீட்டில் வையுங்கள்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

அதுதான் எப்போதும் கியரின் மீது உங்களுக்கு சரியான கட்டுப்பாட்டை கொடுக்கும். அவசர கதியில் கியரின் பயன்பாடு காலை வாராமல் பாதுகாக்கும்.

பார்க்கிங் பிரேக்குகள் கட்டாயம்

பார்க்கிங் பிரேக்குகள் கட்டாயம்

டிரைவிங் கிளாஸ் மூலம் கார் கற்றுக்கொண்டவர்கள் அனைவரிடமும் பயிற்சியாளர் நிச்சயம் இதை சொல்லி இருப்பார்கள்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

பார்க்கிங் பிரேக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், காரின் மொத்த எடையும் பார்க்கிங் பௌல் என்ற பகுதிக்கு வந்துவிடும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

கியர்பகாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த பார்க்கிங் பௌல் சேதமடைந்தால், அது கியர்பாக்ஸிற்கும் இட்டுச்செல்லும்.

தேவையில்லாத சுமை

தேவையில்லாத சுமை

ஒரு சில கார் பயனாளிகளுக்கு உப்பு, கற்பூரம் முதல் ஃபிரிட்ஜ் ஏசி போன்ற பிரம்மாண்ட அளவிலான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்க அல்லது கொண்டுசெல்ல கார் தான் வேண்டும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

காருக்கான ஆயுள் என்பது அதில் நாம் ஏற்றும் சுமையிலும் உள்ளது என்பதை பல உரிமையாளர்கள் உணரவேண்டும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

பொதி மாடு போல காரில் நாம் ஏற்றும் சுமை எரிவாயு திறனை மட்டும் வீனடிக்காமல், காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்ற அடிப்படையான அம்சங்களையும் கெடுத்துவிடும்.

எரிவாயு சேமிப்பு

எரிவாயு சேமிப்பு

கார் ஓட்டும் பலருக்கும் எரிவாயு கொள்ளவை சாராசரியாக பராமரிக்கும் எண்ணமில்லை. எரிவாயு குறியீடு சிறிதளவில் இருந்தாலும் கூட, பெட்ரொல் போட மனம் வருவதில்லை.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

குறைந்தளவிலான எரிவாயு உடன் கார் இயங்கி வந்தால், டேங்க் பயங்கர சூடாகி விடும். இதுபோன்ற பழக்க வழக்கம் காரின் ஆயுளை சீக்கிரம் மட்டுப்படுத்தி விடும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

குறைந்தது டேங்கின் ஒரு அடி அளவாவது எரிவாயு இருந்தால், உங்கள் கார் தப்பித்தது. அதனால் எரிவாயு குறியீட்டின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும்.

பிரேக்கிங் பயன்பாடு

பிரேக்கிங் பயன்பாடு

எதிர்பாராத விதமாகவோ அல்லது தேவையை கருதியோ பிரேக் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் நம்முடன் எத்தனை பேர் காரில் உள்ளார்கள் என்பதில் தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய செய்தி.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

அதிக அழுத்தமுள்ள காரில் இதுபோன்ற திடீர் அல்லது சூழ்நிலை கருதி பிரேக் பிடிப்பதால் பிரேக்கிங் பேட் மற்றும் ரோட்டோரில் கோளாறு உருவாகும்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

எப்போது நிதானமாக, அல்லது கவனத்துடன் கார் ஓட்டும்போது பிரேக்கிங்கை பிடித்தால், ஓரளவு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கார்களின் ஆயுளை காப்பதற்கான வழிமுறைகள்..!!

இதுபோன்ற செயல்முறைகளுடன், குளிர்காலங்களில் எஞ்சினை அவ்வப்போது இயக்குவது, கிளட்ச்சுகளை தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருப்பது, போன்ற பழக்க வழக்கங்களும் காரின் ஆயுளை கூட்டும்.

Most Read Articles

English summary
Read in Tamil: Little Driving Habits Can Damage the Car, Click for the Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X