விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

Written By:

போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவில் வாகனம் ஓட்டும் பல பேருக்கு முழுமையாக போக்குவரத்து விதிகள் தெரிவதில்லை.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இதன் விளைவு இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் ஏற்படும் மரணங்களும் அதிக அளவில் இருந்து வருகிறது. இவை எல்லாம் அதிகம் மனித தவறுகளால் நடப்பது தான்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இந்தியாவில் மிஷின் கோளாறால் நடக்கும் சாலை விபத்துக்களை விட மனித தவறுகளால் தான் அதிக சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான டிரைவர்கள் தங்கள் டிரைவிங் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

நீங்கள் உங்கள் வாகனங்களை ஓட்டும் போது மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். நீங்கள் டிரைவிங் செய்யும் போது இதை கட்டாயம் கடைபிடியுங்கள், விபத்துக்களில் இருந்து உங்களை நீச்சயம் இது காக்கும்

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

செக்லிஸ்ட்

நீங்கள் தினமும் உங்கள் வீட்டிலோ அல்லது காரஜில் இருந்தோ காரை எடுக்கும் போது நீங்கள் சில செக் செய்ய வேண்டிய விஷயங்கள் அடங்கிய செக்லிஸ்டை உங்களுக்காக கீழே வழங்கியுள்ளோம். இதை தினமும் நீங்கள் செக் செய்ய வேண்டியது அவசியம். இதுவே உங்களை விபத்தில் இருந்து காப்பதுடன் காரை பராமரிப்பிற்கும் உதவும்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

1. பேட்டரி செக்அப்

2.ஹெட்லைட் செக்அப்

3. ஆயில் செக்அப்

4. ரேடியேட்டரில் உள்ள கூலண்ட் செக்கப்,

5. பிரேக்குகள் செக் செய்தல்,

6. டயர்களில் காற்றின் அளவுகளை செக் செய்தல்

7.வாகனத்தில் உள்ள பியூலின் அளவுகளை செக் செய்தல்,

8. இன்ஜின் கண்டிஷனை செக் செய்தல்,

9.வாகனம் பாதி வழியில் செல்லும்போது சிறிது பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான டூல்ஸ்

இவற்றை மறக்காமல் தினமும் செக் செய்துகொள்ளுங்கள் இதன் பிறகே வாகனத்தை இயக்க துவங்குவது தான் நல்லது.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

2. சீட் பெல்ட்

காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது என்பது கட்டாயம், கார் விபத்தில சிக்கினால் இது உங்களை விபத்துக்களில் பெரிய அளவிற்கு காயம் இல்லாமல் காப்பாற்றும், உங்கள் காரை ஸ்டா்ட் செய்வதற்கு முன் கட்டாயம் சீட் பெல்டை அணிந்து கொள்ளுங்கள், உங்கள் காரை ஸ்டாப் செய்த பின்பே சீட் பெல்டை கழட்டுங்கள்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இந்தியாவில் 1994ம் ஆண்டு பின் தயாரிக்கப்பட்ட கார்களில் முன் பக்க சீட்களில் சீட் பெல்ட் இருக்கும், 2002ம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட கார்களில் அனைத்து சீட்களிலும் சீட் பெல்ட் இருக்கும், நீங்கள் சீட் பெல்ட் இல்லாத பழைய மாடல் கார்களை ஓட்டி வந்தால் நீச்சயம் உங்கள் காருக்கு சீட் பெல்ட்டை பொருத்தி கொள்ளுங்கள்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

3. குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்

இந்தியாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் சாலையில் பயணிக்கும் மாற்ற வாகனத்தில் வருபவர்களுக்கும் ஆபத்து தான்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இந்தியாவில் மது போதையால் ஏற்படும் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இருந்த ரக விபத்துகளில் உயிர் பலியின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் நீங்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

4. வாகனங்களை முந்துகையில் கவனம்

ரோட்டில் செல்லும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு வேகத்தில் செல்லும், அது அந்த வாகன ஓட்டுநர்களையும், அவர்கள் வாகனங்களின் கண்டிஷன்களையும், பொருத்தது.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இதனால் வாகனங்களை ஓவர்டேக் செய்வது என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதற்கான விதிமுறை இருக்கிறது. நீங்கள் ஓவர் டேக் செய்யும் முன்பு உங்கள் வாகனத்தின் ரைட் சைடு இண்டிகேட்டரை ஆன் செய்து முன்னாள் வருபவருக்கும் பின்னால் வருபவருக்கும் நீங்கள் ஓவர் டேக் செய்யப்போவதை தெரிவியுங்கள்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

ஓவர் டேக் செய்யும் போது முன்னாள் செல்லும் வாகனத்திற்கு முன் பகுதியிலும், உங்கள் வாகனத்தின் பின் பகுதியிலும் போதிய அளவு இடம் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள், உங்கள் முன்னாள் செல்லும் வாகன ஓட்டுநர் நீங்கள் செல்லலாம் என சிக்னல் செய்வார் அதன் பின்பே நீங்கள் செல்லுங்கள்

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

முக்கியமாக நடை பாதை பயணிகள் ரோட்டை கடக்கும் இடத்திற்கு முன்பாக 30 மீட்டர் வரையிலும், திருப்பங்களிலும் ஓவர் டேக் செய்வதை தவிர்க்கவும். ஓவர் டேக் செய்கையில் ஏற்படும் விபத்துக்களை மேல கூறியுள்ளதை பின் பற்றினாலே ஓரளவிற்கு அதை தவிர்க்கலாம்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

5. திரும்புகையில் கவனம்

நீங்கள் செல்லும் சாலையில் வேறு சாலைக்கு நீங்கள் திரும்ப வேண்டியது இருந்தாலோ, சாலையில் திருப்பங்கள் இருந்தாலோ நீங்கள் இன்டிகேட்டர் மூலம் உங்களுக்கு எதிரில் வரும் வாகனத்திற்கும், பின்னால் வரும் வாகனத்திற்கும் சிக்னலை திரும்பும் முன்னரே கொடுத்து விடுங்கள்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

மற்ற வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் செய்ய போகிறீர்கள் என கணிக்க முடியாது. நீங்கள் சிக்னல் செய்யாமல் திரும்பினால் மற்ற வாகனங்கள் தங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள வாகனத்தின் மீது மோதும் அபாயம் உள்ளது. இதனால் இரண்டு வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும் பிரச்னைதான்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

6. செல்போன் பயன்படுத்தாதீர்

நீங்கள் வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தாதீர்கள், இது கவனத்தை எளிதாக திசை திருப்பும், இது உங்கள் வாகனத்தை விபத்தில் சிக்க வழிவகுக்கும். செல்போன் பயன்படுத்துவது என்றால் செல்போன் பேசுவது மட்டுமல்ல செல்போனில் வரும் மெசேஜ்களை படிப்பது, சேட் செய்வது என எல்லாம் உங்களின் கவனத்தை திசை திருப்ப கூடியது தான் அவைகளும் இதில் உள்ளடங்கும்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

7. அதிக வேகம் வேண்டாம்

காரில் நீங்கள் அதிக வேகத்தில் செல்வது விபத்துக்களில் முக்கிய காரணமாக இருக்கிறது. நீங்கள் என்னதான் கவனமாக சென்றாலும் உங்கள் வேகத்தால் எதிரே வருபவர்கள நிலை தடுமாறி உங்கள் வாகனத்தில் மோதும் அபாயமும் இருக்கிறது. இது கார் ஓட்டும் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும். சாலையில் மித வேகம் மிக நன்று.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

8. சகாசம் காட்ட வேண்டாம்

நவீன காலமாக கார் மற்றும் பைக்கில் செல்லும் இளைஞர்கள் ரோட்டில் செல்லும் போது சாகம் காட்டுகின்றனர். பைக்கில் செல்வர்கள் முன் வீலை தூக்கியபடியே செல்வது, பைக்கை நிறுத்தும் போது பின் வீலை தூக்க வைப்பது, பைக்கில் செல்லும் போது பைக்கின் மேல் ஏறி நிற்பது என ரோட்டில் இருப்பவர்களின் பார்வை நம் மீது விழ வேண்டும் என கருதி இந்த சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

இது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல விபத்து ஏற்படுத்தும் அதிக வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. உங்கள் சாகங்களை செய்ய ரோடு இடமல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

9. கார் இன்சூரன்ஸ்

நீங்கள் எவ்வளவு நல்ல டிரைவராகவும், சாலைவிதிகளை முழுமையாக பின்பற்றும் டிரைவராகவும் இருந்தாலும், உங்கள் காருக்கு இன்சூரன்ஸ் என்பது முக்கியம் நீங்கள் தவறு செய்யாவிட்டாலும், மற்றவர்கள் செய்யும் தவறுகளால் கூட விபத்துக்கள் நடக்கலாம்.

விபத்தில் இருந்து உங்களை பாதுகாக்க நச்சுன்னு 9 டிப்ஸ்

அவ்வாறு விபத்துக்கள் நடந்தால் அதில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க கார் இன்சூரன்ஸ் உதவும், ஆகையால் காரின் இன்சூரன்சை சரியான நேரத்தில் புதுப்பிப்பது, என்பது மிகவு்ம முக்கிமானது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.வீல் பேலன்ஸிங், வீல் அலைன்மெண்ட் என்றால் என்ன?

02.புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு!!

03.மும்பையில் அஸ்டன் ரேபிட் கார் விபத்தில் சிக்கி பலத்த சேதம்!!

04.புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விரைவில் இந்தோனேஷியாவில் அறிமுகமாகிறது!!

05.ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வாரண்டி - விபரம்!!

English summary
9 Driving Mistakes That are Most Likely to Kill You. read in Tamil
Story first published: Wednesday, April 11, 2018, 11:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark