உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிப்ஸ்கள்

பைக் ஓட்டும் பலருக்கு இருக்கும் ஒரே கவலை தன் பைக்கின் மைலேஜ் பற்றிதான். குறிப்பாக அதிக சிசி பைக் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் போடும் போது எல்லாம் தங்களின் மைலேஜ் பற்றி அதிகம் கவலை கொள்கின்றனர்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

அவ்வாறு கவலைப்படுவர்கள் கீழே சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம் அதை கட்டாயம் பின்பற்றினால் உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

1.பராமரிப்பு

உங்கள் பைக்கை சரியாp கால இடைவெளியில் சர்வீஸ் செய்தாலோ பெரும்பாலான மைலேஜ் பிரச்னைகள் ஏற்படாது. மேலும் நீங்கள் அங்கரீக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களிலேயே பராமிப்பு செய்யுங்கள் அவர்களுக்கு தான் உங்கள் பைக் குறித்த சரியான புரிதல் இருக்கும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

2. டயர்

உங்கள் பைக்கின் டயர்களை தினமும் செக் செய்யுங்கள் டயர் பேட்டன்களுக்கு இடையே கூர்மையான கற்கள், கண்ணாடி துண்டுகள் சிக்கியிருந்தால் அது பயணத்தின்போது தடை ஏற்படுத்தும். மேலும் இதனால பஞ்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் பைக்கின் மைலேஜ் பாதிக்கப்படும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

3. பிரேக்

உங்கள் பைக்கின் பிரேக்கை சரியாக பராமரிக்க வேண்டும். பிரேக் பிடிக்கும் கைப்பிடியில் ஏதேனும் ஸ்க்ரூ லூசாக இருந்தால் அது பிரேக்கில் அழுத்தம் கொடுக்கும். இதனால் நீங்கள் அதிக அளவு ரேஸ் செய்ய வேண்டியது வரும். உங்கள் மைலேஜ் இதன் காரணமாக கூட பாதிக்கப்படலாம் கவனமாக இருக்கவும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

4. சத்தம்

நீங்கள் பைக்கில் ஏதேனும் நட் மற்றும் போல்ட்கள் சரியாக மாட்டாமல் இருந்தாலோ, சேதம் அடைந்திருந்தாலோ வேகமாக செல்லும் போது பெரும் சத்தம் வரும். இதனால் எச்சரில் ஏற்பட்டு பைக்கின் வேகத்தை குறைப்பீர்கள். அப்பொழுது உங்கள் பைக்கின் டார்க் குறைந்து உங்களது மைலேஜ் பாதிக்கப்படும். இவ்வாறான விஷயங்களை உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

5. சீட்

நீங்கள் உட்காரகூடிய சீட்டை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் சீட்களில் பிரச்சனை இருந்தால் நீங்ள் செளகரியமாக உட்கார முடியாது. இதை பைக்கை சரியான வேகத்தில் செலுத்த முடியாமல் திணறுவீர்கள் இதனால் பைக்கின் மைலேஜ் பாதிக்கப்படும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

6. கியர்

முடிந்த அளவு அதிகமான கியர்களிலேயே பயணிக்க முயற்சி செய்யுங்கள் அதே நேரத்தில் அதிகமான கியரில் குறைவாகன கியரில் சென்று இன்ஜின் முட்டும் படி செல்லாதீர்கள். இதனால் இன்ஜினின் ஆயுள் குறையும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

7. ஸ்மூத் டிரைவிங்

நீங்கள் பைக் ஓட்டும் போது உங்கள் ரோட்டிற்கும் நீங்கள் செல்லும் வேகத்திற்கும் தகுந்த ஸ்மூத்தான, ஜென்டிலான ஆக்ஸிலேட்டரை கூட்டுங்கள். அதிக அளவு ஆக்ஸிலேட்டரை கூட்டுவதால் தேவையில்லாமல் சத்தம் ஏற்படுவதோடு மைலேஜில் பாதிப்பும் ஏற்படும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

8. டயர் ஏர் பிரஷர்

பைக்கின் டயர் சரியா ஏர் பிரஷரை கடைபிடியுங்கள் குறைவான பிரஷர் இருந்தால் அதிக ரேஸ் செய்ய வேண்டியது இருக்கும் இதனால் அதிக பெட்ரோல் செலவாகி உங்கள் மைலேஜ் பாதிக்கப்படும்.

உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்க சில டிபஸ்கள்

9. ஆப் செய்யுங்கள்

உங்கள் பைக்கை தேவையில்லாமல் ஆன்னில் வைக்காதீர்கள். நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உங்கள் பைக்கை ஆப் செய்து விடுங்கள் இது தேவையில்லாத பெட்ரோல் செலவை குறைக்கும்.

Most Read Articles

English summary
BIKE MAINTENANCE TIPS. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X