இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

நம் வாகனத்திற்கு இன்ஜின் ஆயில் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்லிதான் தெரியவேண்டும் என்பதில்லை. வாகனத்தின் சிறந்த செயல்பாடு, மைலேஜ், வாழ்நாள் என அனைத்து விஷயங்களை உள்ளடக்கிய இன்ஜின் ஆயிலின் தரம் குறித்து தெரியுமா உங்களுக்கு? வாருங்கள் பார்க்கலாம்.

இங்கு நாம் இன்ஜின் ஆயிலின் வகை குறித்தோ அதை தயாரிக்கும் நிறுவனம் குறித்தோ பேசப்போவதில்லை, எந்த நிறுவனத்தின் இன்ஜின் ஆயிலாக இருந்தாலும் அது பல தரங்களில் வருகிறது. ஒவ்வொரு தரத்திலான இன்ஜின்ஆயில்களையும் ஒவ்வொரு தர வாகனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

நீங்கள் இன்ஜின் ஆயில் வாங்கும் போது அதில் சில நம்பர்களுக்கு இடையில் "w" என்ற குறியீடு இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? (உதாரணம்: 10w50,10w40,0w30) அது தான் இன்ஜின் ஆயிலின் தரத்திற்கான குறியீடு

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

இதில் "w" என் குறியீடு ஆங்கிலத்தில் வின்டர் என்ற வார்த்தையை குறிக்கும். இன்ஜின் ஆயில் தன் பிசுபிசுப்பு தன்மையை இழக்கு வெப்ப நிலையை தான் இந்த குறியீடு வெளிபடுத்துகிறது.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

உதாரணமாக 10w50 என்ற குறியீட்டுடன் கூடிய இன்ஜின் ஆயில்கள் 10 டிகிரி வெப்பதற்திற்கு கீழேயும், 50 டிகிரி வெப்பதிற்கு மேலேயும் தன் பிசுபிசுப்பு தன்மையை இழக்கும். 10 டிகிரிக்கு கீழே இறுகிய நிலைக்கும், 50 டிகிரிக்கு மேலே மிகவும் இளகிய நிலைக்கும் இன்ஜின் ஆயில் மாறுவதால் பிசுபிசுப்பு தன்மையை இழக்கிறது.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

நாம் காலையில் எழுந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறுகிறோம், அதற்கு காரணம் இது தான். இரவு நேரம் வாகனம் குறைந்த வெப்பத்தில் நின்றதால் இன்ஜின் ஆயில் இறுகிய நிலைக்கு மாறியிருக்கும். அது சகஜ நிலைக்கு மாற சிறிது நேரம் எடுக்கிறது. ஆனால் நமக்கு ஸ்டாட்டிங் பிரச்னை ஏற்படுகிறது.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

0w என துவங்கும் குறியீடு உள்ள இன்ஜின் ஆயில் பயன்படுத்துவோருக்கு காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் டென்சன் இருக்காது. அனால் அந்த வகையான ஆயில்களை பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கிறது.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

பெரும்பாலும் 0w என துவங்கும் இன்ஜின் ஆயில்கள் அதிக வெப்பத்தை தாங்ககூடியதாக இருப்பதில்லை. இதனால் நீங்கள் அதிக வேகமாக செல்லும் பட்சத்தில் ஏற்படும் வெப்பதால் இன்ஜின் ஆயில் பிசுபிசுப்பு தன்மையை இழந்து அதிக உராய்வு ஏற்படுத்தி இன்ஜின் ஆயுளை குறைக்கும்.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

பெரும்பாலும் அதிக வெப்பம் தாங்கும் இன்ஜின் ஆயிலை பயன்படுத்துவதே சிறந்தது. இது தான் உங்கள் இன்ஜின் செயல்பாடு மூலம் அதிக வெப்பம் வெளிபட்டாலும் அதை தாங்கி இன்ஜின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

எனினும் நீங்கள் வாங்கும் வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை பயன்படுத்துவது இன்ஜினின் வாழ்நாளுக்கு நல்லது. இன்ஜின் செயல்பாட்டிற்கேற்ப தரத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதால் அதுவே சிறந்ததாகவும் அமையும்.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

நீங்கள் இன்ஜின் ஆயிலை மாற்ற விரும்பினாலும் வாகன தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைந்த அதே தர ஆயில்களை வாங்குவது சிறந்தது. இது உங்கள் இன்ஜின் ஆயுலையும் குறைக்காமல் பாதுகாக்கும்.

இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா?

அடுத்த முறை இன்ஜின்ஆயில் வாங்கும் போது கட்டாயம் அதன் தரம் என்பதை பார்த்து வாங்குங்கள். உங்கள் வாழ்நாள் இந்த இன்ஜின் ஆயிலை பொருத்துதான் அமையும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Most Read Articles

English summary
Engine Oil Grading System Explained. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X