உடல் பாதிப்புகள் வராமல் தடுக்க கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

உடல் பாதிப்புகளை தவிர்க்க, கார் இருக்கையை சரியான கோணத்தில் அட்ஜெஸ்ட் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

இன்றைய போக்குவரத்து நெரிசலில் தினசரி வீட்டிலிருந்து அலுவலகம் சென்று திரும்புபவர்களின் நிலை குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. வேலை பளுவைவிட, போக்குவரத்து நெரிசலில் நீந்தி வீட்டிற்கு கரை சேர்வதுதான் பெரும் பளுவாக பலருக்கு மாறி போய் இருக்கிறது.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

இந்த சூழலில், கார் ஓட்டுபவர்களுக்கு பல உடல் பாதிப்புகள் வருகின்றன. முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, தலை வலி போன்றவற்றால் தினசரி கார் ஓட்டுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பாதிப்புகளிலிருந்து ஓரளவுக்கு மீள்வதற்கு காரின் இருக்கையின் அமைப்பும், அதன் கோணமும் சரியாக இருத்தல் அவசியம்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

கார் ஓட்டுவதில் சூரப்புலியாக இருப்பவர்கள் கூட ஒருகட்டத்தில் இந்த உடல் பாதிப்புகளால் சோர்வடைந்து விடுவதற்கு, அவர்கள் சரியான கோணத்தில் அமர்ந்து கார் ஓட்டாததுதான் முக்கிய காரணமாக கூற முடியும். அதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

காரில் இருக்கையை சரியாக மாற்றிக் கொள்வதற்கு முதலில் உங்களது ஓட்டுனர் இருக்கையை முழுவதுமாக பின்புறம் தள்ளிக் கொள்ளுங்கள். பின்னர், இருக்கையில் அமர்ந்து, அதனை உங்கள் வசதிக்கு ஏற்ப முன்னால் இழுத்துக் கொண்டு, 30 முதல் 40 டிகிரி கோணத்தில் இருக்கையை சாய்வாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

Picture credit: ErgonomicsSimplified

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

இருக்கையை அட்ஜெஸ்ட் செய்த பின்னர் உங்களது கால்கள் படத்தில் காட்டியவாறு இருத்தல் நன்று. பெடல்களை தாவி பிடிக்காதவாறும், முழங்கால் செங்குத்தாக இருக்காமல், படத்தில் இருப்பது போன்று ஓய்வாக இருப்பது அவசியம். கைகளும் ஸ்டீயரிங் வீலை பிடிக்கும்போது முழங்கை அதிகம் மடங்காமல் படத்தில் உள்ளது போன்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

இவ்வாறு வைப்பதன் மூலமாக அதிர்வுகள் குறைவாக தெரியும். மேலும், இடுப்பு முதுகெலும்பு பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்பு ஏற்படும். முதுகு பகுதியும், கழுத்துப் பகுதியும் கூட ஓய்வான உணர்வை தரும். ஏர்பேக்குகள் விரிவடையும்போது உடலில் காயங்களை ஏற்படுத்தாது.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

ஸ்டீயரிங் வீலையும் முழுவதுமாக கீழாக இறக்கி, பின்னர் உங்கள் கைகள் படத்தில் காட்டியவாறு இருக்கும் வகையில் அட்ஜெஸ்ட் செய்யவும். தாவி பிடித்து ஓட்டுவது போல இல்லாமல் அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

இருக்கையை சரியான கோணத்தில் மாற்றிக் கொண்டதற்கு பின்னர், அதற்கு தக்கவாறு சீட் பெல்ட் அணிந்து கொள்ளவும்.

Trending On DriveSpark Tamil:

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

அடுத்து ரியர் வியூ மிரர்களை சரியான கோணத்தில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும். காரின் பாடி தெரியாத அளவுக்கு சரியான கோணத்தில் பின்னால் வரும் வாகனங்களை பார்க்கும் விதத்தில் வெளிப்புறம் இருக்கும் ரியர் வியூ மிரர்களை அட்ஜெஸ்ட் செய்யவும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

உட்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரரில் தெளிவாக பார்க்க முடிகிறதா என்பதையும் பார்த்துவிடு காரை எடுக்கவும். சில நேரங்களில் பின்னால் பார்சல் ட்ரேயில் வைக்கப்படும் பொருட்களால் உட்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரர் மூலமாக பின்புறத்தை பார்க்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

காரில் பயணிக்கும்போது லேப்டாப் உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்களது அமரும் முறை மாறி, முதுகு வலியை ஏற்படுத்தும். எனவே, காரில் பயணிக்கும்போது ஓய்வாக அமர்ந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

ஸ்டீயரிங் வீலை பிடிக்கும் முறையும் மிக அவசியம். கடிகாரத்தில் 10 மற்றும் 2 மணியை காட்டும் இடங்களில் முற்கள் இருப்பது போன்ற நிலையை தவிர்க்கலாம். இது கை வலியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பதிலாக 9 மற்றும் 3 மணிக்கு கடிகாரத்தில் முற்கள் இருக்கும் அமைப்பை மனதில் கொண்டு ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டவும். இது ஓய்வான உணர்வை தரும்.

Picture credit: ErgonomicsSimplified

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

நீண்ட நேரம் அல்லது நீண்ட தூரம் பயணங்களின்போது காரை ஓட்டி வந்தவர்கள் சில நிமிடங்கள் காரில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொண்டு பின்னர் காரை விட்டு இறங்கவும். பாக்கெட்டில் மணிபர்ஸ் போன்றவற்றை வைத்துக் கொள்வதையும் தவிர்க்கவும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

ரிவர்ஸ் எடுக்கும்போது சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு பின்புறம் நோக்கி செலுத்தினாலும், உடல் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

நீண்ட தூரம் பயணங்களின்போது 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தை துவங்கவும். இதனால், கை, கால் வலி, முதுகுவலி போன்றவற்றின் பாதிப்பு மிகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

கார் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்வது எப்படி?

இவற்றையெல்லாம் விட கார் ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்கு, நிதானமான வேகத்தில் செல்வதே சிறந்த பயண அனுபவத்தை தரும். தலைவலி போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அதிக வேகத்தில் செல்லும்போது, அதிக கவனம் செலுத்துவதால் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
English summary
Ergonomic Tips For Driving To Avoid Health Problems.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X